தத்துவம் மச்சி தத்துவம்‘‘இனிமேல் நீங்க தினமும் ஒரு வேளைதான் சாப்பிடணும்...’’
‘‘ஏன் டாக்டர்..?’’‘‘எனக்கு உங்ககிட்ட இருந்து நிறைய ஃபீஸ் வர வேண்டி இருக்கே..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

கோவைப் பழத்தை கோவையில வாங்கலாம். அதே பழத்தை மதுரையில வாங்கினா ‘மதுரைப்பழம்’னோ, திருச்சியில வாங்கினா ‘திருச்சிப்
பழம்’னோ சொல்ல மாட்டாங்க. அங்கேயும் கோவைப்பழம்னுதான் சொல்லுவாங்க!
- ஜி.தாரணி, மதுரை.

‘‘அந்த கோச்சிங் சென்டர்ல ஒரே கூட்டமா இருக்கே... என்ன சொல்லித் தர்றாங்க?’’
‘‘தலைவர்கள் மேல குறி தவறாம செருப்பு வீசவாம்...’’
 - பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘திருடினவன் மேல நீங்க ஏன் புகார் தரலை..?’’
‘‘பிராயச்சித்தமா என் பொண்ணை வரதட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டான் சார்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் டாக்டரே ஆனாலும், அவரால நிவாரணத்துக்கு எல்லாம் மருந்து போட முடியாது!
- மருத்துவருக்கே மருந்து போடும் அளவுக்கு ரணகளமாக யோசிப்போர் சங்கம்
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘இந்த ஸ்டேஷனில் யாரையாச்சும் உனக்குத் தெரியுமா..?’’
‘‘தெரியாது சார்..!’’
‘‘வேற எப்படி நீ திருடன்னு நம்பி மாமூல் வாங்கறது..?’’
- எம்.ஹெச்.இக்பால், கீழக்கரை.

‘‘தலைவர் பொதுக்கூட்ட மேடையில பேசுறதுக்குப் பதிலா ஏன் பாடுறாரு?’’
‘‘யாரோ ஒருத்தர் துண்டு சீட்டுல, ‘பேசுனா குண்டு வைப்பேன், அதனால பாடு’ன்னு எழுதிக் கொடுத்திருக்காராம்!’’
- ஆர்.மணிவண்ணன், பனைமேடு.