ஜோக்ஸ்



தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மீன் நல்லா நீந்தும்னாலும், அதை நீச்சல் போட்டிக்கு எல்லாம் அனுப்ப முடியாது!
- நீச்சல் அடிக்கும் பெண்களை ரசிக்க மட்டுமே குளத்த்துக்குப் போவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘போன வாரம் வந்தபோது உங்க வீட்டு நாய் என்னைப் பார்த்து வாலாட்டுச்சு. இப்ப ஏன் என்னைப் பார்த்து குரைக்குது..?’’
‘‘போன வாரம் நீங்க எனக்குக் கடன் கொடுக்க வந்தீங்க. இந்த வாரம் நீங்க கடனைத் திருப்பிக் கேட்க வந்திருக்கீங்களே, அதான்!”
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் பண்ற பந்தாவுக்கு அளவே இல்ல...’’
‘‘என்ன பண்ணார்?’’
‘‘செல்போன்ல ரிங் டோன் வெச்சுக்க இமான்கிட்ட ட்யூன் கேட்டிருக்கார்!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘தலைவரே... சொன்னா கேளுங்க! ‘களி’ நல்லா இல்லேன்னு சொல்லி எல்லாம்
ஜெயில்ல இருந்து வெளி
நடப்பு பண்ணக்கூடாது...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கிற மாதிரி கனவு வருது டாக்டர்...’’
‘‘இந்த மருந்தை சாப்பிடுங்க... உடனே ஜாமீன் கிடைக்கிற மாதிரி கனவு வரும்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
‘‘இன்னைக்கு தொண்டர்கள் அவருக்குப் பிடிச்ச செருப்பா வீசியிருக்காங்க!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அன்பார்ந்த பெரியோர்களே... தாய்மார்களே...’’‘‘திரும்பி நின்னு பேசுங்க தலைவரே! நாங்க
எல்லாம் மேடைலதான் இருக்கோம்.’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.