ஜோக்ஸ்



‘‘நீங்க தந்த மருந்து குமட்டுது டாக்டர்..!’’
‘‘மருந்தைக் குடிக்கும்போது எனக்குக் குடுத்த ஃபீஸை நினைக்காதீங்க!’’
- அம்பை தேவா, சென்னை-116.

தத்துவம் மச்சி தத்துவம்

தம்பி மேல கோபம் வந்தா தம்பியைத் திட்டலாம்; அண்ணன் மேல கோபம் வந்தா அண்ணனைத் திட்டலாம்; வாத்தியார் மேல கோபம் வந்தா கூட, அவரை மனசுக்குள்ள திட்டிக்கலாம். ஆனா, ஒருத்தருக்கு மூக்கு மேல கோபம் வந்தா, மூக்கை திட்ட முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.

‘‘உன் கணவர் ஏன் தூங்கும்போதுகூட ஹெல்மெட் போட்டுக்கறாரு..?’’
‘‘அவருக்கு தூக்கத்துல ஸ்கூட்டர் ஓட்டற வியாதி இருக்கு...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘கட்சியில் இருந்த கை
தட்டல் அணியை ஏன் கலைச்சிட்டாங்க..?’’
‘‘தலைவர் மேல செருப்பு வீசுனப்பவும் கை
தட்டினாங்களாம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘பக்கத்து பெட்ல இருந்த பேஷன்ட் உடம்பு குணமாகி வீட்டுக்குப் போனதுல நீங்க ஏன் சந்தோஷப்படறீங்க..?’’
‘‘இனி நர்ஸை நான் ஒருத்தனே சைட் அடிக்கலாம்ல... அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘வெள்ளைக்கொடி காட்டிய பிறகும் எதிரி மன்னர் அடிக்க வருகிறாரே..?’’
‘‘அவர் ‘வெண்முறை’க்கு எதிரானவராம் மன்னா..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

தத்துவம் மச்சி தத்துவம்

கோயிலில் பெரிய மனிதர்களுக்கு மரியாதை செய்ய பரி‘வட்டம்’தான் கட்டுவார்கள். பரி‘சதுரம்’, பரி‘செவ்வகம்’, பரி‘முக்கோணம்’ எல்லாம் கட்ட மாட்டார்கள்...
- சாமி கும்பிட்டபடியே ஃபிகர்களைக் கணக்கு பண்ணுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.