வாட்ஸ்ஆப் வாவ்!
வாட்டமா இருக்குற நம்ம மனசை மாத்தி தேத்தி, அதுக்குள்ள 1000 வாட்ஸ் எல்.இ.டியை எரிய விடுறது வாட்ஸ்ஆப் ஜோக்ஸ்தான். அப்படி சில ஆசம் ஃபார்வேர்ட்ஸ்...
இந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி ?
இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அப்போது மூன்றாவது ஆசாமி ஒருவன் வந்து இருவரையும் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன’ எனக் கடந்து போனால்... அது மும்பை!
இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மூன்றாமவன் ஒருவன் வந்து அவர்களை சமாதானப்படுத்த முயல, இருவரும் சேர்ந்து அவனை மொத்து மொத்தென்று மொத்தினால்... அது சென்னை.
இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து ‘‘இங்க சண்டை போடாதீங்கடா, வேற எங்கயாச்சும் போய்த் தொலைங்க’’ என்றால்... அது பெங்களூரு. இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மூன்றாவது ஆசாமி ஜில்லென பீர் பாட்டில்களோடு அங்கு வந்து கலக்க, மூவரும் குடித்து கும்மாளம் அடித்து நண்பர்களாக வீடு திரும்பினால்... அது நிச்சயம் கோவா! இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கோபம் தீராமல் இருவருமே தனித் தனியாக போன் போட்டு அடியாட்களை அழைக்க, சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே 50 பேர் சண்டையிட்டுக்கொண்டால்... கண்டிப்பாக அது பஞ்சாப்.
இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மூன்றாமவன் வந்து அதைவிடக் கோபமாகி அந்த ரெண்டு பேரையும் சுட்டு விட்டுப் போனால்... அது பீகார்! இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இரண்டு பேரின் ஊர்க்காரர்கள், ஜாதிக்காரர்கள் என பெரும் கூட்டமே சேர்ந்து அது கலவர பூமியானால்... நீங்கள் இருப்பது ஆந்திராவில் இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதைப் பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட, மூன்றாமவன் அங்கு வந்து சத்தமில்லாமல் ஒரு டீக்கடை திறந்துவிட்டால்... அட, அது நம்ம கேரளா சாரே!
மனைவி என்பவள் டி.வி மாதிரி... கேர்ள் ஃபிரண்ட் என்பவள் மொபைல் மாதிரி...
* டி.வி உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா மொபைல் எப்பவுமே புடிக்கும். * டி.வியை ஃப்ரீயா யூஸ் பண்ணிக்கலாம்... ஆனா, மொபைலை சார்ஜ் போடலைன்னா, டாப் அப் பண்ணலைன்னா அவ்வளவுதான்! * டி.வி பெரிசா பல்லக் காட்டும். பழசா இருக்கும்... ஆனா, மொபைல் அழகா ஸ்லிம்மா இருக்கும். * டி.விக்கு பராமரிப்பு செலவு கம்மி. ஆனா மொபைலுக்கு அப்படி கிடையாது. உங்க பர்ஸுக்கு சாவுமணி அடிக்காம விடாது. * டி.விக்கு ரிமோட் இருக்கும். ஆனா மொபைலுக்கு கிடையாது (புரிஞ்சுக்கோங்க!). * முக்கியமா மொபைலுக்கு ரெண்டு வகையான யூஸ் இருக்கும்... ஒண்ணு நீங்க பேசலாம், மற்றொன்று கேட்கலாம். ஆனா, டி.வியில் நீங்க பேச முடியாது. அது சொல்றதைத்தான் கேட்கணும்! * கடைசியா ஒண்ணே ஒண்ணு... டி.வி.யில வைரஸ் கிடையாது; ஆனா மொபைல்ல வைரஸ் உண்டு! So, be careful!
கடவுள் ஒருநாள் ஒரு மனிதனின் Memory அனைத்தையும் delete செய்தார். ‘‘உனக்கு ஏதாவது ஞாபகத்தில் இருக்கா?’’ என அவனிடம் கேட்டார். அவன் உடனடியாக அவன் மனைவி பெயரைச் சொன்னான்.கடவுள் சொன்னார்... ‘‘சிஸ்டம் ஃபுல்லா Format அடிச்ச பிறகும் வைரஸ் போக மாட்டேங்குது!’’
ஒரு மென்டல் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் பத்திரிகையாளர்... ‘‘சார், ஒரு பேஷன்ட்டை அட்மிட் பண்றதுக்கு முன்னாடி அவர் பைத்தியமா, இல்லையான்னு எப்படி சோதிப்பீங்க?’’ ‘‘ஒரு பாத் டப் முழுக்க தண்ணியை நிரப்பி வைப்போம். சந்தேகமான நபர்கிட்ட ஒரு டீஸ்பூன், ஒரு டம்ளர், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்துட்டு, அந்த பாத் டப்பை காலி பண்ணச் சொல்லுவோம்.’’ ‘‘ஓ, நார்மல் மனுஷங்கன்னா பக்கெட்டை யூஸ் பண்ணுவாங்க... அப்படித்தானே?’’ ‘‘இல்ல, நார்மல் மனுஷங்க பாத் டப்போட கீழே இருக்கற டிரெய்ன் ப்ளக்கைப் பிடுங்குவாங்க. நீங்க 39ம் நம்பர் பெட்டுக்கு போங்க, கொஞ்சம் செக்கப் பண்ண வேண்டியிருக்கு!’’
பொதுவான பொய் கள்
டீக்கடைக்காரர்: இப்ப போட்ட வடை சார்! மெடிக்கல் ஷாப்: பேருதான் வேற... இது அதைவிட நல்ல மருந்து! பள்ளி செல்லும் குழந்தை: வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா! ரியல் எஸ்டேட் ஏஜென்ட்: பக்கத்துலயே ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது... காய்கறிக் கடையில்: காலையில பறிச்ச காய்தான்! சேல்ஸ் ரெப்: இன்னையோட இந்த ஆஃபர் முடியுது சார்! பஸ் கண்டக்டர்: வழியில எங்கயும் நிக்காது. பாயின்ட் டு பாயின்ட்! நண்பன்: உனக்கு கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன் மச்சி!
ஓவியங்கள்: ஹரன்
|