நியூஸ் வே
கீர்த்தி சுரேஷ்

தெலுங்கில் முதன்முதலாக நடித்திருக்கும் படம் ‘நேனு சைலஜா’. இதன் ஆடியோ ஃபங்ஷனுக்கு செம மாடர்னாக வந்த கீர்த்தியைப் பார்த்து டோலிவுட்டே வியந்திருக்கிறது.

காஜல் அகர்வால்

மகேஷ்பாபு,  நடித்து வரும் ‘பிரமோற்சவம்’ பட  ஷூட்டிங் ஊட்டியில் நடக்கிறது. அப்போது காஜலின் அம்மா பிறந்த நாள் வர, ஊட்டியில் ஹேப்பி பர்த்டே கொண்டாடியிருக்கிறது காஜல் ஃபேமிலி!

‘தில்வாலே’

ஷாருக் கானின்  படம் புரொமோஷனுக்காக கௌரவம் பார்க்காமல் டி.வி ஷோக்களில் வந்து பங்கேற்றார் சல்மான் கான். மோதிக்கொண்டிருந்த இரண்டு கான்களின் நெருக்கத்தை பாலிவுட்டே ஆச்சரியமாகப் பார்க்கிறது. புது வருஷத்தில் இப்படி அஜித்துக்காக விஜய்யும், விஜய்க்காக அஜித்தும் இங்கு செய்வார்களா?

அஜித்தின் அடுத்த படத்தை கறுப்பு வெள்ளையில் படமாக்க தீவிரமாக யோசிக்கிறார்கள். இதற்காக அஜித் நிறைய பேரிடம் கருத்துக் கேட்கிறார். அந்தப் படத்தை விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்யக்கூடும்.

‘சிங்கம் 3’க்காக ஹாரிஸ் பரபரப்புடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். பொங்கலுக்குப் பிறகு பூஜை
யுடன் நெல்லை ஏரியாவுக்கு கிளம்புகிறார்கள்!

சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, கிரிக்கெட் போட்டி என எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாகிஸ்தான் போன நம் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, கிரிக்கெட் போட்டி என எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாகிஸ்தான் போன நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ,
தனது திறமையால் சுலபமாக பாலம் அமைத்துவிட்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டுக்குப் போன அவர், ஷெரீப்பின் அம்மாவிடம் பஞ்சாபியிலும் உருதுவிலும் சரளமாக உரையாட, இருவரும் சில நிமிடங்களில் நெருக்கமாகிவிட்டனர். மோடி கொடுத்தனுப்பிய சால்வை ஒன்றை பெற்றுக்கொண்ட ஷெரீப்பின் அம்மா, ‘‘இரு நாடுகளுக்கும் நட்பு பூக்கட்டும்’’ என வாழ்த்தினாராம்.

த்ரிஷா

‘பூலோகம்’ ரிலீஸ் குஷியில் இருக்கும் , இந்த கிறிஸ்துமஸ் ஹாலிடேவைக் கொண்டாடுவது அமெரிக்காவில். லாஸ் வேகாஸில் ‘மைக்கேல் ஜாக்சன் ஒன்’ நிகழ்ச்சியை நேரில் ரசித்திருக்கும் த்ரிஷா, நியூ இயரையும் வெளிநாட்டில் தோழிகளுடன்  கொண்டாடி விட்டு வரும் ஐடியாவில் இருக்கிறார்.

வெங்கய்ய நாயுடு

எவ்வளவு பிஸியான வேலைகள் இருந்தாலும், காலையில் பேட்மின்டன் விளையாடத் தவறுவதில்லை மத்திய அமைச்சர் . முன்பெல்லாம் கிளப்பில் போய் ஆடியவர், அமைச்சர் ஆனதும் தன் வீட்டிலேயே கோர்ட் செட் செய்து விளையாடுகிறார். வெளியூர்களில் போய் தங்கினாலும், விளையாடத் தோதான இடங்களைத் தேடிப் பிடித்துவிடுகிறார்.

தனுஷ் படத்தை அடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித் படத்தைத் தயாரிக்கிறது. ‘வேதாளம்’ சிவா இயக்குகிறார் எனத் தகவல். பொங்கலுக்குப் பிறகு பூஜை இருக்கலாம்!

அசினுக்கு ஜனவரி 23ம் தேதி திருமணம். பனி போர்த்திய டெல்லியில் திருமணம் நடக்க, பாலிவுட் வட்டாரத்துக்காக ரிசப்ஷன் மும்பையில் நடக்கிறது.

நிதிஷ்குமார்.

ஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலாகிறது. இதனால் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்படும் என கணக்கிட்டுள்ளார் மாநில முதல்வர் இதுவரை மது விற்பனை செய்துவந்த 3 ஆயிரம் கடைகளும் பிசியான சாலைகளை ஒட்டி, முக்கியமான பகுதிகளில் உள்ளன. அவற்றை இனி பால் விற்பனை மையங்களாக மாற்றி, அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு தரப் போகிறார்களாம்!

சன்னி லியோனுக்கு!

2015ம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமை கிடைத்திருக்கிறது  இவருக்கு அடுத்த இடத்தில் சல்மான்கான். மூன்றாவது இடத்தில் அப்துல் கலாம் இருக்கிறார். சன்னி லியோன் ‘நடித்த’  ‘சூப்பர் கேர்ள் ஃப்ரம் சைனா’ என்ற வீடியோ ஆல்பம், சீனாவிலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.

அண்ணனுக்காக தனுஷ் இரண்டு படங்கள் செய்கிறார். அவற்றை குறுகிய காலத் தயாரிப்பாக முடிக்க வேலைகள் நடக்கின்றன. மேலும் தன் சொந்தப் படமாக வருஷம் ஒரு படம் செய்யச் சொல்லிவிட்டாராம் தனுஷ்.

‘காஸ்மோரா’வில் நயன்தாராவும் திவ்யாவும் ஹீரோயின்கள். ஆனால், இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் கிடையாது. ‘‘மேடத்தை பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனா மிஸ் ஆகிடுச்சே’’ என ஃபீல் ஆகிறார் திவ்யா!

தமிழில் மம்மூட்டியையும், துல்கரையும் சேர்த்து நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. மணிரத்னம் அப்படி ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்திருக்கிறார்.

பாலுமகேந்திரா உலகப் புகழ்பெற்ற படங்கள், முக்கியமான சினிமா புத்தகங்கள், இலக்கிய நூல்கள் என நிறைய வைத்திருந்தார். அவை எல்லாவற்றையும் அவர் மகன் ஷங்கி பொதுமக்கள் உபயோகத்துக்குத் தரவிருந்தார். இப்போது அதை தனஞ்செயனின் சினிமா கற்றுத் தரும் BOFTA நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டார்.

நீண்ட நாட்களாகவே விடுப்பிலிருந்த இயக்குநர் அமீர், மூன்று ஸ்கிரிப்ட்களை ரெடி செய்துவிட்டார். சிம்பு, ஆர்யா, ராணா என மூன்று பேரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டார்.

சென்னையில் தன் அப்பாவுடன் ‘தங்கமகன்’ படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார் எமி ஜாக்சன். ‘‘அப்பா பிடிக்கும். ஆனால் இந்த பிளானட்லயே நான் பார்த்து பிரமிக்கற ஆளு எங்க அம்மாதான். ஐ லவ் யூ அம்மா!’’ என நெகிழ்கிறார் எமி.