‘‘தலைவரே... தமிழ்நாட்டு மக்கள்தொகை ஏழு கோடியைத் தாண்டிடுச்சாம்...’’
‘‘நாம ஏமாத்த வேண்டிய மக்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதுன்னு சொல்லு!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘எங்க தலைவர் முன்னாள் மந்திரி...’’
‘‘அப்படியா... அவர் எத்தனை மணி நேரம் மந்திரியா இருந்தார்..?’’
- சரவணன், கொளக்குடி.
‘‘கோள் மூட்டி கலகம் உண்டாக்குறதுல தலைவர் கில்லாடி...’’
‘‘அதுக்காக அவருக்கு ‘நாரத ரத்னா’ பட்டம் தர்றது டூ மச்..!’’
- தாமு, தஞ்சாவூர்.
‘‘மன்னா... எதிரிகள் நம்மைச் சூழ்ந்து விட்டார்கள்!’’
‘‘யாராவது ஒருத்தன் கால்லதான் நான் விழுவேன்னு சொல்லிடு...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
என்னதான் தங்க ஷூவை ஒரு கால்பந்து வீரர் பரிசு பெற்றாலும், அதை அவர் காலில் போட்டுக் கொண்டு ஓட முடியாது... இதுதான் வாழ்க்கை!
ஜே.தனலட்சுமி, இடையர்பாளையம்.
தத்துவம் மச்சி தத்துவம் தலைவருக்கு எவ்வளவு நெருக்கமானவரா இருந்தாலும் மேடையில வச்சி பொன்னாடைதான் போடலாம். உள்ளாடையெல்லாம் போட முடியாது!
- தலைவர் காலில் விழுந்து ஆசியும் ஓசியும் வாங்க அலைவோர் சங்கம்
-டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
‘‘ஆனாலும் தலைவரை அநியாயத்துக்குப் பழி வாங்கறாங்க...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘எதிர்க்கட்சியோட ஓட்டு வங்கியைக் கொள்ளை
யடிச்சுட்டார்னு வழக்கு போட்டிருக்காங்களே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.