ஜோக்ஸ்



தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மொடாக் குடிகாரரா இருந்தாலும் புது வீடு கட்டினால் மொட்டை மாடியில் வாட்டர் டேங்க் வச்சுத்தான் கட்டணும்; குவார்ட்டர் டேங்க் வச்சுக் கட்ட முடியாது!
- தண்ணியக் குடிச்சிட்டு சரக்கடிச்ச மாதிரி சலம்பல் பண்ணுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘தூக்கத்திலே நடந்தவர் இப்ப எப்படி இருக்கார்..?’’
‘‘கால் வலியால நடக்க முடியலைன்னு உட்கார்ந்து தூங்கறார்!’’
- பர்வதவர்த்தினி, சென்னை-75.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் வம்பை ஒருத்தர் ‘விலைக்கு’ வாங்கினாலும், அதைத் திரும்ப யாருக்கும் விக்க முடியாது!
- வீண் வம்பை விலை பேசுவோர் சங்கம்
- கா.பசும்பொன், மதுரை.

‘‘நான் எப்போதுமே தொண்டர்கள்ல ஒருத்தனா இருக்கணும்னு ஆசைப்படுறேன்யா!’’
‘‘அதுக்காக குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தாதான் நீங்களே கூட்டத்துக்கு வருவேன்னா எப்படி தலைவரே?’’
 யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘திருடினவன் போகும்போது ஏதாவது உங்ககிட்ட சொன்னானா?’’‘‘ம்... போலீசுக்கு போகாம இருந்தா, திருடினதுல 20 பர்சன்ட் திருப்பித் தர்றேன்னான்!’’
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘கோர்ட் வாசலை முதன்முதலாக மிதிக்கிற தலைவர் கடுப்பாயிட்டாரே... ஏன்?’’
‘‘டவாலியை விட்டு ஆரத்தி எடுக்க வச்சு அவரை வரவேற்றாங்களாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என்னோட தேர்தல் அறிக்கையைப் பற்றி மக்கள் என்னய்யா சொல்றாங்க..?’’
‘‘அது நீங்க எழுதுன கதையான்னு கேட்கிறாங்க தலைவரே!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.