*‘‘முப்பது வயதை நெருங்குகிறேன். ஆனாலும் இன்னமும் என்னை 13 வயதுப் பெண் போலவே உணர்கிறேன்’’ என்கிறார் பாடகி கேட்டி பெர்ரி. அதனால் அவர் டீன் ஏஜ் பெண்கள் அணிவது போலவே அடிக்கும் அடர் வண்ணங்களில் ஆடைகளை அணிகிறார். ‘‘நிகழ்ச்சிகளுக்கும் இப்படித்தான் அணிந்து செல்கிறேன். கேளிக்கைகளை ரசிக்கும் டீன் ஏஜ் மனநிலை என்னிடமிருந்து விடைபெறவில்லை’’ என்கிறார் இந்த 30 வயதுக் குழந்தை.
*சல்மான் கானின் லேட்டஸ்ட் டார்லிங் ஆகியிருக்கிறார் நர்கீஸ் ஃபக்ரி. ‘கிக்’ படத்தில் சல்மான் கூப்பிட்டதால் ஒரு அயிட்டம் நம்பர் ஆடிக் கொடுத்தார். அதிலிருந்து அடிக்கடி இவருக்கு சல்மான் எஸ். எம்.எஸ் அனுப்புகிறாராம். அடுத்த பட ஹீரோயின், அடுத்த கேர்ள் ஃபிரண்ட் என பிரமோஷன்கள் சீக்கிரமே
கிடைக்கலாம்.
*இரண்டு பெரிய பேனர் படங்களை அடுத்தடுத்து மறுத்திருக்கிறார் கரீனா கபூர். ‘‘திருமணத்துக்குப் பிறகு முன்பு மாதிரி இருக்க முடியாது. அதிக நாட்கள் வெளியூர் ஷூட்டிங் செல்ல வேண்டியிருக்கும், வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் தான் மறுத்தேன்’’ என விளக்கம் தந்திருக்கிறார்.
*டி.வி.யிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் அடுத்த நடிகை, கௌஹர் கான். ‘‘சினிமாவில் முன்னுக்கு வர இதுதான் நல்ல நேரம். புத்திசாலியான திரைக்கதை ஆசிரியர்களாலும், வெரைட்டியான ஸ்கிரிப்ட் களாலும் நிரம்பிக் கிடக்கிறது பாலிவுட். சரியாகத் திட்டமிட்டால் இப்போது யாரும் முன்னுக்கு வந்துவிட முடியும்’’ என்கிறார் அவர்.