தலைவர், தன் பையனை எதுக்குத் திட்டறார்?’’
‘‘ரெய்டு பண்ண வந்த சி.பி.ஐ ஆபீசர்கிட்ட, ‘எங்கப்பா எங்கம்மாவுக்கு
அப்புறம் உங்கள பார்த்தாதான்
நடுங்குறார்’னு
சொன்னானாம்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘இது கபாலி வீட்டுக் கல்யாணம்..!’’
‘‘அதுக்காக வர்றவங்க மேல மயக்கப்பொடி தூவியா
வரவேற்கறது..?’’
- அம்பை தேவா, சென்னை-116.
மன்னா... புலவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கார்!’’
‘‘என்னவாம்?’’
‘‘110 டிகிரி காய்ச்சல்ல அவரால் உங்களை ஐஸ் வச்சி பாட முடியாதாம்!’’
- பி.ஜி.பி.இசக்கி, நெல்லை.
‘‘கண் டெஸ்ட்டுக்குப் போன தலைவர் ஏன் கடுப்பா வர்றார்..?’’
‘‘போர்டுல ABCDக்கு பதிலா CBI, CBCID, புழல் ஜெயில், ஸ்பெஷல் கோர்ட்னு
போட்டிருக்காம்!’’
- அ.ரியாஸ், சேலம்.
தத்துவம் மச்சி தத்துவம்
வெட்டவெளியில் உட்கார்ந்து விண்வெளியைப் பார்க்கலாம். ஆனால், விண்ணில் உட்கார்ந்து மந்தைவெளியைப் பார்க்க முடியுமா?
- மகளிர் கல்லூரிக்கு வெளியிலிருந்து
ஆதரிப்போர் சங்கம்
- லெ.நா.சிவகுமார், சென்னை-33.
‘பெண்ணிதழுக்கு’ லிப்ஸ்டிக் போடலாம். ‘அரசிதழுக்கு’ லிப்ஸ்டிக் போட முடியுமா?
- நடக்காததை நினைத்தபடி காலம் கழிப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.
‘‘இந்தக் கூட்டத்தைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...’’
‘‘தலைவரே! இது கோர்ட். இங்கே அவங்கதான் கேள்வி
கேட்பாங்க...
நீங்க கேட்கக்கூடாது!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.