கபடியில் கோல்!



‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ தொடர், பெரிதும் எங்களை ஆகர்ஷிக்கிறது. ஓவியர் மணியம் செல்வனின் தூரிகை புகுந்து விளையாடுகிறது. நாங்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்!
- பி.எ.ஜெயராஜ், சென்னை-91.

‘ஆயிரத்தில் இருவர்’ பட ஸ்டில்லில் யாருய்யா அந்த அரேபிய குதிரை..? காலத் தூக்கி வச்சி பாய்ச்சலுக்கு தயாராகுதோ... செம (ª)லகான்யா!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அசோகமித்திரனின் எழுத்துக்களைப் படிக்கிறேன். ‘புண் உமிழ் குருதி’ என்ற அவரின் சிறுகதை பற்றிய அனுபவம், அட போட வைத்தது. சுஜாதா விட்டுச் சென்ற பணியை இவர் நிறைவேற்றுவது மகிழ்ச்சி தருகிறது!
- தேவிமைந்தன், சென்னை-83.

ஆல்தோட்ட பூபதி தருவது ‘குட்டிச்சுவர்’ சிந்தனைகளாக இருந்தாலும், இன்றைய டி.வி விளம்பரங்களின் அபத்தங்களை புட்டுப் புட்டு வைத்து
சிந்திக்கச் செய்துவிட்டார்.
- வரலெட்சுமி முத்துசாமி, சென்னை-37.

‘வாவ்... பிரசாந்த் எவ்ளோ இளமையாயிட்டார்... உடம்பைக் குறைச்சதுக்கப்புறம்தான் செம்பருத்தி நாயகன் பிரசாந்த் தெரிகிறார். ‘சாகசம்’ படத்தில் முதல் சாகசம் இதுதானோ!
- எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்.

கொங்கு மண்டல ‘கோவணம்’ தங்கவேலுவின் ஆதங்கம் நியாயம்தான். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் நிர்வாணப் போராட்டங்கள் ரேஞ்சுக்கு இதுவும் ஆகிவிடக் கூடாதே என்பதுதான் எங்கள் ஆதங்கம்.
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

ஷாருக்கான் - ஐஸ்வர்யா ராய் போட்டோக்களைப் போட்டு அதற்கான உம்ம ‘குசும்பு கமென்ட்ஸ்’ அபாரம். சும்மா சொல்லக் கூடாதய்யா... கபடியில் ‘கோல்’ அடிக்கும் ஒரே ஆளு நீர்தானய்யா!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை-1.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில், இந்திக்குத் தருகின்ற முக்கியத்துவத்தை, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்குத் தர மத்திய அரசு தயங்குவது உண்மையான தேசியமே அல்ல!
- ஆர்.தமிழரசன், சேலம்.

சூர்யாவின், ‘அஞ்சான்’ நேர்முகம், சூப்பர். இன்றைய ‘லோ பட்ஜட் நல்ல படங்களில்’ பெரிய ஹீரோக்கள் நேரடியாக பங்கு பெற முடியாவிட்டாலும், தயாரிப்பாளர் ஆகலாம் என்ற அவரின் முன் முயற்சிக்கு நன்றிகள்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இருந்தாலும் நமது பழமை மாறாமல் காத்தனர். நாம்தான் நம் பெருமை
களைப் புதைக்கிறோம். சென்னையைப் பற்றிய நந்திதா கிருஷ்ணாவின் பேட்டி இதைத் தெளிவுபடுத்தியது!
- கே.என்.ராமகிருஷ்ணன், சென்னை-26