என்னதான் ஆபரேட்டர் ஒரு படத்தை தியேட்டர்ல நூறு நாள் ஓட்டினாலும், அதை அவர் எத்தனை கிலோ மீட்டர் ஸ்பீடுல ஓட்டினார்னு சொல்ல முடியுமா?
- வாகனத்திலும், வாழ்க்கையிலும் நிதானமாக பயணிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழ சிவல்பட்டி.
‘‘என் ஜாதகப்படி மூணு வேளையும் கவலையில்லாமல் சாப்பிடற யோகம் இருக்காம்யா!’’
‘‘குற்றப்பத்திரிகை வந்தப்பவே அதைத்தான் தலைவரே நானும் நினைச்சேன்!’’
- எம்.ஹெச்.இக்பால், கீழக்கரை.
‘‘ஆனாலும் நம்ம தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கார்...’’
‘‘எதை வச்சு சொல்றே?’’
‘‘எக்ஸ் மினிஸ்டர் மாதிரி ஒய் மினிஸ்டர் உண்டான்னு கேட்கிறாரே!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘டாக்டர் குடுத்த இந்த மருந்தை சாப்பிட்டா தலைச்சுற்றல் நின்னுடுமா சிஸ்டர்..?’’
‘‘நின்னுடும்... ஆனா மருந்தோட விலையைக் கேட்டா மறுபடியும் ஆரம்பிச்சிடும்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘எனக்கு ஒரு சின்ன தலைவலின்னாகூட என் மனைவி பதறிப் போயிடுவா...’’
‘‘உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னா?’’
‘‘ம்ஹும்... அவ சமைக்க வேண்டியதாயிடுமோன்னுதான்!’’
- எஸ்.கோபாலன், சென்னை-61.
என்னதான் பன் மேல நீரை ஊற்றி
னாலும் அதை ‘பன்னீர்’ என்று சொல்ல முடியாது.
- தத்துவப் பன்னீர் தெளிப்போர் சங்கம்
- கா.பசும்பொன், மதுரை.
‘‘உங்க தெருவில போட்ட தார் சாலையை எதுக்குப் பெயர்க்கறாங்க?’’
‘‘அடுத்த தெருவுக்குப் போட வேண்டியதைத் தவறுதலா இங்கே போட்டுட்டாங்களாம்!’’
- பர்வதவர்த்தினி, சென்னை-75.