facebook வலைப்பேச்சு



எதிரிகளையும் துரோகிகளையும் கூட நண்பர்களாய் ஏற்றுக் கொண்டு அன்புடன் வாழப் பழகுங்கள்... அப்போதுதான் அவசர செலவுக்கு ஐம்பது, நூறு கைமாத்து வாங்க முடியும்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை!
- சாந்தி மாரியப்பன்

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...
- முரளி முனுஸ்

கூழோ, களியோ, பழங்கஞ்சியோ... பணக்காரன் குடிக்கும்போது தனி அந்தஸ்து பெறுகிறது.
- யுவான் சுவாங்

அந்த ஆக்டோபஸ் மட்டும் உயிரோட இருந்துச்சுன்னா பிரேசிலுக்கு 65000 கோடி ரூபாய் செலவு வந்திருக்காது. யாருக்கு கோப்பைய கொடுக்கணும்னு அது
கிட்டயே கேட்டு முடிவு பண்ணியிருக்கலாம்!
- அகல்வான் ஜிகணேஷ்

ராஜபக்ஷேவுக்கு அமைதி விருது: பொலிவியா வழங்குகிறது
# இதை எல்லாம் பார்த்துட்டு/கேட்டுட்டு அமைதியா இருக்குறோம் பாருங்க, எங்களுக்கு கொடுக்கணும் இந்த விருதை!
- பானுரேகா டிஆர்

கணக்கில்லாமல் சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைக்குக்கூட சனிக்கிழமை விடுமுறை; ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை, விளையாட்டும் இல்லை..!
# அடி மாட்டுக்கொட்டகைகளை போல ஆகி விட்டன ஆரம்பக் கல்விச்சாலைகள்!
- சித்தன் கோவை

காதல் என்பது...
ரொம்ப பழமையானது,
அதைப் பண்ண பண்ண...
புதுமையாகுது.
- மூர்த்தி பெருமாள்

கல்லுக்குள்
புத்தன்
இருக்கலாம்
கல்லே
புத்தனாகவும்
இருக்கலாம்
- ராஜா சந்திரசேகர்

இன்று என் தொட்டிச் செடி பூக்கவில்லை... அதனால் என்ன?
கற்பனைத் தோட்டம் காய்ந்து விடாத வரை கவலை இல்லைதான்.
- தீபா சாரதி

பேசாமலே இருந்து விட்டால்
அழிந்து போவது மொழிகள்
மட்டும் அல்ல,
உறவுகளும்தான்!
- பத்மா கணபதி

திரும்பிய பக்கமெல்லாம் புரோட்டாக் கடையைக் கண்டால் அது மதுரை. பேக்கரியைக் கண்டால் கோயம்புத்தூர்...
- கடங்கநேரி யான்

twitter வலைப்பேச்சு

@GoundarReturns    
ஒண்ணா மண்ணா கூடவேத்தானடா சுத்திக்கிட்டிருந்தீங்க. திடீர்னு ஃபுட்பால்லாம் பாக்க
ஆரமிச்சிட்டீங்க!

@RazKoLu     
நம்மை அழகாகக் காட்டும் கண்ணாடியை விடவா தன்னம்பிக்கைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டை சொல்லி விட முடியும்?

@meenammakayal  
அதிகமான கோபத் தில் ஜாடை மாடையாக திட்ட ஒரு பூனைக்குட்டியாவது வளர்க்கணும்!

@udanpirappe     
பேருந்துப் பயணத்தில் பலதரப்பட்ட முகங்கள், காட்சிகள் எல்லாவற்றையும் ரசித்துவிடலாம்தான்... இந்த சில்லறை மட்டும் கிடைத்து விட்டால்!

@saichithra    
நாம் சொல்வதை சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் நண்பர்கள் மனதால்
மிகவும் உயர்ந்தவர்கள்!

@ranilisa     
கோவப்
படாமலே
இருந்து
விடாதே... கோமாளி ஆக்கி
விடுவார்கள்!

@amas32     
சினிமா, நாடக உலகில் விட அரசியலில்தான் சிறந்த நடிகர்களைப் பார்க்க முடிகிறது.

@NeelSays     
இக்காலத்தில் வாய்ப்பு கிடைத்தவன் அயோக்கியன், மற்றவன் நல்லவன். அவ்வளவே!

@MissLoochu    
நாள் முழுதும் சமையல் செய்து கழுவித் துடைக்கும் ஊரான் மகள் தெரிவதில்லை கணவனுக்கு. ஒருநாள் தன் மகள் செய்தால், ‘‘நீ போடா செல்லம், அப்பா பார்க்கிறேன்!’’

@gpradeesh     
யாராச்சும் சோடா வாங்கிட்டு வாங்களேன்பா, யாராச்சும் ஆம்புலன்ஸ கூப்புடுங்களேன்பா ஆசாமி களால் நிறைந்தது இணையம்...

@kekkepikkuni     
‘‘தமிழா... உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே?’’ - தங்கர் பச்சான்
# இவரு பெயருக்கு தமிழ்ல என்ன பொருள்?

@arattaigirl     
பிய்த்தெறியப்பட்ட தன் சிறகுகளை ஒவ்வொரு பெண்ணும் சேகரித்துக் கோர்த்து வைக்கிறாள்... தன் மகளுக்காக!

@puthi_yavan     
எங்க ஊரு திருவிழால வயசுப் பொண்ணுங்க முறைப் பையன் மேல இத ஊத்தித்தான் விளையாடுவாங்க, இதுக்கு எங்க கேன்டீன்ல ‘சாம்பார்’னு பேரு :)

@VenkysTwitts   
தமிழகத்திடம் மின்சாரம் கேட்க சீமாந்திரா முடிவு: செய்தி
# தம்பி, இங்க சங்கமே அபராதத்துலதான் ஓடுது... போய்யா அங்கிட்டு!

@kavipulla     
அலுவலகத்தில் நம் உச்சபட்ச எரிச்சலை முழுதும்
அறிந்தது கீ போர்ட்
‘எண்டர்’ கீ
மட்டும்தான்...

@SomperiSingam    
யாரையும் இகழ்ச்சியாக ஒதுக்கி வைத்து
விடாதீர்கள்...
எதேச்சையாக
அவர்கள்
உங்களையும்
ஒருநாள்
ஒதுக்கி
வைத்துவிடலாம்!