facebook வலைப்பேச்சு



தமிழகத்தில் ‘சார்ஜ்’ ஏற்றிக் கொள்வதைவிட ‘லார்ஜ்’ ஏற்றிக் கொள்வது சுலபம்..!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

கற்கள் பதித்த ஜிமிக்கி ஆட
சொற்கள் எடுத்து அடுக்குகிறாள் மகள்.
காலம் கலைக்காத ஓவியம் ஒன்றை
வரைந்து வைத்தேன் நான்.
- தீபா சாரதி

புன்னகை தருபவர்களுக்கும் உண்டொரு புதைத்துக்கொண்ட மனம்
- பூ.கொ. சரவணன்

எனக்குள்
உறைகிறது
பிரபஞ்சம்
கீதா இளங்கோவன்
விற்ற வயல்
அடிக்கடி நினைவூட்டும்
வெற்று நெற்குதிர்.
- கி.சார்லஸ்

யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் வெற்றி பெறப் போகிறது - ஈவிகேஎஸ்.இளங்கோவன்
# ‘‘இந்த இடம்தான் த்ரிலிங்கா இருக்கும்... மனச தேத்திக்கோங்க. பயந்துறாதீங்க!’’
‘‘நாங்க பயப்படலை... நீ கதைய சொல்லு’’
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

இரவுகள் தரும் ஒரே நம்பிக்கை
விடியும் என்பதுதான்.
- ஆர்.சி.மதிராஜ்

மாணவச் செல்வங்களே... தொடர்ந்து மின்சாரம் இருந்தால் என்னவாகும்? உங்களை படி படி என்று படுத்தி எடுத்துவிட மாட்டார்களா! ஆகவேதான் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 10 மணி நேரமாக்கினேன். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்கள் பெற்றோரிடம் சொல்லி எனக்கே ஓட்டுப் போட வைக்க வேண்டும்... செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
- கார்ட்டூனிஸ்ட் முருகு

இறக்கைகளை விடவும் உயரப் பறக்க உதவுவது, உத்வேகமே.
- ராமலஷ்மி ராஜன்

கைக்குழந்தையைப் போல
உறங்காமல்
இன்னும் என்னைத்
தாலாட்டச் சொல்கிறது
புதிதாய் பிறந்த
இந்த வரி
- ராஜா சந்திரசேகர்

சிதறி விழுந்தன வார்த்தைகள்
வகுப்பறை எங்கும்
ஓடிப் பொறுக்க
குழந்தைகளால் முடியவில்லை
கை கட்டி, வாய்பொத்தி
கால்கள் மடக்கி...
- வர்த்தினி

ஆயிரங்களில் காசு கொடுத்து ஆண்ட்ராய்ட் போன் வாங்கலாம்... ஆப்பிள் போன் வாங்கலாம்... அதில் ஆசையாய் அழைத்துப் பேசும் அன்பான உறவுகளை அல்ல!
- சண்முக வடிவு

ஒருவருக்காக மாற்றிக் கொள்ளப்படும் குணம், ஒரு நாள் வெறியுடன் குரூரமாகத் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக் கொள்ளும்...
- பெ கருணாகரன்

இந்த நதிதான் எத்தனை அழகானது எனச் சொல்லி கைகாட்டி மகிழலாம் என்றால் நதியையும் காணவில்லை; மணலையும் காணவில்லை.
- சக்தி செல்வி

என்னதான் கடவுள் பக்தியோட சாமி கும்பிட்டாலும், விபூதி குங்குமம் பூச கண்ணாடி தேடுற ஆளுகதானே நாம...
- ஸ்ரீதேவி செல்வராஜன்

விசுவாசம் என்பதை அண்ணன்கள் ஓபிஎஸ்ஸிடமும், நத்தம் விஸ்வநாதனிடமிருந்தும் கற்றுக் கொள்வேன். ஓரமாக நிற்கும் அவர்களின் ரீயாக்ஷனைப் பாருங்க...
- வா.மணிகண்டன்

twitter வலைப்பேச்சு

@Rocket  _Rajesh 
குளிப்பதற்கு   ஒரு மனமிருந்தால் குளித்து
விடலாம், பல்லு விளக்குவதற்கு
ஒரு மனமிருந்தால் விளக்கி விடலாம். ஆனால் இருப்பதோ
ஒரு மனம்...

@vetsathish  
நான் வளரும்போது தூக்கி எறிந்த பொம்மைகளில் ஒன்று கடவுள்!

@mrithulaM   
துரோகங்கள் மட்டும் இல்லையென்றால் கண்ணீர் என்பது உடல் நோவுக்கானதாக மட்டுமே இருந்திருக்கலாம்!

@freeyavudu  
பேசுவதற்கு மனோபலம் அவசியம். பேசிவிட்டு தப்பிக்க பின்புலம் அவசியம்...

@saysatheesh   
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர ஜெ.பிரதமராக வேண்டும்: விந்தியா
(அனேகமா பெங்களூரு கோர்ட்டே கொண்டு வந்திரும். அந்த 4000 கோடியைத்தானே சொல்றீங்க?)
@senthilcp   
  பைலட்களை உடல் பரிசோதனை செய்வது போல் மனநிலையையும் ட்யூட்டிக்கு செல்லும் முன் பரிசோதிக்க வேண்டும்...
# தற்கொலை எண்ணம்

@manipmp   
யாருக்கு நீ விரும்பி ஓட்டுப் போடுகிறாயோ, ஐந்தாண்டுக்குப் பின்பு அவரையே நீ வெறுப்பாயாக..!

@saichithra   
‘இனி பழைய விஷயங்களை வைத்து யாரையும் ஜட்ஜ் செய்வதில்லை’ என்று முடிவு செய்தவுடன் ஒரு புது உலகம், உறவுகளுடன் கண் திறக்கிறது!

@Araikurai  
விடியலைப் போலவே அவள் ஞாபகங்களும்... ஒருபோதும் நின்று போனதே இல்லை.
@arivucs   
  பானிபூரி சாப்பிடுவதும் ஒரு வகை ஹிந்தி திணிப்புதான்!

@Prabu  _B
பாக்கெட் மாவுல தோச ஊத்தி, ஆச்சி இட்லி பொடி தொட்டுக்கிட்டு சாப்புடுறது. இதுக்குப் பேரு சமையலா :)

@thoatta   
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு 70 லட்சம் வரை செலவு பண்ணலாம்னு சொல்லியிருக்கே, அந்த தொகை ஒரு நாளுக்கா? ஒரு வாரத்துக்கா?

@writercsk   
மூன்றாவது அணியில் ஆம் ஆத்மியையும் இணைத்துக் கொண்டு இன்னும் வலுவாய் ஓட்டுகளைச் சிதற விடாமல் தேர்தலை சந்தித்திருக்கலாம். னீவீssமீபீ .

@RagavanG   
சுப்பிரமணிய சுவாமிய அந்த மலேசிய விமானத்துல ஏத்தி விட்டிருக்கலாம்... ம்ம்ம்!

 @thoatta   
தங்கம் விலை குறையல, ஆனா மீட்டிங்க்ல செம கும்பல், அப்படியும் சாதம் வேகல, அதுக்காக விமானி செஞ்சது சரின்னு சொல்ல முடியாது.

@karna  _sakthi 
இங்கு   எல்லாம் விமர்சனத்திற்கு உட்பட்டது,
சமயங்களில் காயங்களும்...

 @jroldmonk 
ஒவ்வொரு மரணமும் உணர்த்துகிறது... பூமாலை விலை எல்லாம் எவ்ளோ ஏறிப் போச்சு!

@japan  _raghu 
ரயிலில்
மெதுவாக யாராவது
இடித்தாலே
எட்டிப் பார்க்கும் கோபம்
இரவில்
உறங்குகையில் உதைக்கும்
மகளிடம் வருவதில்லை!

@IAnand  21 
மரம் வளர்த்தா மழை வரும்னு சொன்னா ஒரு பயகூட கேக்க மாட்டான்... பணம் வரும்னு நம்பிக்கிட்டு மணிப்ளான்ட் செடிய மாங்கு மாங்குனு வளர்க்கிறாங்க!

 @ravan  181 
நீ கடவுளை பல முறை
ஏமாற்றினாலும் அவர்
உன்னை ஒரே முறைதான் திருமணம் செய்வித்து
தண்டிக்கிறார் என்பதை
மறந்து விடாதே!