என்னதான் ஒருத்தர் சூழ்நிலைக் ‘கைதி’யாக இருந்தாலும், அவர் ‘கட்டம்’ போட்ட சட்டை போட்டு ஜன்னல் ‘கம்பியை’ எண்ணிக் கொண்டு இருக்க மாட்டார்.
- தப்பு செய்தாலும் ஒப்புக் கொள்ளாமல் தப்புத் தப்பாய் தத்துவம் சொல்வோர் சங்கம்
- அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.
‘‘தகவல் அறியும் சட்டத்துல தலைவர் என்ன கேட்கிறார்..?’’
‘‘எந்த கோர்ட் நீதிபதிக்கு இரக்கம் ஜாஸ்தின்னு கேட்கிறார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘எதிர்க்கட்சி மீட்டிங்குக்கு போகலாம்னு தலைவர் சொல்றாரே... ஏன்?’’
‘‘பிரமாண்டமான கூட்டத்தைப் பார்த்து ரொம்ப நாளாகுதாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘என்ன... தலைவரோட போட்டோல பின்னாடி கம்பியெல்லாம் தெரியுது?’’
‘‘ஜெயில்ல இருக்கும்போது எடுத்த செல்ஃபியாம்!’’
- மோ.மகாலட்சுமி, ஊரப்பாக்கம்.
கதைப்படி, நீங்க உங்களைக் கெடுத்தவனை பழி வாங்கறீங்க...’’
‘‘கத்தியை வைச்சா... துப்பாக்கி வைச்சா?’’
‘‘உங்களுக்கு தாலி கட்ட வைச்சு!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘‘தலைவர் சொன்னதைக் கேட்டு தலையில அடிச்சுக்கறியே... ஏன்?’’
‘‘அவருக்கு வந்த குற்றப்பத்திரிகைகளை புத்தகக் கண்காட்சியில விற்பனைக்கு வைக்க முடியுமான்னு கேட்கறாரு!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.
‘‘மைக் வேலை செய்யாத காரணத்தினாலும், எங்கள் தலைவருக்கு
மைண்ட் வேலை செய்யாத காரணத்தினாலும், இத்துடன் இந்தக் கூட்டத்தை நிறைவு செய்கிறோம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.