சகுனியின் தாயம்



‘‘என்ன கேட்டீர்கள்?’’ என்றபடியே கண்கள் இடுங்க சேர மன்னரை நோக்கித் திரும்பினார் சோழ மன்னர் பெருநற்கிள்ளி. ‘‘யவன ராணி ஏன் அவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறாள்? இது குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’’‘‘எனக்குத் தெரிவது இருக்கட்டும். இந்த ஐயம் எதனால் உங்களுக்கு வந்தது?’’ ‘‘கண்முன்னால் ஒரு சம்பவம் நடந்தது...’’

‘‘என்ன நிகழ்வு?’’
சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எதுவும் பேசாமல் ரதத்தில் பறந்து கொண்டிருந்த இளமாறனையும், யவன ராணியையுமே கண்கொட்டாமல் கவனித்தார். பின்னர் சோழ மன்னரை ஏறிட்டார். ‘‘நீங்கள் சொன்னபடி சுரங்கத்தின் மறுபக்கம் வீரர்களுடன் காத்திருந்தேன்...’’
‘‘ம்...’’

‘‘உங்கள் கணிப்பு தவறவில்லை. மயக்கமான ராணியை தன் தோள் மீது சுமந்தபடி இளமாறன் அந்த பாதாள சுரங்கத்துக்குள்தான் வந்தான். ஆனால்...’’
‘‘ஆனால்?’’‘‘ராணி மயக்கமடையவில்லை. எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு காரியத்தை செய்தாள்...’’‘‘என்ன அது?’’‘‘கைகளை உயர்த்தி அங்கிருந்த யந்திரப் பொறியை திருகினாள். உடனே சுரங்கத்துக்குள் காவிரி வெள்ளமென புகுந்தது...’’‘‘இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை சேர மன்னரே. யவன பொறியாளர்தான் அந்த சுரங்கத்தை அமைத்தார். எனவே அதன் சூட்சுமங்கள் ராணிக்கும் தெரிந்திருக்கும்...’’‘‘அதை நானும் ஊகித்தேன். என் சந்தேகத்துக்கான காரணம் அதுவல்ல...’’

‘‘வேறென்ன?’’‘‘இருவரும் மறைந்த ரகசியம்...’’‘‘புரியவில்லை...’’‘‘உள்ளதை உள்ளபடி சொல்லி விடுகிறேன் சோழ மன்னரே. சுரங்கத்துக்குள் புகுந்தது காவிரி மட்டுமல்ல. இரு முதலைகளும்தான். அவை சீற்றத்துடன் இளமாறனை நோக்கி முன்னேறின. வர்மக் கலை மூலம் ராணியை உறங்க வைத்த இளமாறன், உச்சியில் இருந்த பாறை மீது அவளைப் படுக்க வைத்தான். முதலைகளுடன் மோதினான். இரு முதலைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினம் என்பதால் தந்திரத்தால் அவற்றைப் பிரித்தான். ஒரு கட்டத்தில் இரு முதலைகளுக்கும் இடையில் அவன் சிக்கிக் கொண்டான். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது...’’

‘‘அது என்ன?’’
‘‘ஒரு முதலையின் வாலைப் பிடித்து ராணி சுழற்றினாள்... அதை நானிருந்த பக்கம் நோக்கி வீசினாள். இன்னொரு முதலையின் வாயைக் கிழித்து இளமாறன் அதைக் கொன்றான்...’’
‘‘அதாவது இம்முறையும் ராணி மயக்கமடையவில்லை... சாதுரியமாக வர்மப் பிடியிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டாள் என்கிறீர்கள்...’’
‘‘ஆம். அத்துடன் எல்லாம் முடியவில்லை. அப்படி நடந்திருந்தால் எந்த சந்தேகமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. பதிலாக...’’
‘‘பதிலாக?’’

‘‘என் பக்கம் வீசப்பட்ட முதலையை வாளால் அறுத்தெரிந்தபோது சுரங்கத்தில் புகுந்திருந்த காவிரி வற்றியிருந்தது. பதற்றத்துடன் மறுமுனைக்கு ஓடினேன். அங்கு யவன ராணியும், இளமாறனும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் அங்கிருந்ததற்கான எந்தத் தடயமும் தட்டுப்படவில்லை...’’

சேர மன்னர் பேசப் பேச... சோழ மன்னரின் முகம் இறுகிக் கொண்டே வந்தது. பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அந்த மௌனத்திற்கு பின்னால் பெரும் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொடர்ந்தார்.

‘‘வேறொரு வழியாக அவர்கள் இருவரும் தப்பித்திருக்கிறார்கள். சுரங்கத்திலிருந்து வெளியேற நடுவில் இன்னொரு பாதை இருக்கிறது என்பது இதுவரை புகாரை ஆட்சி செய்யும் உங்களுக்குக் கூட தெரியாது என்று நினைக்கிறேன். அறிந்திருந்தால் எங்களை எச்சரித்திருப்பீர்களே... ஆக, மாற்று வழி யவனர்களிடம் மட்டுமே ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. சமயம் பார்த்து யவன ராணி அதைப் பயன்படுத்தி இளமாறனுடன் வெளியேறியிருக்கிறாள். இந்த இடத்தில்தான் எனக்குக் கேள்வி எழுந்தது...’’
‘‘...’’

‘‘சுரங்கத்தின் மறுமுனையில் வீரர்களுடன் நானிருப்பது ராணிக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்க இளமாறனை பிடிக்க அவள் ஏன் உதவவில்லை? முதலையை எங்கள் பக்கம் வீசி ஏன் கவனத்தைத் திருப்ப வேண்டும்? சுதாரித்து நாங்கள் வருவதற்குள் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏன் இளமாறன் தப்ப உதவ வேண்டும்?’’
‘‘...’’

‘‘சோழ மன்னரே... தெரியாத விஷயங்கள் நமக்குப் பின்னால் நடக்கின்றன. நம் ஒற்றர்களாலும் இதைக் கண்டறிய முடியவில்லை என்பதிலிருந்தே அந்த விஷயம் எவ்வளவு ரகசியமாக நடக்கிறது என்பதை அறியலாம். எனது யூகம் சரியென்றால், பாண்டியர்களுடன் யவனர்கள் ரகசியமாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அநேகமாக அது கொற்கை முத்துக்கள் தொடர்பாக இருக்கலாம். இரு வேந்தர்களான நம்மையும், நமக்கு ஆதரவாக இருக்கும் ஐந்து வேளிர்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால்தான் நமது நண்பர்கள் போல் யவனர்கள் நாடகமாடியபடியே பாண்டியர்களுக்கு உதவுகிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன்...’’ என்று சேர மன்னர் சொல்லி முடிக்கவும், ‘‘இதை நான் ஆமோதிக்கிறேன்...’’ என்ற குரல் பின்புற மிருந்து ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பெருநற்கிள்ளியும், யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சீன சக்கரவர்த்தி நின்று கொண்டிருந்தார்.‘‘சேர மன்னரே இவர்தான்...’’ என்று சோழ மன்னர் சொல்லி முடிப்பதற்குள் -சீன சக்கரவர்த்தி இடையில் புகுந்தார். ‘‘உங்களைப் போல் எங்கள் பிரதேசத்தை ஆள்பவன். மற்றபடி வேறு எந்த விசேஷமும் என்னிடம் இல்லை...’’ சொன்னதுடன் தங்கள் நாட்டு வழக்கப்படி வணங்கவும் செய்தார். பதிலுக்கு சேர மன்னர் மரியாதை செலுத்தியதும் சீன சக்கரவர்த்தியே தொடர்ந்தார்.

‘‘கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்... என தமிழில் ஓர் அனுபவ மொழி இருக்கிறதல்லவா? அதுதான் இந்த விஷயத்திலும் நடக்கிறது. நம் கண் முன்னால் நடப்பவை அனைத்துமே மாயை. இளமாறன் ஏன் யவன ராணியுடன் புகாரையே சுற்றிச் சுற்றி வருகிறான் என சேர மன்னர் கேட்ட வினாவுக்கு விடை தேட முயற்சிப்போம். அப்போதுதான்...’’- நிறுத்திவிட்டு இருவரையும் உற்றுப் பார்த்த சீன சக்கரவர்த்தி, தன் தாடையில் வளர்ந்திருந்த ரோமத்தை தடவியபடியே சொன்னார்... ‘‘புகாருக்குள் அவர்கள் மறைத்து வைத்திருக்கிற பொருள் எதுவென்று நமக்குத் தெரியும். அந்தப் பொருளை எடுக்கத்தான் புகாரை விட்டு வெளியேறாமல் இளமாறன் இருக்கிறான் என்று நினைக்கிறேன்...’’

‘‘இதை எளிதில் அறியலாம். யவன அரசர் என் பாதுகாப்பில்தானே இருக்கிறார்? அவரை விசாரிப்போம். யாரங்கே...’’ என சோழ மன்னர் குரல் கொடுத்தார்.
‘‘மன்னா...’’ என்றபடி காவலர் தலைவன் ஓடிவந்து வணங்கினான். ‘‘புகார் தளபதியின் மாளிகையில் இருக்கும் யவன அரசரை அழைத்து வா...’’
இடத்தை விட்டு அசையாமல் காவலர் தலைவன் நின்றான். அவன் முகத்தில் வியர்வை பூத்தது. கண்களில் அச்சத்தின் சாயை படரத் தொடங்கியது.

‘‘சொன்னது காதில் விழவில்லை? ஏன் இங்கேயே நிற்கிறாய்?’’ - பெருநற்கிள்ளி
கர்ஜித்தார்.

‘‘இவனால் எப்படி அழைத்து வர முடியும்?’’ சீன சக்கரவர்த்தி நகைத்தார்.
‘‘ஏன் முடியாது?’’

‘‘இருந்தால்தானே அழைத்து வர...’’
‘‘என்னது?’’

‘‘இந்நேரம் யவன அரசர் தப்பியிருப்பார். அப்படித்தானே?’’ சீன சக்கரவர்த்தி காவலர் தலைவனிடம் கேட்டார்.
பதில் சொல்லாமல் அவன் திருதிருவென விழித்தான்.
‘‘அவர் கேட்டது காதில் விழவில்லை...’’ சோழ மன்னர் நிதானத்தை பறக்கவிட்டார்.
‘‘யவன அரசர் தப்பவில்லை...’’ காவலர் தலைவன் குரல் நடுங்க வார்த்தைகளை உச்சரித்தான்.
‘‘பிறகென்ன?’’

‘‘அவர்... அவர்... இறந்துவிட்டார்...’’
‘‘என்ன சொல்கிறாய்?’’ மூன்று மன்னர்களும் ஒரு சேர அதிர்ந்தார்கள்.
‘‘யவன மன்னர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். அவர் மார்பில் குறுவாள் பாய்ந்திருக்கிறது. தவிர...’’
‘‘தவிர?’’

‘‘அவரிடமிருந்த கண்ணகியின் காற்சிலம்பையும் காணவில்லை...’’
விக்கிரமாதித்த மகாராஜாவின் சிம்மாசனம் தோன்றிய அடுத்த விநாடி -

இரு பட்டாம்பூச்சிகளும் தங்கள் சுயரூபத்தை அடைந்தன. விக்கிரமாதித்த மகாராஜாவும், வேதாளமும் புன்னகையுடன் அங்கே காட்சி தந்தார்கள்.
‘‘மகாராஜனே! இந்தப் பதுமைகளை என்ன செய்யலாம்?’’ - கேட்ட வேதாளம், கண்கள் வரை சிலையாகியிருந்த ஸ்பைடர் மேனையும், ஹாரி பார்ட்டரையும் சுற்றி வந்தது.
‘‘இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்...’’ சொன்ன ராஜா, வலது கையைத் தன் வயிற்றின் மீது வைத்தார். அதை அப்படியே மேல் நோக்கிக் கொண்டு வந்தார். தொண்டைக் குழியைத் தாண்டி தாடையைத் தடவி ஏதோ ஒரு பொருளை வாயிலிருந்து எடுத்தார். கீழே போட்டார்.

துள்ளிக் குதித்தபடி மகேஷ் தரையிலிருந்து எழுந்து நின்றான். தன் முன்னால் நின்று கொண்டிருந்த இருவரையும் கண்டதும் அவன் இமைகள் படபடத்தன.
‘‘யாரு? விக்கிரமாதித்த மகாராஜாவா... பழைய ‘அம்புலிமாமா’ல உங்களை எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கீங்க...’’
‘‘தேங்க்ஸ் மகேஷ். இதுக்கெலாம் காரணம் அந்தப் படத்தை வரைந்த ஓவியர் சங்கர்... அவர்தான் எங்களை அச்சு அசலா அப்படியே வரைஞ்சார். சரி இங்க வா...’’
‘‘எதுக்கு மகாராஜா?’’

‘‘இந்த சிம்மாசனத்துல நீ அமர வேண்டாமா...’’
‘‘இது உங்களோட சேர் ஆச்சே..?’’
‘‘ஸோ வாட்? இனிமே இது உனக்குச் சொந்தம்...’’
‘‘ஆனா, உங்க அளவுக்கு எனக்கு மாய வித்தைகள் தெரியாதே... அதெல்லாம் கத்துக்காம இதுல நான் எப்படி உட்கார முடியும்?’’
‘‘கவலையே படாத. எல்லா வித்தைகளையும் நான் சொல்லித் தர்றேன். முதல்ல அனிமா சித்தி...’’

‘‘ஹேய்... இந்த வித்தையை கத்துக் கொடுக்கத்தான் வேதாளம் முதல்ல முயற்சி செஞ்சது. ஆனா, ஹாரி பார்ட்டரும், ஸ்பைடர் மேனும் அதைக் கெடுத்துட்டாங்க...’’
‘‘இனிமே அவங்க ரெண்டு பேரும் உன்னை தடுக்க மாட்டாங்க. ஏன்னா அவங்களை பதுமையா மாத்தியாச்சு...’’ என்ற படி கண்கள் வரை சிலையாகியிருந்த இருவரையும் வேதாளம் காட்டியது.
அதைப் பார்த்து மகேஷ் கைகொட்டி சிரித்தான். என்ன தோன்றியதோ... திடீரென்று அமைதியானான். ‘‘என்ன விஷயம் மகேஷ்?’’ வேதாளம் கேட்டது.

‘‘இல்ல... உன்னை சுத்தி சகுனியோட தாயத்தால சர்க்கிள் போட்டாங்க. இதுலேந்து தப்பிக்கிற சக்தி அந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கே இல்லைன்னு சொன்னாங்க... அப்படியிருக்கிறப்ப எப்படி நீ அந்த வட்டத்தை விட்டு வெளிய வந்த? கிருஷ்ணரை விட எந்த பலமான சக்தி உன்னை சகுனியோட தாயத்துலேந்து காப்பாத்திச்சு?’’ மகேஷ் கேட்ட கேள்வி, ஸ்பைடர் மேனையும் ஹாரி பார்ட்டரையும் கூட உலுக்கியது. இருவரும் என்ன பதில் வரப் போகிறது என்று கவனிக்க ஆரம்பித்தார்கள். சகுனியின் தாயத்தை வெல்லும் சக்தி எது என்பதை விக்கிரமாதித்த மகாராஜா சொல்லத் தொடங்கினார்.

தன் கையிலிருந்த தாயத்தை உருட்டியபடியே பழைய நினைவுகளில் மூழ்கினார் சகுனி. கௌரவர்களை வேரோடு அழிக்கவும், பாண்டவர்களை பொசுக்கவும் இதன் மூலமாக பீஷ்மரை வீழ்த்தவும் அவர் சபதம் ஏற்றதற்குக் காரணம் ஒரு திருமணம்தான். அந்தத் திருமணம் அவரது அக்கா காந்தாரிக்கு நடந்த கல்யாணம். திருதராஷ்டிரருடன் நடந்த மணமல்ல அது. அதற்கு முன்பே ரகசியமாக அவரது அக்காவுக்கு ஒரு திருமணம் நடந்திருந்தது. அதைப் பற்றித்தான் துரியோதனனின் தலையை வருடியபடியே அசை போட ஆரம்பித்தார்.

அந்தக் கல்யாணம் மட்டும் நடக்கவில்லையென்றால் சகுனியின் தாயமே உருவாகியிருக்காது... குருக்ஷேத்திரப் போரும் நடந்திருக்காது... கௌரவர்களும், பாண்டவர்களும் அழிந்திருக்க மாட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணமாக அமைந்த காந்தாரியின் அந்த முதல் திருமணம்... ‘‘இன்னும் இல்லை... ஊருக்குப் போனதும்தான் போடணும்...’’ வெட்கத்துடன் இளவரசன் பதிலளித்தான்.
‘‘தள்ளிப் போடாதீங்க. தடுப்பூசி எவ்வளவு முக்கியம் தெரியுமா?’’ அக்கறையுடன் ஸ்காட் வில்லியம்ஸ் கேட்டான்.

‘‘தெரியும் சார். போனதும் முதல் காரியம் அதுதான்...’’
‘‘குட். உங்க சொந்த ஊர் எது?’’
‘‘தர்மபுரி பக்கத்துல ஒரு கிராமம்...’’
‘‘பேரு?’’

சொன்னான். அதன் பிறகு ஸ்காட் வில்லியம்ஸ் எதுவும் பேசவில்லை.
‘‘சார்... சார்... நிறுத்துங்க... அதோ என் மனைவி...’’
அவன் காட்டிய இடத்தில் குழந்தையுடன் திவ்யா நின்றிருந்தாள். கார் நின்றது. ‘‘தேங்க்ஸ் சார்...’’ என்றபடி இறங்கினான்.
‘‘இளவரசன்...’’

‘‘சார்...’’
‘‘ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்துக்கலாமா? எங்க நாட்டு மேகஸின்ல உங்க லவ் ஸ்டோரியை ஒரு கட்டுரையா எழுத விரும்பறேன்...’’
‘‘கண்டிப்பா சார்...’’

‘‘டிரைவர் குழந்தையை வாங்கிக்க... நீங்க ரெண்டு பேரும் ஜோடியா நில்லுங்க...’’ கேமராவை எடுத்து ஸ்காட் வில்லியம்ஸ் வியூ பார்த்தான். கிளிக்கினான்.
இளவரசனும் திவ்யாவும் ஜோடியாக நின்ற அந்தப் புகைப்படமும், அவர்களது காதல் திருமணமும்தான் ஒரு கிராமமே தீக்கிரையாக காரணமாக அமையப் போகிறது என்பதை அப்போது ஸ்காட் வில்லியம்ஸ் தவிர யாரும் உணரவில்லை...

‘‘எதிர்க்கட்சிக்காரங்க
எதுக்குய்யா என்னைக்
கூப்பிடுறாங்க?’’

‘‘உங்க கொடும்பாவியை எரிச்ச சாம்பலை வந்து
வாங்கிட்டுப் போகச்
சொல்றாங்க தலைவரே!’’

‘‘அவரைத் தவிர
வேறு யாரும்
தலைவரை கேள்வி கேட்க முடியாது...’’
‘‘அப்படியா... யார் அவர்?’’
‘‘அரசுத் தரப்பு வக்கீல்!’’

‘‘எங்கள் தலைவரின் குற்றப்பத்திரிகையை ஒரே மாதத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

தொடரும்)

கே.என்.சிவராமன்