50 வயது ஹேண்ட்சம் மணமகன் தேவை!‘‘குடி, புகைப்பழக்கம் இருக்கக்கூடாது, வயது 56 - 60, சைவ உணவுப்பழக்கம், நன்றாக செட்டில் ஆகியிருக்க வேண்டும். முக்கியமாக அன்பான மனிதராக இருக்க வேண்டும்...’’ - ஆஸ்தா வர்மாவின் டுவிட்தான் கடந்த வாரம் ஹாட் வைரல்.
தனது அம்மாவுக்கு உரிய துணையைத் தேடிய ஆஸ்தாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அவரைப் பின்பற்றி பலரும் தனியாக உள்ள பெற்றோர்களுக்குத் துணையைத் தேட ஆரம்பித்துவிட்டனர். அப்படியான ஒரு சம்பவம்தான் இது.

மோகினி என்ற இளம்பெண் தனது அம்மாவுக்கு டுவிட்டர் மூலமாக வரன் தேடியிருக்கிறார். ‘‘வயது 50 - 60, நல்ல ஹேண்ட்சம்மாக இருக்க வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இருக்கக்கூடாது...’’ என்று டுவிட்டியதோடு ஆஸ்தா வர்மாவையும் டேக் செய்திருந்தார் மோகினி. இந்த டுவிட்களுக்கு ஐம்பது வயதைத் தாண்டிய சிங்கிள் ஹேண்ட்சம்கள் அப்ளிகேஷன்களைத் தட்டிவிட ஆரம்பித்துள்ளனர்!