ஷாப்பிங் சென்டர்ல ஹேண்ட் பேக் வாங்கலாம். லெதர் பேக் வாங்கலாம். காலேஜ் பேக் வாங்கலாம். ‘ஃபிளாஷ்பேக்’ வாங்க முடியுமா?- கேஷ் பேக்கில் கர்ச்சீப்பையும் மஞ்சப்பையில் கேஷையும் மாற்றி வைப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
‘‘ஏன்யா? உன்னைப் பார்த்தா திருடன் மாதிரியே தெரியலையே...’’
‘‘அப்ப நான் உங்களுக்கு மாமூல் தர வேண்டாமா எஜமான்?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘கல்யாணத்துக்கு ஏன் இத்தனை போலீஸ் பாதுகாப்பு..?’’
‘‘பொண்ணு காதலிச்சு கைவிட்டவங்க எண்ணிக்கை நூறைத் தாண்டி இருக்குமாம். அதான் ஒரு சேஃப்டிக்காக!’’
- வைகை ஆறுமுகம், திருப்பூர்.
‘‘ஏன் அந்த பாகவதர் சட்டுன்னு பாட்டை நிறுத்திட்டு கிளம்பிட்டாரு..?’’
‘‘அவருக்கு ‘உன் கடைசி ஆசை என்ன?’ன்னு
எழுதி யாரோ துண்டு சீட்டு கொடுத்தனுப்பினாங்களாம்!’’
- கீதா சீனிவாசன், சென்னை-63.
‘‘தலைவருக்கு குழந்தை மனசு...’’
‘‘அதுக்காக டாக்டர் பட்டம் வாங்கிட்டு பெயருக்குப் பின்னாடி ‘சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்’னு போட்டிருக்கிறது ரொம்ப ஓவர்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘ஹஸ்பெண்ட்’ ஆகிட்டதை மத்தவங்ககிட்ட பெருமையாக சொல்லலாம். ‘சஸ்பெண்ட்’ ஆகிட்டதை அப்படிப் பெருமையா சொல்ல முடியுமா?
- சஸ்பென்ஸாய் சஸ்பெண்ட்
ஆனவர்கள் சங்கம்- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
தத்துவம் மச்சி தத்துவம்
‘‘தலைவர்
எதுக்கு உன்னைக் கட்சியை விட்டு நீக்கினார்..?’’
‘‘மகளிரணித் தலைவி பேரை நானும் பச்சை குத்தியிருந்தது தப்பாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.