இருள் ராஜ்ஜியத்தில் மிரட்டும் கமல்!
‘தூங்காவனம்’ ஸ்பெஷல்
‘‘உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமான வேலைன்னா, அது கமல் சாரை இதுவரை பார்க்காத மாதிரி காண்பிக்கிறதுதான். இவர் பண்ணாத கேரக்டர்னு ஒண்ணு இல்லை. ஆனா, இதுவரை அவர் படங்கள்ல நாம என்னவெல்லாம் பார்த்து ரசிச்சோமோ, அந்த சின்னச் சின்ன அழகான விஷயங்களை எல்லாம் இதில் தொட்டிருக்கோம். ‘தூங்காவனம்’ கமல் சாரோட லுக், அக்ஸசரீஸ் எல்லாமே செம ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு கேரன்டியா சொல்ல முடியும்!’’ - திருப்தியாகப் பேசுகிறார் ராஜேஷ் ம.செல்வா. முதல் படத்திலேயே கமலை இயக்குபவர்.
‘‘எனக்கு எல்லாமே கமல் சார்தான். ஏழு வருஷமா அவர்கிட்ட அசிஸ்டென்டா டிராவல் பண்ணியிருக்கேன். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை, பிரச்னைன்னாலும் உடனே அவர்கிட்ட சொன்னா அதுக்கு கரெக்ட்டான தீர்வு கிடைக்கும். இந்தப் படத்தோட ரெண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ, என்னோட அசிஸ்டென்ட் கமல் சார்கிட்ட ஏதோ கேட்க, ‘நீங்க டைரக்டர்கிட்ட பேசிக்குங்க’னு சொல்லியிருக்கார்.
அவர் வாயால என்னை டைரக்டர்னு சொன்ன தருணத்தை பெருசா நினைக்கறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, எனக்கொரு கடவுள்னா அது கமல் சார்தான். இந்தப் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததே, எனக்குக் கிடைச்ச வரம். அந்த வரத்தை நல்லபடியா காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன்’’ - நம்பிக்கை மின்னுகிறது ராஜேஷின் வார்த்தைகளில்!‘‘எப்படி வந்திருக்கு ‘தூங்காவனம்’?’’
‘‘எப்படிச் சொல்றது... வெறுமனே ‘நல்லா வந்திருக்கு’ன்னு சொன்னா அது ரொம்பக் கம்மி. பெரிசா எதுவும் சொல்லி மார்தட்டிக்கவும் விரும்பல. ஆனா, எக்கச்சக்க எக்ஸ்பீரியன்ஸ் கொண்ட டெக்னீஷியன்களே அசந்து பாராட்டுற அளவுல வந்திருக்கு. ‘தூங்காவனம்’னு டைட்டில் கவிதையா இருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர். தூக்கமின்றி வேலை செய்யிற சிலரைப் பத்தின கதை.
இது ராத்திரியில நடக்கற கதைன்னு நெட்ல எழுதறாங்க. இல்லவே இல்ல. ஒருநாள் விடியல்ல இருந்து அடுத்த நாள் காலை வரை நடந்து முடியுது. தமிழ், தெலுங்கில் ஒரே டைம்ல ரெடி பண்ணியிருக்கோம். தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்ஜியம்’, அதாவது ‘இருள் ராஜ்ஜியம்’னு அர்த்தம். பிரகாஷ்ராஜ், த்ரிஷா, மதுஷாலினி, ஆஷா சரத், சம்பத், கிஷோர், உமா ரியாஸ்னு ஒவ்வொருத்தருக்குமே ஒரு கதை இருக்கு. படத்தோட ஒளிப்பதிவாளர் ‘விஸ்வரூபம்’ சானு ஜான் வர்கீஸ், கமல் சாரோட கேமரா மேன். இந்தப் படத்தோட மிகப்பெரிய இன்னொரு தூண் அவர். ஒரு ஷாட் சொன்னால், ரெண்டாயிரம் கேள்வி கேட்பார்.
எனக்கு அவரை கன்வின்ஸ் பண்ணினா, மொத்த ஆடியன்ஸையும் கன்வின்ஸ் பண்ணின மாதிரி. அப்படி ஒரு இன்வால்வ்மென்ட். ‘ஷான் மொகமத் எடிட் பண்ணணும், ஜிப்ரான் மியூசிக், பிரேம் கலை, ஷோபி டான்ஸ்’னு யோசிச்சு வச்சிருந்தேன். எல்லாருமே கிடைச்சிருக்காங்க. இந்தப் படத்துல எனக்கொரு அண்ணன் கிடைச்சிருக்கார். அவர், எழுத்தாளர் சுகா. யூகி சேதுவை காமெடியனாத்தான் பார்த்திருப்போம். இதுல வேற ஆளா பார்க்கலாம். கௌதமி மேம் காஸ்ட்யூம்ஸ் பண்ணி யிருக்காங்க!’’‘‘என்ன சொல்றார் கமல்?’’
‘‘கமல் சார் ஹேப்பி. எடிட்டிங் முடிச்சிட்டு, அவர்கிட்ட போட்டுக் காட்டினேன். எதுவுமே சொல்லலை. அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே பெரிய பாராட்டு கிடைச்சதா அர்த்தம்! அவர்கிட்ட நாம பேசணும்னாலே, கொஞ்சம் விஷய ஞானம் வேணும். அவருக்குத் தெரியாத விஷயங்கள் எதையாவது நாம சொல்லணும்னு எதிர்பார்ப்பார்.
அப்படிச் சொன்னால்தான் அவருக்குப் பிடிக்கும். நாம சொல்ற விஷயத்துல இருந்து இருபது மடங்கு கூடுதலா அவர் சொல்வார். அவர்கிட்ட இருந்து பத்து பர்சன்ட் கத்துக்கிட்டாலே பெரிய ஃபிலிம் மேக்கர் ஆகிடலாம். படத்துல ஒரு குட்டிப் பையன் சாரோட காம்பினேஷன்ல நடிச்சிருக்கான். அவனுடைய ஆக்ஷனுக்காக சார்கிட்ட இன்னொரு டேக் கேட்டபோது கூட எதுவும் சொல்லாமல் பண்ணிக்கொடுத்தார்!’’
‘‘த்ரிஷா..?’’‘‘நான் அவங்களோட ஃபேன். ‘மன்மதன் அம்பு’வில் அவங்களோட வொர்க் பண்ணியிருக்கேன். ‘நான் உங்களை நிச்சயமா டைரக்ட் பண்ணுவேன்’னு அவங்ககிட்டேயே சொல்லியிருக்கேன். அவங்களை அவ்ளோ பிடிக்கும். இந்தப் படத்துல த்ரிஷா நடிச்சா நல்லா இருக்கும்னு கமல் சார்கிட்ட சொன்னதும், உடனே த்ரிஷாகிட்ட பேசி கால்ஷீட் வாங்கினாங்க. த்ரிஷா செட்ல ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஆனா, புரொடக்ஷன்ல நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் அப்டேட் பண்ணி வச்சிருப்பாங்க. இதுவரை அவங்க பண்ணாத ரோல் இது!’’
‘‘கமலை இயக்கின அனுபவம் எப்படி இருந்தது?’’‘‘பரவசம். ஒரு புதுப்பட இயக்குநர், கமல் சார் படம் பண்ற மாதிரி இல்லை இது. அவரோட ஏழெட்டு வருஷமா இருக்கேன். என் பூர்வீகமே சென்னைதான். எம்.எஸ்சி விஸ்காம் முடிச்சுட்டு 2008ல ‘மர்மயோகி’ படத்தில் வேலை செய்யிறதுக்காக கமல் சாரை சந்திக்கற வாய்ப்பு கிடைச்சது. அதுல இருந்து சாரோட இருக்கேன். படத்தோட ஸ்கிரிப்ட்ல அவர் ஒரு விஷயம் எழுதியிருந்தார்னா, அதை எக்ஸிகியூட் பண்ணின அனுபவம் எனக்கு இருக்கு. ஸோ, இப்போ கிடைச்சிருக்க வாய்ப்பு ஒரு கூடுதல் பொறுப்பு தானே தவிர, பயமில்லாம சாரோட வொர்க் பண்ணியிருக்கேன்.
நான் எந்த விதத்திலும் நெர்வஸ் ஆகிடக் கூடாதுன்னு அவரும் ரொம்பத் தீவிரமா கவனிச்சுக்கிட்டார். ‘மன்மதன் அம்பு’, ‘உத்தம வில்லன்’, ‘விஸ்வரூபம் 1, 2’னு அவரோட பெரிய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். அதனால நிறைய ஸ்டார்ஸை நடிக்க வச்சது கூட சிரமமா இல்ல. சில தப்பான ப்ராஜெக்ட்ஸ் பண்ண மும்முரமா முயற்சி பண்ணிட்டிருந்தப்போ, கமல் சார் எனக்கொரு வாத்தியாரா இருந்து, கண்டிச்சார். அவர் எனக்கு படம் கொடுக்கணும்னு முடிவானபோது இந்த ஆக்ஷன் த்ரில்லர் கிடைச்சது!’’‘‘38 நாட்கள்ல மொத்தப் படத்தையும் எப்படி முடிச்சீங்க?’’
‘‘அப்படியெல்லாம் கிடையாது. அதுக்கும் மேல ஆச்சு. ஐதராபாத், சென்னைன்னு மாறி மாறி படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இப்படியொரு படத்துக்குத் தேவையான காலம்தான் ஆச்சு. படத்தோட தயாரிப்பாளர் சந்திரஹாசன் சார்... எக்ஸிகியூட் பண்ணியிருக்குற புரொடியூஸர்ஸ் ‘வைட் ஆங்கிள் ஃபிலிம்ஸ்’ கொடுத்தது முழு சுதந்திரம். இப்படி ஒரு ஐடியல் சிச்சுவேஷன், என்னை மாதிரி புது இயக்குநருக்கு அமையறதெல்லாம் கனவுதான்!’’
- மை.பாரதி ராஜா
|