ஜோக்ஸ்



‘‘அப்பாடா... ஒரு வழியா கூட்டணி பேச்சுவார்த்தை

முடிஞ்சுது!’’‘‘ஸாரி
தலைவரே... தேர்தலே முடிஞ்சுட்டது!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘மப்புல தலைவர் உளற ஆரம்பிச்சிட்டாரா... என்னன்னு?’’
‘‘குற்றப் பத்திரிகையின் விலையை உயர்த்தினால் போராட்டம் வெடிக்கும்னு பேசிட்டார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘எலெக்ஷன் முடியற வரை வெளியூர்ல திருடறதை நிறுத்தி வச்சிருக்கியாமே... ஏன் கபாலி?’’
‘‘திருடிக் கொண்டு வரும்போது கறக்கும் படையினர் கண்ணுல பட்டுட்டா பாதி போயிடும்; பறக்கும் படையினர் கண்ணுல
பட்டுட்டா முழுசா போயிடும்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கிட்டே இருக்காரே...’’
‘‘போன வாரம் நடிகை சமந்தா கனவுல வந்தாங்களாம். அதிலிருந்தே இப்படித்தான் பேசுறார்..!’’
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘‘தலைவர் இன்னமும் குழப்ப மனநிலையோடுதான் இருக்கார்னு
எப்படிச் சொல் றே..?’’
‘‘234 எம்.பி தொகுதியிலயும் ஜெயிப்பேன்னு சொல்றாரே...’’
- வைகை.ஆறுமுகம், திருப்பூர்.

‘‘தலைவரே! வெளியே மாட்டியிருக்கிற டாக்டர் போர்டை உடனே உள்ளே எடுத்து வையுங்க...’’
‘‘ஏன்யா... என்னாச்சு?’’
‘‘இப்ப நீங்க ஆபரேஷன் பண்ணினீங்களே... அவர் பேஷன்ட்டு இல்லை! கூட்டணி பற்றி பேச
வந்தவர்.’’- வே.முருகேசன், சென்னை-88.

‘‘கபாலியை எதுக்கு கைது பண்றாங்க..?’’
‘‘நடுநிசியில சுவரேறிக் குதிச்சு தேர்தல் பிரசாரம் பண்ணினானாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.