கவிதைக்காரர்கள் வீதி
*யானை நுழையும் அளவிற்கு சிதிலமடைந்த கட்டிடம் இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.
 *மின்மினியின் பிரகாசத்தில் காணவில்லை நட்சத்திரங்கள்.
*மரங்களைச் சற்று நிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே.
*பசியின் நறுமணத்துடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு என்னைத் ெதரியும்.
*இறந்துபோன நதி நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள் தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி
*யாரோ ஒருவருடைய மரணம் யாரோ ஒருவருக்கு மிக அருகில் நிலத்தின் மீதுள்ள சருகு.
*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில் ஒட்டிக்கொண்டிருக்கும் புத்தர்.
*வீரனின் கரங்களில் இறந்துபோனது வாள்.
ச.மணி
|