அமெரிக்கா போயிடுச்சு வேகா பாப்பா!
இங்கிட்டு சோபிக்கண்ணு... அங்கிட்டு?’’ - ‘பசங்க’ படத்தில் வந்த வேகா, ஆஹா! ‘சரோஜா’வுக்காக வெங்கட்பிரபு மும்பை யில் கண்டுபிடித்த பொண்ணு. லேட்டஸ்ட்டாக வேகாவின் கவனம் இருப்பது ஆல்பத்தில். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஜானி ஜானி... எஸ் பாப்பா...’ ஸ்டைலில் இந்தியில் நர்ஸரி ரைம்ஸ் ஒன்றை தயாரித்து, இயக்கியிருக்கிறார் வேகா. ஆல்பத்தின் பெயர், ‘கோட்டு மொட்டு கீ டோலி’. நியூயார்க்கில் இருந்து தகவல் சொன்ன மயிலிடம் மெயிலினோம்...‘‘என்ன திடீர்னு குழந்தைங்க ரைம்ஸ்ல இறங்கிட்டீங்க?’’
‘‘ரொம்ப நாள் ட்ரீம் இது. சட்டீஸ்கரில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த பொண்ணு நான். ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஆஸ்திரேலியாவில்தான். அங்கிருந்து பெங்களூருவுக்கு மேனேஜ்மென்ட் படிப்புக்காக வந்தேன். அப்புறம் மும்பையில தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். ‘சரோஜா’ மூலம் தமிழ்ல அறிமுகமானேன். தொடர்ந்து தெலுங்கு, தமிழ்னு எல்லா மொழிகள்லயும் படங்கள் பண்ணினேன். வெளிநாட்டில் வளர்ந்தாலும் நம்ம பண்பாடு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
‘வானம்’ படத்துக்கு அப்புறம் இந்திக்கு போயிட்டேன். இப்போ, நாங்க ஃபேமிலியோட நியூயார்க்ல செட்டில் ஆகிட்டோம். வெளிநாட்டுல வளர்ற நம்ம இந்தியக் குழந்தைகளுக்கு நம்ம பண்பாட்டின் பெருமைகளைச் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக அழகா பண்ணின ரைம்ஸ்தான் இது!’’‘‘என்னது... நியூயார்க்ல செட்டில் ஆகிட்டீங்களா? அய்யகோ...’’
‘‘ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. எங்க அப்பாவோட பிஸினஸ் இப்போ சிட்னியில இருந்து நியூயார்க்குக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சு. அண்ணனோட ஃபேமிலியும் அங்கேதான் இருக்காங்க. அப்புறம் மும்பையில நான் மட்டும் எப்படி தனியா இருக்கறது? ஆனா, இப்பவும் மும்பைக்கு அடிக்கடி வர்றேன். வருவேன்!’’
‘‘லட்சியம்..?’’
‘‘ரைம்ஸ் ஆல்பத்துக்கு நிறைய பாராட்டுகள் வருது. குழந்தைகள் மட்டுமில்ல... பேரன்ட்ஸும் ரசிக்கிறாங்க. இந்தியப் பண்பாடு, கலாசாரத்தோட பெருமையை இன்னும் நிறைய சொல்லணும். தொடர்ந்து ரைம்ஸ்... ஆல்பத்துக்கு நேரம் ஒதுக்கப் போறேன்!’’‘‘உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாரு?’’‘‘ஹாலிவுட்ல ரஸ்ஸல் க்ரோவ். அவரோட ஆக்டிங் பிடிக்கும். இந்தியில அமீர்கான். ‘பி.கே.’ல பின்னியிருக்கார். தமிழ்ல கமல்... அப்புறம் சூர்யா!’’
‘‘தமிழ்ல ஏன் படங்கள் பண்ணலை?’’‘‘போன வருஷம் ஜூன் மாசம் இந்தியில என் படம் ரிலீஸ் ஆச்சு. அது நல்லா போச்சு. உண்மையைச் சொல்றதுக்கு என்ன? தமிழ்ல நல்ல ஆஃபர்ஸ் வரலை. வந்தால் நடிக்க ரெடி!’’‘‘எப்படி இருக்கு நியூயார்க்?’’‘‘ஷூட்டிங்குக்காக சென்னை, மும்பை, ஐதராபாத்னு பறந்துக்கிட்டிருந்தேன். ஃபேமிலி கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாம இருந்தது. இப்போ ஃபேமிலி யோட ஹேப்பியா இருக்கேன். அந்த எனர்ஜிதான் கிரியேட்டிவ்வா ரைம்ஸ் பண்ண வச்சிருக்கு!’’
மை.பாரதிராஜா