தலைவர் லோக்கல் பாலிடிக்ஸை டச்
பண்ணவே மாட்டாராம்...’’
‘‘அதுக்காக, ‘டென்’மார்க் நாட்டை இரண்டு ‘ஃபைவ் மார்க்’கா பிரிக்கணும்னு அறிக்கை விடுறது நல்லவா இருக்கு..?’’
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

‘‘தலைவர் தேர்தல் சின்னமா ரூபாய் நோட்டைக் கேட்கறாரே... ஏன்?’’
‘‘அப்பதானே வாக்காளர்கள் கிட்ட தைரியமா நோட்டை நீட்டலாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்குக் கெடு
பிடியா இருக்கக் கூடாது...’’
‘‘என்ன விஷயம் தலைவரே..?’’
‘‘அட... என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட முடக்கிட்டாங்களே!’’
- வைகை.ஆறுமுகம், வழுதூர்.
தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கார்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘போஸ்ட் ஆபீசுக்குள்ளே போய், ‘தபால் ஓட்டுக்களை எனக்குப் போடுங்க’ன்னு
கேட்கறாரே!’’
- ஜே.கமலம்,
நெல்லை.
‘‘நம்ம தலைவர் ரொம்ப ஜொள்ளு பார்ட்டியா இருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘கூட்டணி பேச்சுவார்த்தை துவங்க... அனைத்துக் கட்சி மகளிரணித் தலைவிகள் குத்துவிளக்கு ஏத்தணும்னு சொல்றாரே..!’’
- நா.கி.பிரசாத், கோவை.
‘‘தலைவரே! பேச்சுக்கு நடுவுல... ‘ஓட்டு போடுவீங்களா?’ ‘பாடம் புகட்டுவீங்களா?’ன்னு ஜனங்க கிட்ட கேள்வியெல்லாம் கேட்காதீங்க..!’’
‘‘ஏன்யா... என்னாச்சு?’’
‘‘பேசி கூட்டிக்கிட்டு வந்ததுக்கு மேல, உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு தனியா ஒரு அமவுன்ட் கேட்கறாங்க!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.
ஆம் ஆத்மி கட்சியைப் பாத்து தலைவர் பயந்து போயிருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘வழக்கமா, மீட்டிங்ல செருப்பு வீசற மாதிரிதான் கனவு வருமாம். இப்பல்லாம் ‘விளக்குமாறு’ வீசற மாதிரி வருதாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.