மழைத்தும்பிகள்




*நினைக்க வையுங்கள்
பேச வைத்து
விடாதீர்கள்

*ஒருவர்
நிலா பார்த்தால்தான்
ஒருவர்
நிலாக்கள்
பார்க்கலாம்

*ஆமாம் ஆமாம்
அது
கிணற்றில்
பிடித்த மீனை
குளத்தில்
விடுவது

*காத்திருந்த இடத்திலிருந்து
அழைத்துப் போய்
மறுபடியுமாக
அதே இடத்தில்
கொண்டு வந்து
காத்திருக்க வைப்பவர்கள்
எத்தனை பேர்

*எழுத்துகளை
ஒழுங்கு செய்துவிட்டுப்
படிப்பது
கவிதை
கலைத்துப் போட்டுவிட்டுப்
படிப்பது
அது

*ஒருக்களிக்கச் சம்மதித்த
உடல்களில்
எது கீழ்
எது மேல்

அறிவுமதி