குட்டிச்சுவர் சிந்தனைகள்!



நாட்டுல பல பேருக்கு மோடிய தெரிஞ்சளவு கூட பெத்த டாடிய தெரியல. இதுல ஏதோ ஒரு லேடி 'சச்சின தெரியலை’ன்னு சொன்னத ஒரு வாரமா ஊறப் போட்டு துவைக்கிறாங்க ஃபேஸ்புக், டிவிட்டர்ல.

ஏய் புள்ள, மரியா ஷரபோவா! என் சின்னாளப்பட்டி செகப்பி, சின்னமனூர் சிறுக்கி! தெரியாதுன்னு சொல்றதுக்குத்தான் எவ்வளவோ விஷயம் இருக்குல்ல. நயன்தாராவுக்கு சிம்புவ தெரியாதுன்னு சொல்லு; வினு சக்கரவர்த்திக்கு சொம்புவ தெரியாதுன்னு சொல்லு; சுந்தர்.சிக்கு குஷ்பூவ தெரியாதுன்னு சொல்லு, கேப்டனுக்கு குங்பூ தெரியாதுன்னு சொல்லு.

அடியே வெள்ளைக்கார மாமி, சச்சின்தான் கிரிக்கெட் குல சாமி. சங்கே முழங்கே, என் சர்க்கரை வள்ளிக்கிழங்கே, நீ சொன்ன ஒத்த வார்த்தையினால மொத்த இந்தியாவும் ரத்த பூமியா மாறிப் போச்சு. ‘மரியா ஷரபோவாவிற்கு சச்சின் டெண்டுல்கரை தெரியாதது கிடக்கட்டும், மொதல்ல உங்களை சச்சின் டெண்டுல்கருக்கும் மரியா ஷரபோவாவிற்கும் தெரியுமாடா? எமோஷனைக் குறைங்கடா எர்வாமேட்டின் மண்டைங்களா!’ன்னு சொல்லிப் பார்த்தாச்சு... எவனும் கேட்கற மாதிரி தெரியல. அடுத்த வேளை திங்கிறதுக்கு சோறு இல்லாதவன் கூட, ஏதோ பாகிஸ்தான் கூட போருக்குப் போற மாதிரி உன் மேல பாய ரெடியாயிட்டாங்க!

அம்மா குடிநீர், அம்மா மெஸ், அம்மா மெடிக்கல்ஸ், அம்மா உப்பு வரிசையில அடுத்து எதை எடுத்து விடலாம்னு குளோனிங் விஞ்ஞானிங்க கணக்கா குழம்பி போயிருந்த அமைச்சர்களுக்கு, ‘அறிவை வளர்க்கும் அம்மா வல்லாரை மிட்டாய்’ விட ஐடியா கொடுத்துட்டியே என் வெள்ளை முள்ளங்கி. ‘மரியா ஷரபோவாவிற்கு சச்சினை தெரியாமப் போனதற்குக் காரணம் முந்தைய திமுக அரசு சரியாகத் திட்டமிடாததே’ன்னு வழக்கம் போல அம்மா அறிக்கை டைப் பண்ணிக்கிட்டு இருக்காங்க புள்ள.

மரியாவுக்கு சச்சினை தெரியா மல் போனதை கண்டித்து கறுப்புத் துண்டுக்காரர், மரிக்கொழுந்து சென்ட்டுக்காரர், அஞ்சாத படை மன்னன், பகலில் நடை மன்னன் அண்ணன் மைக்கோ ஆல்ரெடி நடை பயணம் ஆரம்பிச்சு அரை கிலோமீட்டர் போயிட்டாருடி இன்ஸ்டாகிராம்ல செல்ஃபி போடுற என் குல்ஃபி. ‘இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்’ என்றும், ‘தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சச்சினை தெரிந்தவர்கள் தமிழ்நாடு ‘ஏ’யிலும் சச்சினை தெரியாதவர்கள் தமிழ்நாடு ‘பி’யிலும் வாழ வேண்டும்’ எனவும் அண்ணன் ஆமதாஸ் அறிக்கையாம்.இந்தா பொண்ணே, உன் மேல இருந்த கடுப்புல ஒருத்தன் எங்கண்ணன் அர்விந்த் கெஜ்ரிவால அறைஞ்சுட்டுப் போயிட்டான்.

‘‘நான் கன்னம் வச்சிருக்கேனா? இல்லை எல்லோரும் கை வைக்க கல்யாண வீட்டுல சந்தனக் கிண்ணம் வச்சிருக்கேனா?’ன்னு டென்ஷனான அண்ணன் ஆப்பு கட்சி தலைவரு, இப்போ அன்னத்துல கை வைக்கமாட்டேன்னு உண்ணாவிரதம் உட்காந்துட்டாரு. இதான் சாக்குன்னு, சச்சின யாருன்னு மரியாகிட்ட காட்ட, சச்சினோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ எடுத்துக்கிட்டு ஷரபோவாவ தேடி சூர்யா ரஷ்யா போற மாதிரி ‘சிங்கம் 3’க்கு பரபர ஸ்க்ரிப்ட் ஒண்ணு ரெடி பண்ணிட்டாரு பழைய அருவாளுக்கு பேரீச்சம்பழம் பிசினஸ் பண்ற இயக்குனர் ஹரி. ‘ஏ பி சி டி... ஒன் டூ த்ரீ... பாஸ்போர்ட் ஃபிளைட் டிக்கெட் சிங்கத்துக்கு ப்ரீ... சிங்கம் டான்ஸ், லெட்ஸ் சிங்கம் டான்ஸ்.’

சச்சின தெரியாதுன்னு சொல்லிட்டாங்களே... இதுபத்தி ‘சச்சின்’ படத்துல நடிச்ச இளைய தளபதிகிட்ட கருத்து கேட்க ஒரு குரூப் புளி சோறும் தயிர்சோறும் கட்டிக்கிட்டு போனா, சும்மா இருந்த இவர சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டாருன்னு உருட்டிவிட்ட மேட்டர்ல அப்செட்டாகி, எது கேட்டாலும் ஒரே பதிலத்தான் சொல்றாராம்... ‘‘சச்சின தெரியாதுன்னு சொல்லிட்டாங்கண்ணே... அச்சா கிதர்? பிரஸ்மீட்டுலதான்ணே... அச்சா கிதர்? அண்ணே நம்ம சச்சின்ணே... அச்சா கிதார்? மத்தியானம் சாப்பிட்டீங்களா... அச்சா கிதர்? ‘கத்தி’ எப்பண்ணே ரிலீஸ்... அச்சா கிதர்?’’

ஈரத்துல நடிச்சது இனியா, உன் பனியன் சைஸ் என்னடா சனியாங்கிற கதையா... இதுல பப்ளி சிட்டி தேட பவர் ஸ்டார் வேற! இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்துக்கு போட்டியா, தான் டபுள்ரோல்ல நடிக்கிற ‘ச்சை’ படத்துல, ‘‘நீளக் காலழகி, வெள்ளை தோலழகி உன்னிய ஹீரோயினா போட கால்ஷீட் கேட்டிருக்கேன்’’னு கொட்டகைக்குள்ள பட்டாசு கொளுத்திப் போட்டு இருக்காரு. ‘‘என்ன, கலர் குமுதா, நாத்திகவாதிகளோட ப்ரெண்ட்ஷிப்பா? கடவுளையே தெரியாதுன்னு சொல்றே’’ன்னு சுமார் மூஞ்சி குமார் மனசு தூள் தூளாக, கூட இருந்த டிகிடி தோஸ்து, ‘ஃப்ரெண்டு... சச்சின் மேட்டரு, ஃபீல் ஆயிட்டாப்ல, ஷரபோவாவ திட்டி ரெண்டு ஸ்டேடஸ் போட்டா கூலாயிடுவாப்ல’ன்னு ஒவ்வொரு ஆபீஸ் கதவையும் தட்டிக்கிட்டு இருக்காரு.

இதுக்கிடையில இந்த மாபெரும் பிரச்னையால, சிலுக்குவார்பட்டி சிங்கத்தினர், சின்ஸியாரிட்டியே இல்லாத சங்கத்தின் அங்கத்தினர், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக நடத்தவிருந்த திண்டுக்கல் ரீட்டாவின் இடுப்பு டான்ஸ் புரோகிராமை பொறுப்பில்லாம கேன்சல் பண்ணிட்டாங்க. இதைக் கேட்டு வெறுப்படைந்த, சிக்ஸ்டீன் வயசே வராத டீன் ஏஜ் பசங்களும், சிக்ஸ்டிக்கு மேல வயசு அதிகமான வீண் ஏஜ் பசங்களும் பழைய டயருக்கு ஃபயர் வச்சு வன்முறையில இறங்கியிருக்காங்களாம்.

சமுத்திரக்கனிய இதயக்கனியா நினைக்கிற சங்கறுக்கிற சுப்ரமணிய குரூப்பு, ‘‘பரமா! இதுக்கு ஏதாவது பண்ணியாகணும் பரமா!’’ன்னு பெல்பாட்டம் மாட்டிக்கிட்டு கிளம்பியிருக்காங்க.
சச்சின் ஷரபோவா மேட்டர் சீரியஸா போயிக்கிட்டு இருக்கிறதுனால, தங்களோட நியூஸ் பெருசா வராதுன்னு தமிழக மீனவர்களைப் பிடிச்சுட்டு போற டியூட்டிக்கு ரெண்டு நாள் லீவு விட்டிருச்சாம் இலங்கை கடற்படை. உயிரும் உணர்வும் உள்ளவங்கதான் இந்த மேட்டருக்கு எதிர்ப்ப காட்டுறாங்கன்னா, வழக்கமா மூணு வாரத்துக்கு ஒரு தடவை உடைஞ்சு விழுற மீனம்பாக்கம் மேற்கூரை, ஒரு வாரம் முன்னாடியே உடைஞ்சு விழுந்திருக்கு!

இது பரவாயில்லம்மா, ‘டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு பதிலா, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வ எரிச்ச எங்க தாமஸ் ஆல்வா எடிசன் கமிட்டியினர், இப்போ மரியாங்கிற உன் கொடும்
பாவிய எரிக்கிறதுக்கு பதிலா என்னத்தை எரிச்சாங்கன்னு பக்கத்துல பாரு...
மரியாவை வெறியா எதிர்ப்போர் சங்கம் அசால்டா சொன்ன கமெண்டுக்கு இவ்ளோ அக்கப்போரா?

ஆல்தோட்ட பூபதி