வலைப்பேச்சு
@kurumbuvivek தன் வீட்டுப் பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா அடுத்து அவனோட ஆசை ஒண்ணுதான்... நம்ம சொந்தக்காரன் வீட்டு பொண்ணும் லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!
 ‘இந்த பீப்சாங் என்னோட 16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப் ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!
வெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டுபுடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க... எப்புடி வல்லரசு ஆவும்? - சக்திவேல் மருதமுத்து
@Alien420_ குழந்தைகள் கட்டுகையில் மண் வீடு மகிழ்ச்சி; பெரியவர்கள் கட்டுகையில் மண் வீடு ஏழ்மை. அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் கையேந்தா நிலையே உண்மை மக்களாட்சி!
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை... கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள். - கவிஞர் தாமரை
சட்டத்துல ஓட்டை இல்ல... ஓட்டைலதான் சட்டமே! - குமரேஷ் சுப்ரமணியம்
@sheiksikkanthar விவசாயின்னா யாருப்பா என கேட்ட மகளிடம் கூறினேன்... ‘‘நமக்கெல்லாம் சோறு போடுற சாமி’’ என்று!
வாதிப்பவர்களிடம் அமைதியும் சோதிப்பவர்களிடம் பொறுமையும் எல்லா நேரமும் வாய்த்து விட்டால், இலக்கு எளிதாகிறது! - ஐஸ்வர்யா ராகவ்
@NaiyaandiNarath பீகாரில் மதுக்கடைகள் அனைத்தும் பால் வினியோக மையமாக மாற்றப்படும் - நிதீஷ் குமார் # இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்னு நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க!
@mayilrekka இனியும் இதிலென்ன இருக்கப்போகிறதென தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டை, இன்னும் சிலருக்கான பழங்களை தன்னுள்ளே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், காபியில முக்கின பிஸ்கட் திரும்ப வராமல் காபில மூழ்கு வதுதான்! - பெரியசாமி மாதேஸ்வரன்
2015ம் ஆண்டு அமைதியாகக் கடந்தாலும், மூன்று கேள்விகளுக்கு விடை தெரியாத மர்மம் நீடித்தது... 1. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்? 2. சல்மான் கான் காரை ஓட்டினது யாரு? 3. இந்திராணி முகர்ஜிக்கு எத்தனை கணவர்கள்? # இதோ அந்த மர்மங்களுக்கு விடை... இந்திராணி முகர்ஜியோட அடையாளம் தெரியாத கணவர்தான் சல்மான் காரை ஓட்டினார்; கட்டப்பாகிட்ட பாகுபலியை கொல்லச் சொன்னதும் அவர்தான். ஏன்னா, அந்த கார் ஆக்சிடென்ட்டை பாகுபலி பார்த்துட்டார்.
டாஸ்மாக்கை வெள்ளம் விழுங்கியது. வெள்ளத்தை பீப்சாங் விழுங்கியது.பீப்பை நிர்பயா விழுங்கியது.நிர்பயாவை நியூ இயர் விழுங்கும். மன்னிக்கிறோமோ இல்லையோ… மறந்துடறோம்.
@meenammakayal ஒரே சமயத்தில் ‘‘என்ன சொன்ன’’ என்று இரு முறைக்கும் மேல் கேட்பவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்கு பதில், விட்டத்தைப் பார்த்து பேசிட்டு போயிடலாம்.
இப்ப இருக்க ரேஷன் கார்டு நான் பிளஸ் 2 படிக்கும்போது குடுத்தது. இப்ப என் பையன் ஒண்ணாப்பு போறான். நடுவுல ஆட்சிலாம் மாறி, இப்ப அடுத்த எலக்ஷனே வரப் போவுது. ஆறாவது வருஷமா இன்னும் அடித்தாள்தான் ஒட்டுறீங்க. ஏழாவது வருஷமும் ஒட்டுவோம்னு வேற இன்னைக்கி சொல்லிருக்கீங்க. என்னைக்காவது பொங்கல் சாப்ட்டு தூங்கலாம். ஏழு வருஷமா மாறி மாறி பொங்கலே சாப்டுட்டு இருந்தா எப்படி சென்ட்ராயன்ஸ்?
இந்த ஏழு உள் தாளோட இன்னும் மூணு தாள் ஒட்டிருந்தா ரெண்டு தடவ புது ரேஷன் கார்டே குடுத்துருக்கலாம். அட, அந்த ஸ்டிக்கர் ஒட்டுனதுக்கு... சரி, வேணாம்! ஏற்கனவே சில பேரை போலீஸ் தேடுதாம். நமக்கு வேற வாய்ல சனி... - பிரபல எழுத்தாளர்
பருப்பு விலை இன்னும் 220ல இருந்து குறையல. கண்டுபுடிச்ச பதுக்கின பருப்பு 75000 டன் என்னாச்சுன்னு தெரில! ஒவ்வொண்ணா போராடி அடுத்து ஜல்லிக்கட்டுக்கு போயாச்சு! - ஷர்மிளா ராஜசேகர்
எல்லா பிரச்னைகளையும் ஒரு வாட்ஸ் அப் தகவலில் முடிக்க முடிந்தால் வாழ்வு எவ்ளோ அழகா ஆகிவிடும்! - கிர்த்திகா தரன்
@chevazhagan1 நீங்கள் பணம் சம்பாதிப்பவனையும், சொத்து சேர்ப்பவனையும் மட்டுமே புத்திசாலி என்பீர்களெனில், என்னைவிட முட்டாள் எவனுமில்லை!
தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல, நாம் தாண்டும் உயரத்தைக் கூட்டுவதற்கே! - அம்புஜா சிமி
மனைவியை மடக்க சில யோசனைகள்...
1. மாமியார் விரதம் இருக்கும்போது, ‘‘உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்பை வருத்திக்கறாங்க?’’னு அக்கறையா கோபப்படணும் (கொஞ்சம் நடிங்க பாஸ்!) 2. டி.வியில நகைக்கடை விளம்பரம் போகும்போது, ‘‘அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு வாங்கணும்’’னு அவுத்து விடணும். 3. நண்பர்கள் போன் பண்ணி ட்ரீட்க்கு கூப்பிட்டாங்கன்னா, ‘‘இல்லடா, ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோயிலுக்கு போறேன்... என்னால வர முடியாது!’’னு அவங்க காதுல கேக்கற மாதிரி சத்தமா சொல்லணும். 4. ‘‘உங்க வீட்டுக்குப் போயிட்டு வரணும்... மாமா அத்தையப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு’’னு குழந்தை மாதிரி சோகமா பேசணும். 5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தே?’’னு கேக்கணும். 6. மனைவி முன்னாடி மச்சினிகிட்ட அவங்க படிப்பு, கேரியர் பத்தி பேசணும். (படிப்ப பத்தி மட்டும்தான்!) 7. செல்போன்ல வால் பேப்பரா மனைவி போட்டோவை வச்சிக்கணும். (வேற வழி இல்ல!) 8. அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்தப் பார்க்கும்போது மனசை திடமா வச்சிக்கணும். பயத்துல ‘‘அய்யோ, அம்மா’’னு பதறுனீங்கனா போச்சு! 9. அவங்க சமைச்சத சாப்பிடும்போது, மறந்து கூட முகத்த சுளிக்கக்கூடாது. 10. கோவமா பூரிக் கட்டையால அடிச்சாங்கன்னா முதல் அடியிலேயே சுருண்டு விழுந்து துடிக்கணும். மீறி ஸ்பார்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா அவ்வளவுதான்!
இந்தியாவில் தப்பு செய்யணும்னா, ஒண்ணு 18 வயசுக்குள்ளே செஞ்சுடணும். இல்லை, நிறைய காசு சம்பாதிச்சுட்டு செய்யணும்... # நிர்பயா வழக்கு; சல்மான் கான் வழக்கு! - பச்சை தங்கம்
தமிழகத்தில் கடந்த 10 நாட்களின் ஹாட் டாபிக்: ஜெயலலிதா, சிம்பு, அனிருத், இளையராஜா. இதுல என்ன விசேஷம்னா, இவங்க நாலு பேருமே சினிமாக்காரர்கள்... - அம்புஜா சிமி
@madhupriyah வாழ்க்கை நம்மள எட்டி எட்டியே உதைக்கும். நம்ம சூழ்நிலைல உதைய வாங்கிட்டு, வாய்ப்பு வர்றப்ப திருப்பி ஒரு உதை கொடுத்துட்டு போயிக்கிட்டே இருக்கணும் :-)
ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை பீரோ சைஸுக்கும் சிக்ஸ் பேக்ல இருக்குற ஆணை ஃபேமிலி பேக்குக்கும் மாற்றுகிறது திருமணம்! - செல்லி சீனிவாசன்
@Alexxious கடலில் இருக்கும் மீன்கள் ஒரு சங்கம் ஆரம்பித்தன... ‘வறுக்கப்படாத வாலிப சங்கம்’!
சாராயம் போதைப்பொருள் இல்லை - பஞ்சாப் சுகாதார மந்திரி சுர்ஜித் குமார் ஜெயானி சர்ச்சை பேச்சு. # எண்டோசல்பான் கூட சத்து டானிக்தான், வாங்கி குடிச்சு பாருங்க மந்திரியாரே... - இளையராஜா அனந்தராமன்
ஜப்பான் தொழில்நுட்பத்துடன் குமரி மாவட்டத்தில் மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து சோதனை ஓட்டம்!
விடுறா, பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் - நிர்பயா விடுறா, போதையில தெரியாம செஞ்சுட்டான் - சல்மான்கான் # புடிறா அவன, ஹெல்மட் இல்லாம போறான்...
@deebanece எழும் வரை அம்மாவின் ‘சுப்ரபாதம்’... எழுந்த பிறகு அப்பாவின் ‘பீப் சாங்’!
அப்பாடா, மக்கள் சிம்பு, அனிருத், இளையராஜானு திரும்பிட்டாங்க. போட்டு வைத்த திசை திருப்பும் திட்டம் ஓகே கண்மணி…
@arattaigirl நான்லாம் ராசிபலன் பாக்கறதே, ‘அன்பும், புத்தி சாதுர்யமும் கொண்ட’ங்கற 4 நல்ல வார்த்தைய படிச்சு சிலிர்த்துக்கத்தான்!
@Writer_Samy இப்ப எல்லாம் வீட்டுல விட ஹோட்டல்லதான் குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள்.
2015ல் வாட்ஸ்அப்பில் ‘தாங்களாகவே முன்வந்து’ வாய்ஸ் நோட் அனுப்பி ‘வைரல்’ ஆனவர்கள்... ‘கொங்கு’ யுவராஜ், ஹரஹர மகாதேவகி சுவாமிகள், தல ரசிகை ப்ரியா, அம்மா! - எழிலன் எம்
வெள்ளத்தில் ஸ்டிக்கர் ஒட்டியதை சிம்புவின் ‘பீப்’ பாடல் கவ்வும்; இறுதியில் மக்களின் மறதியே வெல்லும்! - இளையராஜா அனந்தராமன்
@writernaayon எதனாலெல்லாம் கேன்சர் வரும் என்ற லிஸ்ட்டில் உள்ளதைவிட, எதனாலெல்லாம் கேன்சர் வராது என்பதிலுள்ள எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்!
@ThePayon இருளில் நம்மைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள் / அடை மழைக் காலத்தில் எங்கே தொலைகின்றன?
@jebz4 ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்துல கருணாஸ் ‘‘நான் அம்பானி ஆவேன்’’னு சொல்றதும் அன்புமணி ராமதாஸ் ‘நான் முதல்வர் ஆவேன்’னு சொல்றதும் ஒண்ணு!
@sowmya_16 24 மணி நேரம் கொண்ட நாளிலே ஒன்றரை மணி நேரம்தான் நல்ல நேரம் என்று இருக்கையில், வாழ்க்கையில் மட்டும் எப்படி எப்போதும் சந்தோஷம் மட்டுமே இருக்கும்?
|