ஆண்ட்ராய்டு உலகின் அடுத்த அசுரன்!



வந்தாச்சு சாம்சங் எஸ்5

பிச்சுஉதறிட்டாருய்யா உங்களை... இதுக்கு மேல நீங்க என்ன பேசப் போறீங்க? வாங்க... பாப்போம்!’’ - ஏதோ பட்டிமன்ற அணிகளை உசுப்பேற்றுவது போலத்தான் ஆப்பிளையும் சாம்சங்கையும் டீல் பண்ணுகிறது டெக்னாலஜி வட்டம். ‘உலகின் அதிநவீன ஸ்மார்ட் போன்’ என ஆப்பிள் ஒரு படைப்பை வெளியிடுவதும், அடுத்த ஆண்டே புதிதாக வெளிவரும் சாம்சங் போன், ‘இதான்யா அதி நவீனம்’ எனச் சொல்ல வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், ஆப்பிள் 5எஸ் போனைத் தூக்கி சாப்பிடும்படியாக வெளி வந்திருக்கிறது சாம்சங்கின் கேலக்ஸி எஸ்5.  அப்புறமென்ன..? 5ஷி ஸ்s ஷி5   இணையத்தில் இதுதான் இப்போது ஹாட்!

இதோ இந்த ஏப்ரல் 11 வாக்கில் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையைத் துவங்க இருக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்5. டெக் புலிகள் கையில் இப்போதே தவழ்கிறது அதன் ஸ்பெஷல் எடிஷன். ஆப்பிள் 5எஸ் வெளியீட்டின்போது பெரிதாகப் பேசப்பட்ட கைரேகை ஸ்கேனர் அம்சம், இந்த போனில் அனாயாசமாக இடம்பெற்றிருக்கிறது. அதே போல, ‘தண்ணிக்குள்ள தூக்கிப் போட்டாலும் இயங்கும்’ என்ற சோனி போன்களின் சிறப்பம்சமும் இந்த போனில் ஆஜர்.

தலைப்புச் செய்திகளாக இடம்பெறும் இந்தப் புத்தம் புது அம்சங்கள் தவிர வேறு என்ன இதில் ஸ்பெஷல்? இதோ ஓர் அலசல்...£ ஆப்பிளின் அடுத்த ஐ போன் நிச்சயம் ஒரு பர்சனல் டாக்டர் போல செயல்படும் என்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் நிபுணர்கள் எல்லாம் இப்போது ஆரோக்கியம் தொடர்பான ஆப் உருவாக்கத்தில்தான் இறங்கி யிருக்கிறார்களாம். நாளைக்கு நமக்கு ஹார்ட் அட்டாக் வருகிறதென்றால், பாக்கெட்டில் இருக்கும் ஐபோன் அதை இன்றே தெரிந்துகொண்டு ‘ஆஸ்பத்திரிக்குப் போ’ என்று அலாரம் அடிக்கும் என்கின்றன வதந்திகள். ‘நாமும் கொஞ்சம் முந்திக்குவோமே’ என்றுதான் இந்த ‘எஸ்5’ல் இதயத் துடிப்பு மானிட்டர் எனும் சென்சாரை சேர்த்திருக்கிறது சாம்சங். ‘‘ஓரளவு துல்லியமாகவே இது இதயத் துடிப்பை கணக்கிடுகிறது’’ என்கிறார்கள் பரிசோதித்துப் பார்த்தவர்கள்.

* ‘ரிமோட் கன்ட்ரோல் இன்ஃப்ரா ரெட்தான்... என்னால அதை கன்ட்ரோல் பண்ண முடியும்’ என ‘எந்திர’னில் சொல்வாரே தலைவர்... அதே மாதிரி, சக்தி கொண்ட ஐ.ஆர் ப்ளாஸ்டர் என்ற சென்ஸாரும் இதில் உண்டு. டி.வி, டி.வி.டி ப்ளேயர், செட் டாப் பாக்ஸ் என ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் எல்லா கருவிகளையும் இந்த ஐ.ஆர் ப்ளாஸ்டர் கட்டுப்படுத்தும்.

* சாம்சங் தனது முந்தைய போன்களில் இல்லாத அளவுக்கு 2.5 ஜிகாஹெட்ஸ் வேகமுள்ள நான்கு கோர் ப்ராசஸரைப் பயன்
படுத்தியிருக்கிறது. ஆப்பிளின் இரண்டு கோர் ப்ராசஸர் இதன் பக்கத்தில் கூட வர முடியாது என்றாலும், ‘‘மற்ற ஆண்ட்ராய்டு போன்களோடு ஒப்பிட்டால், இது சாதாரண பாய்ச்சல்தான்’’
என்கிறார்கள்.

* முந்தைய கேலக்ஸி எஸ்4ல் கேமரா 8 மெகாபிக்சல்தான். ஆனால், எஸ்5 போனில் அது அப்படியே டபுள். 16 மெகாபிக்சல் கேமரா தரப்போகும் துல்லியத்தை வேறு எந்த ஆண்ட்ராய்டு போனோடும் ஒப்பிட முடியாது. நோக்கியா லூமியா போன்களோடுதான் ஒப்பிட வேண்டும். இன்னும் துல்லியமான 20 மெகாபிக்சல் கேமராவோடு ‘கேலக்ஸி எஸ் 5 ஜூம்’ என்ற மாடல் மிக விரைவில் வருகிறது என்கிறார்கள். ஆனாலும் 41 மெகா பிக்சல் வரை கொண்ட லூமி யாவை அடித்துக்கொள்ள வமுடியாது. பயந்தவை நடக்கவில்லை

*40 ஆயிரம் ரூபாய் ஆண்ட்ராய்டு போன்களில் சில சமயம் 200 ரூபாய் மெமரி கார்டுகளால் பிரச்னை ஏற்படுவதுண்டு. எனவே, ஆப்பிள் போனைப் போல, ‘மெமரி கார்டுகளே போட முடியாது’ என்று சாம்சங்கும் முடிவெடுக்குமோ என அனைவரும் பயந்திருந்தார்கள். அந்த வகையில் எஸ்5 தந்திருப்பது ஆறுதல். 16 அல்லது 32 ஜி.பி உள்ளார்ந்த மெமரி கொண்ட இந்த போன்களில் மெமரி கார்டு ஆப்ஷனும் உண்டு.

* அதே போல, ‘‘பேட்டரியை கழற்றி மாட்ட முடியாதபடி நிரந்தரமாய் ஃபிட் செய்துவிட்டால், போன் இன்னும் ஸ்லிம்மாக இருக்கும்’’ எனப் பேசி வந்தார்கள் சில புல்லுருவிகள். அதையும் பொய்யாக்கியிருக்கிறது எஸ்5.மைனஸ் மார்க் எவ்வளவு கழுவி ஊற்றினாலும், ‘நான் என் போனை பிளாஸ்டிக்கில்தான் செய்வேன்’ என அடம் பிடிக்கிறது சாம்சங். இந்தப் புது போனும் தவறி விழும் இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டிய ப்ளாஸ்டிக் அயிட்டம்தான்.

‘‘ஆப்பிளோடு மட்டும் இதை ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக்காதீங்க. கிட்டத்தட்ட இதே செயல்திறனோட ‘ஹெச்.டி.சி ஒன் எம் 8’னு ஒரு ஆண்ட்ராய்டு போன் அடுத்த மாசமே வருது. முழுக்க கன் மெட்டல்ல செஞ்ச செம போன் அது’’ என சாம்சங்கை சதாய்க்கிறார்கள் இளைஞர்கள்!

- கோகுலவாச நவநீதன்