கவிதைக்காரர்கள் வீதி




* கதவடைக்கப்பட்ட உறக்கம்
ஜன்னல் கம்பிகளின் வழியே
லாவகமாய் உட்புகுந்து
அங்குமிங்கும் அலைந்து
இறுதியாய்
ஞாபக அலமாரியில்
அடுக்கி வைத்திருக்கும்
நினைவுகளில் ஒன்றை
உருட்டித் தள்ளிய சப்தத்தில்
விழிக்கையில் குதித்தோடியது
என் கனவுப்பூனை!

* இரவெல்லாம் மழை
கால்களில் கனவுச்சகதி
தூக்கத்தில் நடந்திருப்பேன்
நேற்று என்னுள்!

* நதியின் அழகை
அங்கேயே உட்கார்ந்து
ரசிக்கிறது கரை!

* பட்டாம்பூச்சி
பிடிக்க ஓடுகிறேன்
அவள்
வீட்டைத் தாண்டி

* அந்த காய்ந்த
மரத்தடியில்
முறிந்து விழுந்திருந்தது
நிழல்..!

தளபதி கோபால்