யார் இந்த குகேஷ்..



கடந்த 36 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் சுமந்திருந்த இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற கிரீடத்தை பறித்திருக்கிறார் குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயது வீரரான குகேஷ்தான் இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர்.  

யார் இந்த குகேஷ்?

அம்மா பத்மா, ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். அப்பா ரஜினிகாந்த், காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர். தனது 7 வயதில் பாஸ்கர் என்பவரிடம் செஸ் பயிற்சி பெற்றார். பின்னர் விஜயானந்த் என்பவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்த நாள் முதல் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளார் குகேஷ்.   
தனது 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற குகேஷ், பல சர்வதேச போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

இப்போது அஜர்பைஜானில் பெற்ற வெற்றியின் மூலம் உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தைத்தான் குகேஷ் தனது ரோல் மாடலாகக் கொண்டிருந்தார் என்பதுதான் ஹைலைட்!

காம்ஸ் பாப்பா