ஜோக்ஸ்
‘‘மாத்திரையெல்லாம் எழுதித் தந்துட்டேனே... அப்புறம் என்ன?’’ ‘‘நர்சுக்கு என்னென்ன பிடிக்கும்னு அப்படியே எழுதிக் கொடுங்க டாக்டர்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
 தத்துவம் மச்சி தத்துவம்
புது வீடு கட்டினா கண் திருஷ்டி பொம்மை வைக்கிறோம். புது போன் வாங்கினா ஸ்கிரீன்ல திருஷ்டி பொம்மை படம் வைப்போமா? - புது டச் போன் வாங்கிவிட்டு, யாரையும் டச் பண்ண விடாமல் பார்த்துக்கொள்வோர் சங்கம் - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘டாக்டர்... சொன்னாக் கேளுங்க! உங்க கிட்ட ஆபரேஷன் பண்ண பயந்துக்கிட்டு கிளினிக்ல இருந்து ஓடிப்போன பேஷன்ட்டை பிடிக்கறதுக்கு எல்லாம் ‘பிடி வாரன்ட்’ போட முடியாது...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘நம்ம கல்யாணத்துக்கு யார் யாரெல்லாம் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறே?’’ ‘‘நம்ம பையனே வந்துடுவான்னு நினைக்கிறேன்... நான் இப்ப முழுகாம இருக்கேன்!’’ - சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘டாஸ்மாக் கடைய மூடச் சொல்லி தலைவர் ஏன் கோயில் முன்னாடி போராட்டம் பண்றாரு..?’’ ‘‘டாஸ்மாக் கடை முன்னாடி பண்ணா தொண்டர்கள் எல்லாரும் குடிக்கப் போயிடறாங் களாம்..!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என்னதான் சூரியன் நெருப்பா சுட்டாலும், அது இட்லி, தோசை எல்லாம் சுட்டுத் தராது! - எதைச் சாப்பிட்டாலும் சுடச்சுட சாப்பிடுவோர் சங்கம் - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘புலவர்கூட ரெண்டு பொண்ணுங்க வந்துருக்கே... ஏன்?’’ ‘‘இன்னிக்கு முதன்முதலா அவர் எழுதின குத்துப்பாட்டை மன்னருக்கு டெமோ பண்ணிக் காட்டுறாராம்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
|