குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஃபுட்பால்னா ரெட் கார்டு, யெல்லோ கார்டு. கிரிக்கெட்னா ‘கிட்னி’ கார்டு, இதான் வாழ்க்கை, இதான் விளையாட்டுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பாருங்க... உலகக் கோப்பை ஃபீவரைக் கிளப்பி நம்மளையே கால்பந்து பார்க்க வச்சிட்டாங்க. நாமளே பார்க்கிறப்ப பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பார்க்காமலா இருப்பாங்க? வாங்க... அவங்க கமென்ட்ரியை கேப்போம்...

ஹலோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன். ஃப்ரியா? அடேய்ய்ய்... நீ ரெஃப்ரியான்னு கேட்டேன். நானும் ஒரு மணி நேரமா பார்க்கிறேன்... தரையில அடிக்க வேண்டிய பந்த தலையில அடிச்சு விளையாடி கஷ்டப்படுறாங்க. நீ கலர் கலரா கார்டு எடுத்து காமிச்சுக்கிட்டு இருக்க? துபாய்ல, ஒட்டகத்துக்கூடயே ஒண்டிக்கொண்டி ஃபுட்பாலு விளையாண்டவன்டா நானு.

நான் விளையாடினதப் பார்த்துட்டு ஒட்டகமே எனக்காக கோல் போட்டுட்டு வந்துச்சுடா. நான் ரூல்ஸ சொல்றேன் கேளு, விளையாடுறது பூரா நம்ம உசிலம்பட்டி பயக... நீ என்னா பண்ற, மைதானத்துல நீளமான சைடுல இருக்கிற கோல் கம்பத்தையும் வலையையும் அகல சைடுல வைக்கிற. அப்படியே வெயில் வராத இடத்துல அண்ணனுக்கு ஒரு சேரும், குடையும் போட்டு வைக்கிற. அண்ணன் வரேன், ஆட்டத்தப் பாக்கிறேன். என்னா..?

கண்ணா, காலுல உதைச்சா ஃபுட்பாலு, கைல அடிச்சா வாலிபாலு, குச்சில அடிச்சா பேஸ்பாலு, அதுவே கூடைக்குள்ள அடிச்சா பேஸ்கட் பாலு. ஏய்... ஏய்... ஏய்... ஆண்டவன் ஆயிரம் பேருக்கு ஆயிரம் பால கொடுப்பான். ஆனா, உதைச்சு விளையாட ரெண்டு காலு மட்டும்தான் கொடுப்பான். கண்ணா, ஃபுட்பால்ன்னா சாதாரண விஷயமில்ல. பந்து உன்கிட்ட வராது, நாமதான் தேடிப் போகணும். அதே சமயம் வம்பு உன்னைத் தேடி வரும், நீதான் ஒதுங்கிப் போகணும். கண்ணா, லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... கோல ராங் சைடுல நின்னுகூட போடலாம்... ஆனா, சேம் சைடுல போடக் கூடாது.

ஏய்ய் அம்பயரு, உனக்கு சட்டம் தெரியுமா? நியாயம் தெரியுமா? நீங்க மக்கள்கிட்ட சொல்றது இந்த விளையாட்டுக்கு பேரு கால்பந்துன்னு! ஆனா நீங்க வீரர்களுக்கு விளையாடக் கொடுக்கிறது முழு பந்தை. இப்படி நீங்க மக்களை ஏமாத்தலாம்... ஆனா இந்த வல்லரச ஏமாத்த முடியாது. ரெட் கார்டு, மஞ்ச கார்டுன்னு தர்றீங்களே தவிர, மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டு, பால் கார்டு, ஏன் ஒரு கிரெடிட் கார்டு தரணும்னு நீங்க நினைக்கிறதே இல்ல.

ஏய், இந்தியாவுல மொத்தம் இருக்கிறது 420 ஸ்டேடியம், அதுல கிரிக்கெட் விளையாடுறது 218, கிட்டிபுல் விளையாடுறது 114, கேரம் விளையாடுறது 72, கண்ணாமூச்சி விளையாடுறது 87. ஆனா, ஒரு மைதானத்துல கூட கபடியோ, கால்பந்தோ விளையாடுறதில்ல. அதுக்குக் காரணம் அரசியல்வாதிங்க. வர்றேன்... பழைய பன்னீர்செல்வமா அடுத்த வேர்ல்டு கப்புல கலந்துக்க வரேன், அன்னைக்கு காட்டுறேண்டா மதுரைக்காரன் கிக்குன்னா எப்படி இருக்கும்னு. ஏய், இது வேற கிக்கு! வரட்டா, ஆங்!

என்ரா சம்முவா... என்ரா விளையாட்டு இது? இத்தனை பேரு அங்கனயும் இங்கனயும் ஆடி ஓடி விளையாடுறாங்களே... ரெண்டு பக்கமும் வலைக்கு பக்கத்துல இருக்கிற தம்பிங்க மட்டும் ஏன்டா அதே இடத்துல நிக்கிறாங்க? கோட்டைத் தாண்டிப் போகக் கூடாதுன்னு எந்த ஊரு நாட்டாமைடா தீர்ப்பு சொன்னது? என்ரா கண்ணு... வெளையாட்டாடா இது? இப்படி முட்டிக்கிறானுங்க, இப்படி திட்டிக்கிறானுங்க..?

 டேய் சம்முவா, ரேஷன் கடையில பருப்பு வாங்கப் போனப்ப, ஆடு மேய்க்கிற ஆத்தா ஒண்ணு செருப்பில்லாம நின்னுச்சுன்னு செருப்ப கழட்டி கொடுத்துட்டு வந்தவருடா என் அப்புச்சி. கெரவம், ஒரு பந்துக்கு இப்படி இவனுங்க அடிச்சுக்கலாமா? நம்ம கணக்குப்பிள்ளைகிட்ட சொல்லி, ஆளுக்கொரு பந்த வாங்கி தரச் சொல்லுடா. பயலுக சந்தோஷமா உதச்சுக்கிட்டுக் கிடக்கட்டும். சம்முவா, இப்போ விடுறா வண்டிய.

ஏய்... காத்தோட போனாக்கா அது துப்பட்டா, ஆத்தோட போனாடா என் அப்பத்தா. அப்பத்தா போனாலும் ஆட்டம் போயிடக்கூடாதுன்னு விடிய விடிய மேட்ச் பார்த்தா, அடேய்ய்ய்   யீஷீஷீறீலு , நீ என்னத்தடா போடுற கோலு? தட்டி பார்த்தேன் தொட்டாங்குச்சி, நீ கோலு போடுடா பால வச்சி,

 பால உதைடா கால வச்சி, உன் கைய எடுடா... அது என்னோட பஜ்ஜி. 30 ரூபாய்க்கு தரானுங்கடா கால் கிலோ திராட்ச, அதை தின்னுக்கிட்டே கண் முழிச்சு பார்க்கிறோம் மேட்ச, ஆனா நீ புடிக்கிறியா அட்லீஸ்ட் ஒரே ஒரு கேட்ச? ஏய் ஏய்... டண்டனக்கா, ஒவ்வொரு பொண்ணையும் தங்கச்சியா நினைச்சு கதைங்கடா, ஒவ்வொரு பந்தையும் மாமியாரா நினைச்சு உதைங்கடா! ஆ... டணக்குனக்கா!

தக்காளி! எட்டி குறுக்குல வுட்டேன்னா நெஞ்செலும்பு பொலபொலன்னு உதிர்ந்துரும். என் தாயி சோலையம்மா சீரியல் பார்க்கிற நேரத்துல வந்து ஃபுட்பால் போடுங்க, நெட்பால் போடுங்கன்னு! நேத்து பார்த்தோமே அந்த வெளையாட்டதானடா சொல்றீங்க, தக்காளி வகுந்துடுவேன் வகுந்து. வெளையாட்டாடா அது? ஒரு பந்த சுத்திக்கிட்டு ஒன்பது பேரு ஓடுறாங்க, அடிச்ச சரக்கு கூட சர்ருன்னு இறங்கிருச்சு.

 நம்மூரு கபடி இருக்கு, சிலம்பம் இருக்கு. எடுத்து கம்ப சுத்துவீங்களா, அத விட்டுட்டு பந்த சுத்திக்கிட்டு இருக்கீங்க ராஸ்கோல்களா, தொடை எலும்ப நசுக்கிப்புடுவேன். தக்காளி, யாருடா அந்த செவப்பு சட்டை, பொழுதுக்கும் விசில ஊதிக்கிட்டு..? அவனப் புடிச்சு வைடா, சோலையம்மா கோழி அடிச்சு சூப்பு வச்சிருக்கு, பத்து நிமிசத்துல வந்துடுறேன்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

ஊரே உலகக் கோப்பை ஃபுட் பால்ல பிஸியா இருக்க, சைலன்ட்டா குட்டிப்பசங்களைக் கூட்டிக்கிட்டு பங்களாதேஷ்கிட்ட பூச்சாண்டி காட்டிட்டு வந்த சுரேஷ் ரெய்னா
அண்டு கோ!