*கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படத்துக்கு ஸ்ரீதிவ்யாவிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர் 15 லட்சத்திலிருந்து 50 லட்ச ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியது தெரிந்து பின்வாங்கி விட்டார்கள். இப்போது அந்த வாய்ப்பு லட்சுமி மேனனுக்குப் போயிருக்கிறது.
‘சந்திரமுகி’யில் ரஜினியுடன் பட்டம் விட்டு பாடிய நயன்தாரா, மறுபடியும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஆட தீபிகா படுகோனே, கரீனா கபூர் என பாலிவுட் நடிகைகளின் பெயர் பரிசீலனையில் இருக்க... நயன்தாரா பெயரை டிக் அடித்துள்ளாராம் ரஜினி!
*சித்தார்த்தின் அடுத்து மூன்று படங்களையும் தமிழில் முக்கியமானதாக சொல்கிறார்கள். ‘காவியத் தலைவன்’, ‘ஜிகர்தண்டா’, ‘லூசியா’ மூன்றும் மூன்று விதமானவை. இந்த மூன்று படத்திற்கு பின்னால் சம்பளத்தையும் ஏற்றிக்கொள்ள நினைத்திருக்கிறார். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் அவரது கல்யாணத்தையும் முடித்துவிட வீட்டில் நினைக்
கிறார்கள்.
*மகிழ் திருமேனி இயக்கும் ‘மீகாமன்’ படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஆனால், ஏழு வில்லன்கள்; ஹீரோயின் ஒண்ணே ஒண்ணு, ஹன்சிகா. ஆர்யா பாவம்தான்!
மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு’ படத்தில் நடிக்கிறார் தமன்னா. ஒரே ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட ஸ்ருதி ஹாசனிடம் மகேஷ்பாபு கேட்டுக்கொண்ட செய்தி தமன்னாவை தடுமாற வைத்திருக்கிறது. ஒரு பாட்டு என்று சொல்லி உள்ளே வந்து ஸ்ருதி தன்னை ஓவர்டேக் செய்து விடுவாரோ என தமன்னா மனசு தடதடக்
கிறதாம்.
*எத்தனையோ பேர் கேட்டும் மோகன், ‘‘ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’’ என பிடிவாதமாக இருந்தார். டி.வி. சீரியல் கூட தயாரித்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு டைரக்டர் செய்யும் சூர்யா படத்திற்காக ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சம்மதித்து விட்டார்.
‘சுப்ரமணியபுரம்’ சுவாதிக்கு ‘கார்த்திகேயன்’ படம் தவிர சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் இல்லை. நியூமரலாஜிப்படி பெயர் மாற்றம் செய்ய ஒரு ஜோதிடரை அணுகியிருக்கிறார். ‘‘பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு. தெத்துப்பல்லை மட்டும் தட்டி எடுத்துட்டா நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடும்’’ என்று ஜோதிடர் சொல்ல, ‘‘எனக்கு இதுதான் அழகு’’ என ஜோதிடரை நறநறத்து விட்டு எழுந்து வந்தாராம்.
*‘அஞ்சானும்’, ‘வாலு’வும் சுதந்திர தினத்தில் மோதுகின்றன. ‘அஞ்சான்’ பாய்ச்சலுக்கு ரெடி. எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், அஜித் வேடங்களில் சிம்பு நடிக்கிற ஒரு பாடல் மட்டுமே ‘வாலு’ வில் மிச்ச சொச்சம்.
*‘த்ரிஷ்யம்’ ஒரிஜினல் மலையாளத்தில் கிறிஸ்தவப் பின்னணி இருக்கும். தமிழில் கமல் நடிக்கும்போது கதையை திருநெல்வேலியில் நடக்கிற மாதிரி மாற்று
கிறார்கள்.
*தனுஷ்ஷின் சொந்தப் படம் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘டாணா’ இரண்டையும் ஒரு நல்ல விலை பேசி வாங்கி விட்டார்கள். அவரது பிசினஸ் சாமர்த்தியத்தை பொறாமை யாகப் பார்க்கிறது தமிழ்த்திரை சமூகம்.
மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றப் போகிறார் டாப்ஸி. பஞ்சாபில் அவரது சொந்த ஊரில் பெண் குழந்தைகள் கல்விக்காக பாடுபடும் ஒரு அமைப்பை அவர் நடத்தி வருகிறார்.
*ஜெயம் ரவியும், ஷாமும் முறுக்கிக் கொண்டு காத்திருக்கின்றனர். சினிமா நிகழ்ச்சி ஒன்றில், ‘இந்த இருவரையும் வைத்து ஒரு படம் இயக்குவேன்’ என்று பாலா உதிர்த்த வார்த்தைகளே இவர்களை இப்படி உரமேற்றி இருக்கிறது. ‘கரகாட்டம்’ முடிந்ததும் அந்தப் படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் பாலா.
*மும்பைக்கு சென்னையிலிருந்து போன டைரக்டர்களில் பார்ட்டி பக்கமே போகாமல் இருக்கிற ஏ.ஆர்.முருகதாஸ் மீது அங்கே நிறைய மரியாதையாம். தேநீர் கூட அருந்தாதவரை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
*ஒருகாலத்தில் மிகப் பெரிய ஹீரோயினாக வரவேண்டிய அதிர்ஷ்டத்தில் இருந்தவர் ஷெரின். அந்தச் சமயம் பார்த்து காதலில் விழப் போக... தடம் மாறிவிட்டது. இப்போது நயன்தாரா நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
கநாட்டின் ராணியைப் பாதுகாக்கிற போர் வீரனாக நடிக்கிறார் விஜய். ஆமாங்க, சிம்புதேவனின் அடுத்த படத்தில்தான். அந்தப் போர் வீரனின் குருநாதராக நடிக்கிறார் ‘நான் ஈ’ சுதீப். படத்தின் பாதி வரை ஃபேண்டஸி போர்ஷன்தான் வருகிறது. ‘மகதீரா’ பார்த்திருக்கிறீர்களா... அதே ஸ்டைல்தான்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின்களிடம் அளந்து பேசக் கூடியவர் அஜித். இப்போது அனுஷ்காவிடம் மட்டும் கொஞ்சம் அதிகம் அளவளாவுகிறாராம். சினிமாவுக்கு முன் அனுஷ்கா யோகா டீச்சராக இருந்ததால் அவரிடம் யோகா பற்றி நிறைய கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம்.
* ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடிக்க வடிவேலுவிடமும் சந்தானத்திடமும் பேச்சு நடந்தது. அதற்குள் 15 நாட்கள் கால்ஷீட்டில் இப்போது பிரபலமாகி வரும் காமெடியன் கருணாகரனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் ‘லிங்கா’ எக்ஸ்பிரஸில் வடிவேலுவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான்.
சைலன்ஸ்இப்போது பேசப்படும் அத்தனை படங்களிலும் ஹீரோயின் அந்த ப்ரியமான மகிழ்ச்சி நடிகைதான். ஒரு பெண் டைரக்டரின் படத்தில் நடித்தவருக்கு, அதன் ஹீரோவான வாரிசு நடிகரோடு காதல் தீ பற்றிக் கொண்டதாகப் பேச்சு. ஒரே இடத்தில் ஷூட்டிங்கில் இருந்துகொண்டே எஸ்.எம்.எஸ் பறக்கிறதாம். இதே ரொமான்ஸ் தொடர்ந்தால் ‘‘நிச்சயம் அஞ்சலி-சச்சின் ரேஞ்சில் கல்யாணமே முடிந்து விடும்’’ என்கிறார்கள்.
இன்னொரு காதல் சங்கதியும் இண்டஸ்ட்ரியில் கசிகிறது. அப்பாவின் இடத்தை நிரப்ப வந்த நடிகர், பாலா படத்தில் நடித்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கும் அந்த ‘பிறவி’ நடிகையின் பின்னால் திரிகிறாராம். கூச்சப்படாமல், பயப்படாமல் வெளியே இணைந்து காணப்படுவதால், திருமண முடிவுக்கு வந்து விட்டார்கள் என பேச்சு!