ஜோக்ஸ்யோகா கிளாஸ்ல பத்மாசனம் செய்யலாம், சிரசாசனம் செய்யலாம், சிம்மாசனம், மயிலாசனம் எல்லாம் செய்ய முடியாது!
-ஜி.தாரணி, மதுரை.

என்னதான் குளத்து மீன், கடல் மீன்னு டேஸ்ட் பார்த்தாலும், விண்மீன் டேஸ்ட் என்னன்னு சொல்ல முடியுமா?
- பசியோடு, ருசியும் தெரிந்த சாப்பாட்டு ராமன் சங்கம்
- ஆர்.சீதாராமன், சீர்காழி.

‘‘தனித்துப் போட்டியிடுவேன்னு நம்ம தலைவர் சொன்னதை கட்சிக்காரங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா... எப்படி?’’
‘‘அவரை விட்டுட்டு எல்லோரும் கட்சி மாறிட்டாங்க!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘தலைவரே! எதிர்க்கட்சியிலேர்ந்து நம்ம கட்சிக்கு வர நாலு பேர் தயாரா இருக்காங்க...’’
‘‘ஓகே! உடனே இன்ஸ்டால் பண்ணிடுங்க...’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி

‘‘தலைவர் மேடையில ஏன் கோபமா இருக்கார்..?’’
‘‘வாட்ஸ்அப்ல இவரைக் கலாய்ச்சு வந்த ‘மீம்ஸ்’களை மைதானத்தைச் சுத்தி ஃப்ளெக்ஸா வச்சிட்டாங்களாம்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘அந்த டாக்டர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி...’’‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘நிறைய பேருக்கு டெத் சர்டிபிகேட் கொடுத்திருக்காரே...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘ஒரே நாய் எப்படி ரெண்டு முறை உங்களைக் கடிச்சுது..?’’
‘‘கடிச்ச நாயோட ஒரு செல்ஃபி எடுத்தேன். ரெண்டாவது முறை கடிச்சுடுச்சு..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.