facebook



மனிதனின் எந்த பாகத்திலும் இறைவன் தன் பெயரை உபயமென எழுதிப் படைப்பதில்லை. ஆனால், அவன் ஆலயத்திற்கு சிறு மணியை செய்து வைத்தால்கூட அதில் உபயமென நம் பெயரைப் போட்டுக் கொள்கிறோம் நாம்.
- ராஜீவ் ஆதித்யா

சீனாவின் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு - மோடிஜி
# பின்ன, டோங்லியை கண்டுபிடிச்சதே நம்ம முருகதாஸ்தானே!
- மணி ஜி

இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன்: மோடி
ஓ... அதான் எப்பவும் நாட்டுக்கு வெளியவே நிக்கறீங்களா?
- வெங்கடேஷ் ஆறுமுகம்

உண்மையிலேயே இந்த வருடத்தின் சிறந்த ‘இலக்கியவாதி’ விருதை ‘மக்கள் முதல்வர்’னு ஒரு வாசகத்தை உருவாக்கியவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்!
- நறுமுகை தேவி

ஓராண்டு சாதனை... ஏரோப்ளேனுக்கு பெட்ரோல் போட்ட வகையில் ரூ.360 கோடி
நான்காண்டு சாதனை... கோர்ட், வக்கீல், மேற்படி ஃபீசு என்கிற வகையில் ரூ.500 கோடி
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

பேய்ப் படங்களைப் பார்த்து பேச்சிலர்கள் பயப்படுவதில் ஒரு லாஜிக் இருக்கிறது... ஃபேமிலி மேன்களும் பயந்தேன்னு சொல்லும்போதுதான் லாஜிக்
இடிக்கிறது!
- குமரேஷ்
சுப்ரமணியம்

‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்றதும் புன்னகைப்பதற்குப் பதில் நடிக்கத் தொடங்கி விடுகிறது முகம்.
- ப்ரியா முரளி

செல்லம், தங்கம், புஜ்ஜி என்று ஆரம்பிக்கின்ற காதல், கடைசியில் சனியனே, பிசாசு, மூதேவியில் முடிந்து விடுகிறது.
- பா. வெங்கடேசன்

திருமணம் என்பது ‘சாமி போடற முடிச்சு’ன்னு சொல்றதோட அர்த்தம் இப்பதான் புரியுது!
- செல்லி சீனிவாசன்

டூவீலருக்கு வீலுக்கு அடியில எலுமிச்சம்
பழம் வைக்கிறாங்க, சரி... காருக்கு நார்த்தங்கா, சாத்துக்குடி மாதிரி பெருசாதானே வைக்கணும்? ஒருத்தனுக்கும் விவரம் இல்ல...
- ரிட்டயர்டு ரவுடி

‘‘விடைத்தாள் மறு கூட்டலுக்கு அப்ளை செய்தால் மீண்டும் ஆசிரியர்கள்தான்  மதிப்பெண்களை மறுகூட்டல் செய்வார்களா? இல்ல, நம்ம குமாரசாமி ஜட்ஜ்கிட்ட  குடுத்து, கூட்ட சொல்ல மாட்டாங்களா’’ன்னு பத்தாவதுல, கணக்குல 75 மார்க்  எடுத்த பக்கத்து வீட்டுப் பையன்
கேட்கிறான்!
- இளையராஜா டெண்டிஸ்ட்

500க்கு 488 மார்க் வாங்கிட்டு தேம்பித் தேம்பி அழுகின்ற என் மகளை ரெண்டு மணி நேரமா சமாதானம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்! படிப்பு இப்பல்லாம் என்ன ரேஞ்சுக்கு போயிடுச்சு...
# நல்லவேளை... நீ தப்பிச்சேடா குரு!
- குருபிரசாத்

கண்ணாடி முதலில் பார்த்தது
ரசம் பூசியவனின் முகத்தை
- கலாப்ரியா

twitter

@chevazhagan1 
தூரத்துல இருக்குதேன்னு டிவிமேல இருக்குற ரிமோட்டயே எடுக்காம பாத்துட்டிருக்கேன். இவய்ங்க என்னடான்னா சென்னைக்கு மிக அருகில்னு
திண்டிவனத்த...

@mekalapugazh 
கடவுளை வணங்கச் சொல்லித் தரும்போதே, எதையும் கடவுளிடம் கேட்கச் சொல்லித்தராத குடும்பம் வாழ்க.

@iamswathee 
பாதி கவலைகள் கற்பனையானவை, மீதி தற்காலிகமானவை!!

@iNiilan 
வாழ்வின் கரடுமுரடுகள் தெரியாமல் வெற்றியை மட்டும் ருசிக்கக் கொடுக்காதீர்கள், அது பிள்ளைகளை வண்டிக் குதிரைகளாக மாற்றிவிடும்.

@riyazdentist 
மாட்டு வண்டிகளின் மைலேஜை வைக்கோல்/புண்ணாக்கை வச்சுத்தான் அளவிட்டிருப்பாங்களோ!

@SaravananStalin 
அர்ச்சனை செய்ய ரூ.2, மொட்டை அடிக்க ரூ.20. இந்த வரிசையில் விரைவில் இதுவும் சேர்க்கப்படலாம்... கடவுளோடு செல்ஃபி எடுக்க ரூ.30/-

@teakkadai 
பாபநாசம் அருகே தூங்காவனத்தில் வசித்த உன்னைப் போல் ஒருவன் விஸ்வரூபம் எடுத்து உத்தமவில்லனை மன்மதன்
அம்பால் வேட்டையாடி விளையாடியது தசாவதார கதை!

@urs_priya 
தட்டும்போது திறக்கப்படாத கதவுகளே புதிய வழிகள் பிறக்கக் காரணமாகின்றன!

@thoatta 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் நடத்திக் காட்டுவோம் - அன்புமணி
# த்ரிஷா கல்யாணமா? வாலு ரிலீசா? எதைச் சொல்றாரு

@thirumarant 
1: மோடி சாதனை என்ன?
2: கருப்பு பணம் மீட்பு, ஸ்மார்ட் சிட்டி, புல்லட் ட்ரெயின், கங்கை சுத்தம் etc
1: ஆரம்பிச்சிட்டாங்களா?
2: அதெல்லாம் நீ ஏன் கேட்கற?

@Arun_Dct
பல வருடங்களாக நிலவில் வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டியை பிரதமர் மோடி சென்று அழைத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது!

@karunaiimalar 
உலகின் கடைசி விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்கும் முன்பாவது பசி ஏற்படாத மாத்திரையைக் கண்டுபிடித்து விடுங்கள்!

@skpkaruna  
ஒவ்வொரு ஆண்டும் வெயிலுக்கு 2000 பேரும், குளிருக்கு 2000 பேரும் இறக்கின்றனர். 50 டிகிரி வெயில், -30 டிகிரி குளிர் நாடுகளில் கூட இது நடப்பதில்லை.

@2nrc 
நீங்கதானே பண்ணி வெச்சீங்க என்று பிள்ளைகள் பெற்றவர்களைப் பார்த்து வருந்திச் சொல்லாத திருமணங்கள் வெற்றியடைந்தவை ஆகும்!

@jebz4 
மரியாதை
என்பது
மண் பானை
போல்..
உருவாக்க
ரொம்ப மெனக்
கெடணும். ஆனா ஒரு
நிமிஷத்துல போட்டு
உடைச்சிடலாம்.

@senthilcp   
லட்சுமி மேனன் மாதிரி பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் - சிம்பு

# சு. சுவாமி மாதிரி தாலி எடுத்துக்கொடுக்கும்போது டக்னு கட்டினாதான் உண்டு!