விநோத வரிசை!
‘அடுத்த உலகப் பெரும் போர் குடிநீருக்காகவே நடக்கும்’ என்ற நாஞ்சில் நாடனின் கருத்து, ஓர் அபாய அறிவிப்பு! இன்று ‘பண சேமிப்பை’ விட ‘நீர் சேமிப்பே’ இன்றியமையாதது! - மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
 ‘ஜுராசிக் வேர்ல்டு’ பட டைரக்டரை ஏதோ கோலிவுட் கோயிந்து மாதிரி கற்பனை பேட்டி எடுத்து, கலாய்த்துவிட்டீரே... உம்மை அந்த டைனோச ரிடமே பிடித்துக் கொடுத்தாலென்ன? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நூடுல்ஸில் மட்டுமல்ல... பதப்படுத்தப்பட்ட அத்தனை பாக்கெட் பதார்த்தங்களிலுமே விஷமும் கலந்திருப்பது நிதர்சனம்! உஷாராக இருக்க வேண்டியது நாம்தான்! - எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.
வெற்றிப் படமோ, இல்லையோ... இந்தியாவின் முக்கியமான படம் எனத் தெரிந்ததுமே ‘பாகுபலி’யில் நடிக்க சூர்யா சான்ஸ் கேட்டது அவரின் சுத்த மனசையே காட்டுகிறது! - கவிதா, காரைக்குடி.
ஒரு நடிகன் இரண்டு விவாகரத்து செய்திருந்தால் என்ன? ரசிகனுக்குத் தேவை அவரின் நடிப்பு மட்டுமே என்பதை கமல் வாழ்வை வைத்து நிறுவிவிட்டார் சாருஹாசன்! - கே.ஆர்.சிதம்பரக்குமாரசாமி, சென்னை.
சிம்பு, பிரபுதேவா, ஆர்யா, விக்னேஷ் சிவன் என்ற காதலர் வரிசை ஆச்சரியமல்ல. சினிமாவில் இன்னும் நயனுடன் ஜோடி சேர நீ...ண்...ட வரிசையில் ஹீரோக்கள் காத்திருப்பதுதான் ‘விநோத ரஸ மஞ்சரி’! - ‘மீசை’ எஸ்.மூர்த்தி, மஞ்சக்குப்பம்.
‘‘நான் ஒரு வெஜிடேரியன். நான் எப்படி பிள்ளைகளுக்கு முட்டை தர முடியும்?’’ என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளகான் சொல்லியிருப்பது வேதனையான வேடிக்கை! - எஸ்.கைலாஷ் சிவம், புதுச்சேரி.
‘வாடகைக்கு பாய் ஃபிரெண்டா?’ ஏழுகொண்டல வாடா எங்கேடா போகுது உலகம்? இது சீனாவில்தான்... நம்ம நாட்டில் இல்லை என்பதுதான் ஒரே ஆறுதல்! - கோ.சு.சுரேஷ், கோவை.
பிராய்லர் சிக்கன் பற்றிய உண்மைகள் அனைத்தும் பயங்கரமானவை. ‘உணவே மருந்து’ என்ற நிலை மாறி உணவே விஷமாகிவிட்டதை உணர்த்துகிறது ‘கிச்சன் to கிளினிக்’ தொடர்! - பாபுகிருஷ்ணராஜ், கோவை-2.
கல்விக் கடன் எவ்வளவு பெறலாம்? எப்படிப் பெறுவது? என்ற விலாவாரியான தகவல்கள் அசத்தல். மாணவ, மாணவி யருக்கு சரியான நேரத்தில் கிடைத்திருக்கும் ‘கல்வி ஸ்பெஷல்’ இது! - இராம.கண்ணன், திருநெல்வேலி.
சென்னையில் தங்க இடமும் கொடுத்து, தள்ளுவண்டியில் வேர்க்கடலை விற்றால் மாதம் ரூ.15,000 சம்பளமும் தரும் பெருமாள் உண்மையிலேயே படியளக்கும் பெருமாள்தான்! - எஸ்.புனிதா சுந்தர், காங்கேயம்.
|