உலகின் முதல் 108 எம்பி கேமரா போன்!சீனாவைச் சேர்ந்த ‘ஷியோமி’ நிறுவனம் ‘மீ நோட் 10’ என்ற புது மாடலை களமிறக்கப்போகிறது. 108 எம்பி கேமராவைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான். குறைந்த எடையில் ஸ்லிம்மான வடிவமைப்பு.
6.47 இன்ச்சில் மெகா டிஸ்பிளே. திரையில் துல்லியத்துக்கு 1080 X 2340 பிக்ஸல் ரெசல்யூசன், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 108 எம்பி முதன்மை கேமரா, இதனுடன் 20 எம்பியில் இரண்டாவதாக ஒரு கேமரா, 12 எம்பியில் மூன்றாவது கேமரா என பின்புற கேமராக்கள் அசத்துகின்றன.

இதுபோக 32 எம்பியில் செல்ஃபி கேமரா, 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து சார்ஜ் நிற்க 5170mAh பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது மீ நோட் 10. விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தொகுப்பு: த.சக்திவேல்