நியூஸ் வே



பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸின் ‘அகிரா’விற்குப் பிறகு, மீண்டும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார் ராய்லட்சுமி. படத்தின் பெயர், ‘ஜூலி 2’. இது அவரின் 50வது படம். ஸ்பெஷலாக பிகினி அணிந்து கிளாமரில் கலக்கு கிறார் இதில்!

பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கிய ‘சிங் இஸ் பிளிங்’ படத்தின் ரிலீஸ் ஹேப்பியில் இருக்கிறார் எமி ஜாக்‌ஸன். மும்பையில் அதன் புரொமோஷனில் கலக்கிய எமி, இப்போது ‘கெத்து’ ஷூட்டிங்கிற்காக கோவா சென்றிருக்கிறார். இந்தியாவில் எமிக்கு ரொம்பப் பிடித்த இடம் கோவாதானாம்.

புகழ்பெற்ற உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மாண்டோவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இருக்கிறார், நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ்! இதற்காக, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மாண்டோவின் வீட்டுக்குச் சென்றவர், அவரது குடும்பத்தினரை சந்தித்து வந்திருக்கிறார்.

திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற வடக்குநாதன் கோயில் இந்த ஆண்டிற்கான யுனெஸ்கோ பழமைச் சின்னங்கள் பராமரிப்புக்கான ஆசியா பசிபிக் விருதை வென்றிருக்கிறது. சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் சுவர் சித்திரங்கள், சிலைகள், மரவேலைகள் அனைத்தும் இன்று வரை அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தச் சிறந்த பாதுகாப்பு முயற்சிக்காகவே இந்த விருது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பின்னணிப் பாடகராகியிருக்கிறார், `மீருதியா கேங்ஸ்டர்ஸ்’ என்ற இந்திப் படம் மூலம்! இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சோயிப் அகமது, ரெய்னாவின் குடும்ப நண்பர். அவரின் வேண்டுகோளும், புது மனைவி பிரியங்காவின் ஊக்கமுமே ரெய்னாவை பாட வைத்திருக்கிறது. ‘நீ கிடைத்தால், எல்லாம் கிடைத்த மாதிரி’ எனும் பொருளில் `து மிலி... சப் மிலா...’ என ஆரம்பிக்கிறது அந்த மெலடி மெட்டு!

எடை குறைத் ததும் கை மேல் பலன் நமீதாவுக்கு. மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘புலிமுருகன்’ படத்தில் நடிக்கிறார்.  தமிழில் பெரிய ப்ராஜெக்ட்
ஒன்றுக்காக நமீ இப்போ வெயிட்டிங்!

நானும் ரவுடிதான்’ பாடல் ஷூட்டோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. கடைசி நாளில் டான்ஸர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முக மலர்ச்சியுடன் அவர்களோடு போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் நயன்தாரா.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், சமீபத்தில் லக்னோ அருகே ஒரு கிராமத்துப் பள்ளிக்கு விசிட் அடித்திருக்கிறார். `‘நம் முதல்வர் பெயர் என்ன?’’ என அவர் குழந்தைகளைக் கேட்க, அதற்கு ‘‘மோடி!’’ என்று பதில் வந்திருக்கிறது. அதிர்ந்து போன டிம்பிள், இப்போது மாதம் மூன்று
பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து கல்வித் தரத்தை ஆய்வு செய்யக் கிளம்பியிருக்கிறார்.

மனித இனத்தில் ஜீனியஸ்கள் என மதிப்பிடப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் இருவரையும் விஞ்சிவிட்டாள், இங்கிலாந்தில் வசிக்கும் 12 வயது இந்திய  வம்சாவளிப் பெண்ணான லிடியா செபாஸ்டியன். மனிதர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடும் `மென்சா’ ஐ.க்யூ தேர்வில் லிடியா பெற்றது 162 மதிப்பெண்கள். ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங் ஆகியோரின் ஐ.க்யூ 160. ‘‘இந்தத் தேர்வை எழுத சில நிமிடங்களே எடுத்துக்கொண்டேன்’’ என்கிற லிடியா, ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஏழு பாகங்களையும் மூன்று தடவை படித்திருக்கிறாளாம்!

அஜித், ஜெயம் ரவி படங்கள் என கைவசம் வைத்திருக்கும் லட்சுமி மேனன், வித்தியாசமான லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட் பண்ணியிருக்கிறார்.

மும்பை பிசினஸ் மேன் முஸ்தஃபா விடம் காதலில் விழுந்தது பற்றி மனம் திறக்க ஆரம்பித்திருக்கிறார் பிரியாமணி. ‘‘ஒரு செலிபிரிட்டி கிரிக்கெட் டோர்னமென்ட்லதான் முஸ்தஃபாவைப் பார்த்தேன். நட்பு காதலாச்சு. காதல் கல்யாணம் வரை வந்திருக்கு!’’ என மகிழ்கிறார் பிரியாமணி.

இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது, மும்பை பிரீச் கேண்டி கடற்கரையில் இருக்கும் லிங்கன் ஹவுஸ். மகாராஜா ஒருவரின் அரண்மனையாக இருந்த இதை அமெரிக்க அரசு தனது தூதரகமாக வைத்திருந்தது. இந்த 50 ஆயிரம் சதுர அடி மாளிகையை 750 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார், மருந்து தொழிலதிபர் சைரஸ் பூனாவாலா.   

இந்தியர்கள் ஒன்று, தலைவர்களை கடவுளாகக் கொண்டாடுகிறார்கள் அல்லது வில்லன்களாக சித்தரிக்கிறார்கள்!’’ என பொங்கியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.  அவரின் சமீபத்திய புத்தகம் நரசிம்ம ராவ் காலத்து பொருளாதார மறுசீரமைப்பை அற்புதம் எனப் பாராட்டுகிறது. அது குறித்து அவர் அளித்த பேட்டியிலேயே மேற்படி பொருமல்!

முன்னாடியெல்லாம் மீடியாக்கள்ல என்  பட விமர்சனங்களைப் பார்த்தா ‘இப்படியெல்லாம்  எழுதறாங்களே’ன்னு கஷ்டமா இருக்கும். நாம நல்ல படம் கொடுத்தா, அவங்க  நல்லா எழுதத் தயார்னு ‘தனி ஒருவன்’  பாராட்டை வச்சு புரிஞ்சுக்கிட்டேன்!’’ என நெகிழும்  ‘ஜெயம்’ ரவி, மனைவி ஆர்த்தியுடன் மாலத்தீவு சென்று வந்திருக்கிறார்.