அஜித் ஒரு ஆச்சரியம்
லட்சுமி மேனன்
‘‘போன வருஷம் எப்படி இருந்தது? இந்த வருஷம் எப்படி அமையணும்? இந்த மாதிரி சென்டிமென்ட்ஸ் எதுவும் நான் பார்க்குறதில்ல. கடந்த 2015 பர்சனலா எனக்கு வொர்க் அவுட் ஆன வருஷம். நான் நடிச்ச ‘கொம்பன்’, ‘வேதாளம்’ ரெண்டுமே ஹிட் ஆகி, எனக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கு. இந்த சந்தோஷத்தைத் தாண்டி, சென்னையின் அடைமழை மறக்க முடியாத வேதனையா இருந்தது நிஜம்!’’ - கேரளாவில் உள்ள தன் வீட்டில், பாட்டி அருகே அமர்ந்து கொண்டு பேசுகிறார் லட்சுமி மேனன்.
 ‘‘2015ல இருந்து காலேஜ் போக ஆரம்பிச்சிட்டேன். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் சேர்ந்திருக்கேன். காலேஜுக்கு முதல் நாளே நான் ஆட்டோவில்தான் போனேன். அங்கே ஃப்ரெண்ட்ஸ் என்னை ஜாலியா ராகிங் பண்ணினாங்க. இதெல்லாம் எனக்கு மறக்க முடியாத விஷயங்கள். தினமும் வாழ்க்கையைக் கொண்டாடுறது எனக்குப் பிடிக்கும். எங்க வீட்ல உள்ளவங்களோடவும், ரொம்ப நெருங்கிய நட்பு வட்டத்தோடவும் நேரம் செலவழிக்கறது எனக்குப் பிடிக்கும். இந்த நியூ இயருக்கு ஷூட்டிங் எதுவும் இல்லாததால, கேரளாவில் எங்க வீட்டில்தான் இருப்பேன். அன்னிக்கு எதுவும் ஸ்பெஷல்னு சொல்ல முடியாது. மத்த நாளைப் போல அதுவும் ஒரு நார்மலான நாள்தானே!’’
 ‘‘ஜெயம் ரவியோட ‘மிருதன்’ல ரத்தக் காட்டேரியா நடிக்கிறீங்களாமே?’’‘‘நீங்க இணையதளத்தில வந்த செய்திகளைப் பார்த்துட்டு இப்படி கேட்குறீங்க போல. அந்தப் படம் சயின்ஸ், ஹாரர் எல்லாம் கலந்த கலவை. நடிச்சு முடிச்சாச்சு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்... கேரக்டர் சஸ்பென்ஸா இருக்கட்டுமே!’’ ‘‘அஜித்தை நலம் விசாரிச்சீங்களா?’’
‘‘ஏன்... என்னாச்சு? ‘வேதாளம்’ முடிச்சதோடு சரி, அப்புறம் அவர்கிட்ட எதுவும் பேசலை. ‘வேதாளம்’ ஷூட்டிங் அப்போ அஜித் எல்லாருக்கும் பிரியாணி செஞ்சு கொடுத்தார். மட்டன் பிரியாணி. ஆனா, எனக்கு மட்டன் பிரியாணி பிடிக்காது. அதனால, ரைஸ் மட்டும் சாப்பிட்டேன். செம டேஸ்ட். இன்னொரு நாள் ஃபிஷ், பன்னீர் இதெல்லாம் சமைச்சு குடுத்தார். அவ்வளவு டேஸ்ட்டா சமைக்க, அதையெல்லாம் கத்துக்க அவருக்கு எப்படித்தான் டைம் கிடைக்குதோ. உண்மையில் அஜித் ஒரு ஆச்சரியம்!’’‘‘எப்படிப் போகுது படிப்பு?’’
‘‘ஜெயம் ரவி பட ஷூட்டிங்குக்காக படிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கேன். காலேஜ் போனால்தான் காலேஜ் ஃப்ரெண்ட்ஸுங்க கூடப் பேசுவேன், பழகுவேன். மத்தபடி அவங்ககிட்ட பேசியே ரொம்ப வாரம் ஆச்சு. ஷூட்டிங் இல்லன்னா, வீட்ல நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். உலக சினிமாக்கள்ல இருந்து, ரொமான்டிக், ஹாரர், ஃபேமிலி டிராமானு வெரைட்டியான ஆங்கிலப் படங்கள் கலெக்ஷன்ஸ் எங்கிட்ட இருக்கு. அதெல்லாம் பார்க்கவே வீட்ல நேரம் சரியா இருக்கும்!’’‘‘2016?’’
‘‘ ‘தமிழ், மலையாளத்தில்தான் படங்கள் பண்றீங்க... தெலுங்கு பண்ண மாட்டீங்களா?’னு கேக்கறாங்க. எனக்கு கிளாமர் செட் ஆகாது. ஹோம்லியைத்தான் தமிழ் ரசிகர்கள் விரும்புறாங்க. டோலிவுட்லயும் அப்படி கதைகள் வந்தால், அடுத்த வருஷம் அங்கேயும் படங்கள் பண்ணுவேன். மத்தபடி ‘ஜெமினி கணேசன்’, ‘தர்மதுரை’ படங்கள்ல நான் கமிட் ஆனதா யார்கிட்டயும் சொன்னதில்லை. அதெல்லாம் நெட்ல உள்ள செய்திகள். லைஃப்ல ஒவ்வொரு நொடியும் சந்தோஷமானதுனு நம்புறவ நான். எந்தவித எதிர்பார்ப்பும் என்கிட்ட கிடையாது. ‘இப்படித்தான் லைஃப் இருக்கணும்... அமையணும்’னு எந்தவித திட்டங்களும் போட்டுக்க விரும்பல. எதிர்பார்ப்பு இல்லனா, ஏமாற்றங்களும் இருக்காது பாஸ்!’’
- மை.பாரதிராஜா
|