விவாகரத்து செய்த பிரதமர்!
18 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கை. 3 குழந்தைகள். உலக அரங்கில் முக்கியமான தலைவர். இத்தனை அடையாளங்கள் இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவி சோஃபியாவை விவாகரத்து செய்கிறார்.  ஜஸ்டின் ட்ரூடோ 2015ம் ஆண்டிலிருந்து கனடாவின் பிரதமராக இருக்கிறார். ஸ்டைலிஷான சிரிப்பு, பேச்சு. இவருடைய தந்தையும் கனடாவின் பிரதமராக இருந்தவர்தான். ஜஸ்டினுக்கு இப்போது 51 வயதாகிறது. இவரது மனைவி சோஃபியாவுக்கு 48 வயது. காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் இப்போது பிரிகிறார்கள்.
‘பல அர்த்தமுள்ள கடினமான உரையாடல்களுக்குப்பிறகு நானும் சோஃபியாவும் பிரிவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நெருங்கிய குடும்பமாய் தொடர்வோம்...’ என்று குறிப்பிட்டிருக்கிறார், ஜஸ்டின்.
மூத்த மகனுக்கு 15 வயதாகிறது. இரண்டாவது மகளுக்கு 13 வயது ஆகிறது. கடைசி மகனுக்கு 9 வயதாகிறது.கனடாவில் பதவியிலிருக்கும் பிரதமர் மனைவியைப் பிரிவது இது முதல் முறையல்ல; ட்ரூடோவின் தந்தையும் பிரதமராக இருந்தபோது தன் மனைவியைப் பிரிந்து விவாகரத்துசெய்தவர்தான்!
காம்ஸ் பாப்பா
|