‘‘ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க பார்வை எப்படி இருக்கு..?’’
‘‘உங்க நர்ஸ் ரொம்ப அழகா தெரியறாங்க டாக்டர்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ஒருத்தர் தன் பங்களாவுக்கு வெள்ளை கலர் பெயின்ட் அடிச்சாலும், அதை ‘வெள்ளை மாளிகை’ன்னு எல்லாம் சொல்ல முடியாது.
-வெள்ளை மாளிகையில் வாடகை ரூம் தேடுவோர் சங்கம்
-வைகை ஆறுமுகம், வழுதூர்.
‘‘நான் கைவிட்டுட்டேன்னு சொன்ன பிறகும் அந்த பேஷன்ட் சந்தோஷமா இருக்காரே... எப்படி சிஸ்டர்?’’
‘‘நான் கை விட்டுட்டதை இன்னும் அவர்கிட்ட சொல்லலியே... அதான் டாக்டர்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘என்னய்யா இது... திருவிழாவுக்கு வந்த என்னை தீ மிதிக்கச் சொல்றீங்க?’’
‘‘நீங்கதானே தலைவரே ‘எந்த அக்னி பரீட்சைக்கும் தயார்’னு நேத்து அறிக்கை விட்டீங்க..!’’
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
‘‘ஒரு வாரமா எங்கே ஆளையே காணோம் ராப்பிச்சை..?’’
‘‘சரியா பிச்சை எடுக்கத் தெரியலைன்னு சங்கத்துல சஸ்பெண்ட் பண்ணி வச்சிருந்தாங்க தாயீ...’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
தத்துவம் மச்சி தத்துவம்
மூட்டை சுமக்கறவருக்கு கூலி கொடுக்கலாம்; பாவ மூட்டையை சுமக்கறவருக்கு என்னதான் கடவுள் கூலி கொடுத்தாலும் அதை அவரால செலவு பண்ண முடியாது!
- மனச்சுமைகளை ஆறுதல் தேடி இறக்கி வைப்போர் சங்கம்
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.
‘‘தலைவர் ஆபாசமா பேசப் போய் வில்லங்கமாயிடுச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அவரோட பேச்சுக்கும் சென்சார் சர்டிபிகேட் வாங்கச் சொல்றாங்க!’’
பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.