facebook வலைப்பேச்சு




மிகப்பெரிய பலமும், பலவீன மும் ஒரே விஷயமாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது...
- கிர்த்திகா தரன்

ஆஃப்பாயில் ஆகாத முட்டை பின்னொரு நாளில் சிக்கனாகிறது.
- வெங்கடேஷ் ஆறுமுகம்

மழைக்கு
ஒதுங்கி நிற்கிறான்
குடை ரிப்பேர்க்காரன்
- கலாப்ரியா

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை: செய்தி
 # அடுத்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்..!
- வாசு முருகவேல்

எதிரியின் எதிரி நண்பனாக வேண்டு மென்பது நம்பிக்கைதான்... விதியோ, சட்டமோ அல்ல!
- ஈரோடு கதிர்

இனிமே ஒற்றை சிகரெட் கேட்டா தரமாட்டாங்களாம். பாக்கெட்டா வாங்கினாதான் தருவாங்களாம். அடுத்த வருஷம் பேலன்ஸ்ஷீட்டைப் பாருங்க. ஏக் ‘தம்’ல சேல்ஸ் எகிறியிருக்கும்.
# சிகரெட் பழக்கத்தைக் குறைக்க வழி என்ற பெயரில் விற்பனையை அதிகரிக்கும் நரித்தந்திரம்.
 -செல்வ குமார்

பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்?
  # அனுஷ்கா
தான் டீச்சரா வரணும்னு அடம்
புடிப்பாங்களே!
- செல்லி ராஜா

உள்ளம் உத்தரவின்றி ஊர் மேய்கிறது
- மோகனா சுந்தரம் மீனாட்சி சுந்தரம்

‘லிங்கா’ படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதன் மூலம் ரஜினி படத்தில் கதையே இருக்காது என்னும் மிகப்பெரிய குற்றச்சாட்டு நீங்கியுள்ளது.
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

வீடு பார்க்கும்போது, போக்குவரத்து வசதி இருக்கா, நல்ல தண்ணி இருக்கா, கார் பார்க்கிங் இருக்கா, வீட்டு ஓனர் தூரமா இருக்காரான்னு பார்க்குறதோட... வீட்டுக்குள்ள மொபைல் சிக்னல் கிடைக்குமான்னும் பார்க்கணும்.
# இல்லன்னா தெருல நின்னுதான் போன் பேச வேண்டி வரும்!
- ஸ்ரீதேவி சரவணராஜன்

# டாடி... எனக்கு ஒரு டவுட்டு!  ?
  ஏன் ஒரு ஆண் தன் சோகத்தையும் சோம்பேறித்
தனத்தையும் ஞானத்தையும் தத்துவத்தையும் ‘தாடி’ மூலமாகவே தெரியப்படுத்தணும்னு நினைக்கிறான்?
- செல்லி சீனிவாசன்

எல்லாம் தெரிந்தவன் மட்டுமல்ல, எதுவுமே தெரியாதவனும் அமைதியாய்த்தான் இருப்பான்.
- மன்னை முத்துக்குமார்

twitter

@gundugopal 
அடுத்த மாத உழைப்பைச் சுரண்டி இந்த மாத இயலாமையைப் போக்கி விட்டேன்... # கிரெடிட் கார்ட்!

@Gnanakuthu 
அடுத்தவரின் துன்பத்துக்கு சிந்தும் கண்ணீரை விடவா கங்கையில் புனித நீர் சுரந்து விடப் போகிறது?!

@sriliro 
ஜெயித்து விட்டால் தலைவர், தியாகி... தோற்றுவிட்டால் தீவிரவாதி, துரோகி... அவ்வளவுதான் போராட்டம்.

@karunaiimalar 
ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்தத் திறமையும் மதிக்கப்படுவதில்லை!!!

@anu_twits 
தனிமையில் முகமூடி தேவைப்படுவதில்லை...

@143di   
என்னை விட நல்ல பெண் உனக்குக் கிடைப்பாள் என்று சொல்லும் காதலிகள்தான், நம்மை விட கெட்ட ஆணைத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

@hifi Prabakaran 
10 பேருக்கு உதவி செய்யணும்ங்கற நல்ல எண்ணம் உனக்குள் இருக்கும் வரை உனக்கு ஒரு பய கூட உதவி செய்ய மாட்டான்...

@kanapraba 
குழந்தைக்குப் பசித்தால் அழக் கற்றுக் கொடுத்த இறைவன், சிரிக்கவும் சொல்லிக் கொடுத்ததுதான் அதிசயம்!

@mrithulaM   
‘‘நான் கெட்டவன் இல்லை’’ என ஆண் சொல்வதற்கும், ‘‘நான் மற்ற பெண்கள் போல் இல்லை’’ என பெண் சொல்வதற்கும் வித்தியாசமில்லை...

@SachinKumar_Vtv   
கடன் வாங்கிப் பாருங்க... ஒரு நாளைக்கு உங்க மொபைல எத்தன தடவ ஸ்விட்ச் ஆஃப் பண்ண வேண்டியிருக்குன்னு தெரியும்...

@imathan_
யாருக்கு யாரோட சண்டைன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணக் கூடாது. உள்ள வந்தமா, நாலு கல்ல எறிஞ்சமான்னு போய்க்கிட்டே இருக்கணும்..)

@Koothaadi   
நரகம் செல்வதை நினைத்து பயப்படாதீர்கள். அது இவ்வுலகை விட ஒன்றும் கொடூரமாய் இருந்தி டாது!

@Prad4900     
ஒரு நீண்ட வரிசையில் ரொம்ப நேரம் நிக்கும்போது நமக்கு ஆறுதலா இருக்கறது, நமக்குப் பின்னாடி நிக்கற கூட்டம்தான்...

@raajaacs 
மனதை முழுதும் மூடி விட்டேன் ஆனாலும் நினைவுசொட்டிக் கொண்டிருக்கிறது

@sarathi30 
கடைசி பஸ்ஸுன்னு தெரிஞ்சும், வயதான பெரியவர் கை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல் செல்லும் உயிரினத்துக்கு என்ன பெயர்?

@radha venkat2 
நதிகளை நீங்கள் கவனித்தது உண்டா? சில இலைகளை, மரக்கட்டைகளை, கரையோடு ஒதுக்கி விட்டுப் போகும்!