ஜோக்ஸ்




‘‘தலைவரே! ‘சென்ரல் பீரோ ஆஃப் இன்டலிஜென்ஸ்’ டைரக்டர் உங்களைப் பார்க்க வந்திருக்கார்...’’ ‘‘எதுக்காக இங்கிலீஷ் பட டைரக்டர் என்னைப் பார்க்க வந்திருக்கார்..?’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

ஸ்பீக்கரு...

எஎவ்வளவு பெரிய கட்சித் தலைவரா இருந்தாலும் ரேஷன் கார்டுல அவர் பெயருக்கு நேரா குடும்பத்தலைவர்னு தான் போடுவாங்களே தவிர, கட்சித் தலைவர்னு போட மாட்டாங்க!
- ரேஷனையும் கார்ப்பரேஷன் குழாய் தண்ணீரையும் வம்புக்கிழுப்போர் சங்கம்
- மு.மதிவாணன், அரூர்.

‘‘தலைவர் போதையில இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘ரயில் கட்டண உயர்வுக்கு அமெரிக்க அதிபரை பதவி விலகச் சொல்றாரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எதுக்கு தலைவர் முன்ஜாமீன் வேண்டாம்ங்கறார்..?’’
‘‘நிழலோட அருமை வெயில்ல தெரியும்ங்கற மாதிரி, ஜெயிலோட அருமை இப்ப அவருக்கு தெரிஞ்சிடுச்சாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஸ்பீக்கரு...

‘‘பில்கேட்ஸ், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்ற பணக்காரர்களை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது என்பதால்தான் எங்கள் தலைவர் எந்நேரமும் ஏழைகளாகிய உங்களைப் பற்றி நினைக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

‘‘கடந்து வந்த பாதையை மறக்காதவர் நம்ம தலைவர்...’’
‘‘அதுக்காக விசிட்டிங் கார்டுல வேலூர், புழல் ஜெயில் அட்ரஸ்களை போட்டுக்கறதா..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘உ‘ங்களுக்கு டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணணும்ங்கிறாரு...’’
‘‘இல்லைன்னா..?’’
‘‘வியாதி தானா குணமாயிடுமாம்..!’’
- தாமு, தஞ்சாவூர்.