ஹீரோ



காமெடி கேரக்டர்ஸ்தானே... அதனால சினிமாவில நடிக்கட்டும், போகட்டும்னு விட்டுட்டேன். இப்ப ஹீரோவா நடிக்கப் போறேன்ங்கறீங்க. நான் இதுக்குச் சம்மதிக்கவே மாட்டேன். ஹீரோன்னா ஹீரோயினைக் கட்டிப் பிடிச்சு நடிக்க வேண்டியிருக்கும். டூயட் பாட வேண்டி யிருக்கும். இது பத்தாதுன்னு இப்ப லிப் லாக் சீனெல்லாம் வேற... ஒரு குடும்பப் பொண்ணால இதையெல்லாம் தாங்கிக்க முடியாது. நான் பாய்ஸன் குடிச்சு செத்துப் போயிடுவேன்... ஜாக்கிரதை!’’மனைவியின் பேச்சைக் கேட்டு குட்டிகாந்த் அதிர்ந்து போனான்.

‘‘அழாதே மாலதி. நான் ஹீரோ ஆகல. தொடர்ந்து சிரிப்பு நடிகனாவே இருக்கேன்! எங்க ஆத்தா மேல ஆணை!’’கண்ணைத் துடைத்தபடி மாலதி நினைத்துக்கொண்டாள்... ‘‘இப்பத்தான் சிரிப்பு வேஷங்கள்ல இவருக்கு மதிப்பு கூடிட்டு வருது. நெறையப் படங்கள் கிடைக்குது. பணம் கொட்டுது. இப்ப போய் ஹீரோவா நடிக்க ஆசைப்பட்டுட்டா எல்லாத்திலும் மண்ணுதான்.

 ஹீரோ ஆசையில சொந்தமா படம் எடுத்து நஷ்டப்பட்ட எத்தனை பேரை சினிமாவில் பார்த்திருக்கோம்! அப்படி தோத்தவனை அதுக்கு அப்புறம் சிரிப்பு சீன்களுக்குக் கூட யாரும் கூப்பிட மாட்டாங்க. அதான்... எப்படியோ ‘சீதா மாதா’ சீன் காட்டி இவரை ஹீரோ சான்ஸைத் துறக்க வச்சுட்டோம். இனிமே நமக்கு நல்ல காலத்துக்குக் குறையில்லை!’’
 

சுபமி