ஜோக்ஸ்
 ‘‘கபாலி... நீ செய்த குற்றத்துக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கிறேன்!’’ ‘‘தங்களின் மேலான தீர்ப்பினை என்னை வளர்த்து ஆளாக்கிய போலீஸ் ஸ்டேஷனுக்கு டெடிகேட் பண்றேன் எஜமான்!’’ - பி.ஜி.பி.இசக்கி, அம்பாசமுத்திரம்.
க்டர்! காது உள்ளே போன வாரம் எறும்பு போயிடுத்து...’’ ‘‘ஒரு வாரமா ஏன் வரலை?’’‘‘ஏன் வரலைன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்... எறும்புக்குத்தானே தெரியும்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘வாட்ஸ்அப்னு சொன்னாலே தலைவர் ரெண்டு கையையும் தூக்கறாரே... ஏன்?’’ ‘‘அவர் காதுல ‘ஹேண்ட்ஸ் அப்’னே விழுதாம்!’’ - அனார்கலி, தஞ்சாவூர்.
வாரக்கடனுக்கு வட்டி உண்டு; வங்கிக் கடனுக்கு வட்டி உண்டு. ஆனா நேர்த்திக்கடனுக்கு வட்டி உண்டா? - மீட்டர் வட்டியிலிருந்து மீள முடியாத மானஸ்தர்கள் சங்கம் - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
சினிமா தியேட்டர்ல யார் வேணாலும் விசில் அடிக்கலாம்; பொதுக்கூட்டத்துல யாருன்னாலும் விசில் அடிக்கலாம். ஆனா பஸ்ல கண்டக்டர் மட்டும்தான் விசில் அடிக்க முடியும்!- ேலடீஸ் ஹாஸ்டல் முன்பு விசிலடித்து லேடி கான்ஸ்டபிளிடம் லத்தி சார்ஜ் வாங்கியோர் சங்கம் - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
தத்துவம் மச்சி தத்துவம்
ஆபரேஷன் பண்ணப் போற பேஷன்ட்டோட ரேஷன் கார்டை டாக்டர் கேட்கிறாரே... எதுக்கு?’’ ‘‘ஆபரேஷன் சக்ஸஸ்னா கார்டுல பேரு இருக்கும். ஃபெயிலியர்னா அவரே பேரை நீக்கிக் கொடுத்திடுவாரு!’’ - மு.க.இப்ராஹிம், தூத்துக்குடி.
‘‘உணர்ச்சிவசப்பட்டு பேசி தலைவர் உண்மையை உளறிட்டாரா... எப்படி?’’ ‘‘தனித்துப் போட்டி, தனித்து ஆட்சி, தனித்து ஊழல்னு பேசிட்டார்..! - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|