வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

தொழிற்படிப்புக்கு பாரத் பெட்ரோலியம் வேலை

நிறுவனம்: பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: ஆபரேட்டர் (ஃபீல்டு)
காலியிடங்கள்: மொத்தம் 196.
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் ஐ.டி.ஐ தொழிற்படிப்பு மற்றும் தேசிய கைத்தொழில் நிறுவன சான்றிதழ்
வயது வரம்பு: 18-23 (சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு)
தேர்வு முறை: எழுத்து, திறன், மற்றும் உடல் திறன் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 6.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bharatpetroleum.com

எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: எய்ம்ஸ் எனப்படும் ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்
வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ரேடியோகிராபிக் டெக்னீஷியன், அக்கவுன்ட் ஆபீஸர் உட்பட 17 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 120
கல்வித் தகுதி: பி.எஸ்சி; எம்.எஸ்சி; பி.டெக்; பி.இ மற்றும் +2 தேர்ச்சி.
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 21-35, 21-30 மற்றும் 18-35 எனக் கேட்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்
தேதி: 6.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

+2 படிப்புக்கு இந்தியக் கடற்படை வேலை

நிறுவனம்: இந்தியக் கடற்படை
வேலை: செயிலர்ஸ் (திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்)
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: +2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (உயரத்தில் குறைந்தபட்சம் 157 செ.மீ இருக்க வேண்டும்)
வயது வரம்பு: 1.2.1996 - 31.1.2000 வரையிலான காலகட்டத்துக்குள் பிறந்தவர்களே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்
தேதி: 5.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: joinindianarmy.nic.in

கப்பல் கட்டும் தளத்தில் 231 பணியிடங்கள்!

நிறுவனம்: கோவா ஷிப்யார்ட் லிமிடெட் எனும் அரசு கப்பல் கட்டும் தளம்
வேலை: ஜூனியர் சூப்பர்வைசர், ஸ்கில்டு மற்றும் அன்ஸ்கில்டு, டீசல் மெக்கானிக், டிரெயினி உட்பட 48 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 231
கல்வித் தகுதி: டிகிரியுடன் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங்கில் டிப்ளமோ படிப்பு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பெர்சனல் மேனேஜ்மென்ட், இண்டஸ்ட்ரியல்
ரிலேஷன், லேபர் லா, லேபர் வெல்ஃபேர், சோஷியல் ஒர்க் போன்றவற்றில் டிப்ளமோ படிப்பு மற்றும் பி.ஏ சோஷியாலஜி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 28, 32, 33 என வயது வரம்பு குறிப்பிடப் பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்
தேதி: 7.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.goashipyard.co.in

எய்ம்ஸ் மருத்துவமனையில் 153 பணியிடங்கள்!

நிறுவனம்: எய்ம்ஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், போபால் கிளை.
வேலை: 1. அசிஸ்டென்ட் ப்ரொபஸர் 2. ஜூனியர் ரெசிடென்ட் 3. சீனியர் ரெசிடென்ட்
காலியிடங்கள்: முதல் வேலையில் 21, இரண்டாவதில் 50 மற்றும் மூன்றாவதில் 82 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: முதலாவதற்கு எம்.எஸ் மற்றும் எம்.டி முது
கலைப் படிப்பு. இரண்டாவதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு. மூன்றாவதற்கு எம்.டி, எம்.எஸ் மற்றும் டி.என்.பி படிப்பு
வயது வரம்பு: முதலாவது வேலைக்கு 50க்குள், இரண்டாவது வேலைக்கு 33க்குள், மூன்றாவது வேலைக்கு 33க்குள் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: முதலாவதற்கு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடக்கும்.  இரண்டாவதற்கு எழுத்தும், நேர்முகமும். மூன்றாவதற்கு நேர்முகத் தேர்வு மட்டும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhopal.edu.in

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அரசு வேலை

நிறுவனம்: பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எனப்படும் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன்.
வேலை: ஃபீல்டு மெடிக்கல் ஆபீஸர், ஜெனரல் ட்யூட்டி மெடிக்கல் ஆபீஸர் உட்பட 9 பிரிவுகளில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 72. இதில் அதிகபட்சமாக ஃபீல்டு மெடிக்கல் ஆபீஸர் வேலையில் மட்டுமே 57 காலியிடங்களும், ஜெனரல் ட்யூட்டி மெடிக்கல் ஆபீஸர் வேலையில் 5 இடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: மேற்குறிப்பிடப்பட்ட 2 வேலைகளுக்குமே எம்.பி.பி.எஸ் படிப்பு அவசியம்.
வயது வரம்பு: ஓ.என்.ஜி.சியின் வரைமுறைகளுக்கு உட்பட்டது.
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: நேர்முகத் தேர்வு 4.6.16 அன்று நடப்பதால் அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ongcindia.com

டிகிரி படித்திருந்தால் சப் இன்ஸ்பெக்டர்!

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான எல்லைக் காவல் படை
வேலை: சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 144. இதில் பொதுப்பிரிவுக்கு 93, எஸ்.சி 32, எஸ்.டியினருக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
வயது வரம்பு: 32க்குள் (சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.6.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in