‘‘பேஷன்ட்டுக்கு நினைவு திரும்பிடுச்சு டாக்டர்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க சிஸ்டர்?’’
‘‘இங்கேயிருந்து தப்பிக்க முயற்சி பண்றாரே!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.
‘‘தூங்கினா சினிமா கனவா வருது...’’
‘‘அப்ப ஏன் பாதியில் எழுந்து வர்றே?’’
‘‘இப்ப இடைவேளை விட்டிருக்காங்க...’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
தத்துவம் மச்சி தத்துவம்
கோயில்ல பிரசாதம் கிடைச்சா அதை ‘வரப்பிரசாதம்’னு சொல்லலாம். கிடைக்கலைன்னா அதை ‘வரா’ பிரசாதம்னு சொல்லலாமா?
- ஜே.கமலம், நெல்லை.
‘‘திருடப் போறப்ப கபாலி ஏன் ஏட்டய்யாவை கூடவே அழைச்சிட்டுப் போறான்..?’’
‘‘தொழில்ல இருக்கற கஷ்டத்தைப் பார்த்தாவது மாமூலைக் குறைச்சிக்குவாருன்னுதான்!’’
- மா.மனோகரன், சென்னை-54.
‘‘கட்டிலுக்கு பக்கத்துல சைடு டிஷ்ஷை வச்சுக்கிட்டே தலைவர் தூங்கறாரே... ஏன்?’’
‘‘ராவா தண்ணியடிக்கிற மாதிரி கனவு வருதாம்... அதான்!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
வங்கிக் கடனை தவணைகள்ல செலுத்தலாம்; ஆனா நேர்த்திக் கடனை தவணைகள்ல செலுத்த முடியுமா?
- குல தெய்வ நேர்த்திக் கடனை பாக்கி வைத்திருப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கல்லாவி.
‘‘ஆச்சர்யமா இருக்கே... மருந்தே சாப்பிடாம உங்களுக்கு ஷுகர் குறைஞ்சிருக்கே?’’
‘‘டெய்லி உங்க கிளினிக் நர்ஸை ஃபாலோ பண்ணி நடந்தேன்... ஷுகர் குறைஞ்சிடுச்சி டாக்டர்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.