இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு இல்லை



செய்தித் தொகுப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலமாகவே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தமிழகம், மகாராஷ்டிரம் உட்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது தொடர்பாக அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘சி.பி.எஸ்.இ. பாடத்துக்கும் மாநில பாடத்திட்டத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வால் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று மாநில அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நடப்பாண்டில் மட்டும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான அவசர சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இருப்பினும் இந்த அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே கையெழுத்திடவில்லை.

இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசிடம் கூடுதல் விளக்கங்களை அவர் கோரியிருந்தார். இதனால் அமைச்சர் நட்டா ஜனாதி பதியைச் சந்தித்து விளக்கங்களை அளித்திருந்தார். இந்நிலையில், பொது நுழைவுத்தேர்வுக்கான அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இந்த அவசர சட்டத்தில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டில் நுழைவுத்தேர்வு முறையில் இல்லாமல், +2 மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்.

புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் ஃபெல்லோஷிப்

முதுநிலைக் கல்வியை அமெரிக்காவில் தொடர விரும்பும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது ‘புல்பிரைட் நேரு மாஸ்டர்ஸ் ஃபெல்லோஷிப்’. அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) அமைப்பு இந்த உதவித்தொகையை வழங்குகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் முதுகலை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆய்வு, உயர் கல்வி நிர்வாகம், சர்வதேச சட்டக் கல்வி, பொது சுகாதாரம், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல், கலை மற்றும் கலாசார மேலாண்மை, பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகப் படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு துறையில், மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம். விசா, கல்விக் கட்டணம், இதர வசிப்பிட செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.6.2016. மேலும் விவரங்களுக்கு: www.usief.org.in

அக்னி ஐ.ஏ.எஸ். அகாடமியில் NEET-2017 பயிற்சி தொடக்கம்

சென்னை, மேற்கு அண்ணா நகர், கம்பர் காலனியில் செயல்படும் அக்னி ஐ.ஏ.எஸ். அகாடமி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கிவருகிறது. தேர்ந்த பயிற்சியாளர்கள், விசாலமான பயிற்சிக்கூடம் எனப் பல சிறப்புகளைக் கொண்டு செயல்படும் இந்த அகாடமியில் படித்த பலர் சிவில் சர்வீசஸ், பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று சாதித்திருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.எஃப்.ஓ.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி-குரூப் 1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4, விஏஓ  போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள், எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல், சி.ஹெச்.எஸ்.எல் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி, ஐ.பி.பி.எஸ், எஸ்.பி.ஐ, ஆர்பிஐ உள்ளிட்ட வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. இவை தவிர, ஆங்கில மொழிவளப் பயிற்சி, நேர்காணல்களை எதிர்கொள்வதற்கான ஆளுமைப் பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதற்கான NEET-2017 தேர்வுக்கான ஓராண்டு பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளுக்கு இப்போது அட்மிஷன் நடந்துவருகிறது. பயிற்சியில் சேரும் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக்கவனம் செலுத்துவதோடு அவர்களின் திறன் அறிந்து பயிற்சியளித்து, ஆன்லைன் தேர்வுகள் நடத்தி திறமையைக் கூர்தீட்டி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது அக்னி ஐ.ஏ.எஸ் அகாடமி.

SCRATCH CARD OFFER, SPECIAL OFFER DUAL COURSE OFFER என இந்நிறுவனத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 044-43533634, 8220020021, 8220020046 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்.

மீன்வளப் பட்டப்படிப்பு காலியிடங்கள் அதிகரிப்பு

பொன்னேரி அரசு மீன்வளக் கல்லூரியில், இளநிலை மீன்வளப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வளப் பல்கலையின் அங்கமாக, சென்னையை அடுத்த பொன்னேரியில், அரசு
மீன்வளக் கல்லூரி உள்ளது.

இதில், பி.எப்.எஸ்சி., எனப்படும், இளநிலைப் மீன்வளப் படிப்புக்கு, 40 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டில், 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளில் சேர, ஆன்லைன் வழியாக, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnfu.ac.in