சொந்தக் காசில் சூனியம்!மழை, பனி, வதைக்கும் நோய்களிலிருந்து எளிதில் தப்பிக்க சரியான தருணத்தில் வழி சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டீர்கள். வாழ்த்துகள்!
- ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சென்னையை உலுக்கிய பெருமழையில் அறிவுச் செல்வங்களாகிய புத்தகங்களும் தப்பவில்லை என்று அறிந்ததும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது!
- முனைவர். இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘பொறுக்கித்தனம் காட்டுவதுதான் ஹீரோயிஸமா?’ என ‘பீப் சாங்’கைக் கண்டித்த கட்டுரை செம சூடு! சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான் போல!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இந்த வார குங்குமம் அட்டையோ ‘புளு’... தமன்னாவின் டிரஸ்ஸோ ‘புளு’... மொத்தத்தில் எங்களது கண்களுக்கோ குளு... குளு... குளு..!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை

எருமை மாடு சைஸ் உள்ள நாய் எடுத்ததுக்கெல்லாம் பயப்படுவது உண்மையிலேயே ‘விநோத ரஸம்’தான். கூடவே, அந்த ‘நாய்’ சேகருக்கு ‘வைகைப் புயல்’ பன்ச் வெரி நைஸ்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அக்காவின் கணவர் என்றாலும் அஜித்தை சீனியர் நடிகராகவே பாவித்து ஷாம்லி பேசியிருப்பது குட். ஆனாலும் அஜித் ரசிகர்கள் அவருக்கு மரியாதை தருவது வெரி குட்!
- தர்மலிங்கம், கும்பகோணம்

‘அழுதாலும் அழகு சிரித்தாலும் அழகு’ கட்டுரையில் சுரேஷ்பாபுவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் கவித்துவம்! அனைத்துமே
அழகின் உச்சம்!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

குற்றவாளிக்குக் கூட, ‘சிறை மீண்ட செம்மலே’ என்று பட்டம் கிட்டுகிறது. நாஞ்சில் நாடன் குறிப்பிட்டது போல பட்டங்களும் அதிகம், பரிந்துரைக்கும் பட்டியல்களும் நீளம்தான்!
- சிவமைந்தன், சென்னை-78.

திருமண அழைப்பிதழில் டெங்கு விழிப்புணர்வு என்ற ஐடியாவே அருமை. பலரும் தங்கள் குடும்ப விசேஷங்களில் இந்த ஐடியாவை செயல்படுத்தினால் எல்லா விழிப்புணர்வும் பெருகும்!
- ஆறுமுகம் ஆண்டி, திருப்பத்தூர்.

‘கிரகங்கள் தரும் யோகங்கள்’ பகுதி மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. வாரா வாரம் குறிப்பெடுத்துக் கொள்கிறேன். கிரகங்கள் இன்னும் வேகமாகச் சுழலட்டும்!
- ஆர்.செல்வி ராஜவேல், மஞ்சக்கொல்லை.

வாரா வாரம் இந்திரா சௌந்தர்ராஜனின் மர்மத் தொடர் பதைபதைப்பு, திகில், திகைப்பு அனைத்தும் ஊட்டுகிறது. ஓவியர் ஸ்யாமின் தூரிகை, தொடரை மேலும் மெருகூட்டுகிறது!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.