facebook வலைப்பேச்சு



உன் விழித் தெறிப்பிலும்
இதழ் சிரிப்பிலும் ஒளிந்து
விளையாடுதடி காதல்!
 பிஜி சரவணன்

லைக் பொத்தானோடு தொடங்கிய காதல், ப்ளாக் பொத்தானில் முடிவடைகிறது...
# தி ஃபேஸ்புக் காதல்ஸ்
- ஜேசு

பொய்களைச் சமைப்பது கடினம்; உண்ணுதல் எளிது. பின் செரிமானம் ஆவது அதனினும் கடினம்!
- வடுவூர் ரமா

வாழ்த்துகள், பாராட்டுகள், விசாரிப்புகள் உங்களுக்குக் கடமையாய் இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கான வாழ்வாகவும் அது இருக்கக்கூடும்!
- எழில் அருள்

மொட்டை
மரத்தில் துளிர்க்கிறது
வசந்த காலப் பறவை.
- ஐயப்ப மாதவன்

வித்தியாசமாக சிந்திப்பதற்கும் விதண்டாவாதமாக சிந்திப்பதற்கும் நூலளவே வித்தியாசம்.
- உமாநாத் செல்வன்

பறவைகளை வாங்கிக் கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட, ஒரு மரத்தை நடுங்கள்...
பறவைகள் தாமாகவே அதில் கூடு கட்டி நன்றாக வாழ்ந்துகொள்ளும்!
- இளையராஜா டென்ட்டிஸ்ட்

ஹிந்து அல்லாத மதத்தவர் கடைகளில் எந்த ஹிந்துவும் பொருட்களை வாங்க வேண்டாம் - ராமகோபாலன்
# அருமையான அறிவுரை! அப்படியே இஸ்லாமியர் வசிக்கும் நாட்டில் கிடைக்கும் பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொல்லிடுங்க, நல்லதா போகும்...
- வாசு முருகவேல்

நம்ம கையிலயிருந்து நாலு காசு விழுந்து நாம அதை குனிஞ்சி எடுக்கும்போதுதான் தெரியுது, நாம எவ்ளோ முன்னேறியிருக்கோம் என்று...
# தொப்பை
- மோகனசுந்தரம் மீனாட்சிசுந்தரம்

இந்த ஐடி கம்பெனில வேல பாக்குற மக்கள், வீட்லயாச்சும் ஐடி கார்ட கழட்டுவாய்ங்களா..?
# டவுட்ஸ் ஆஃப் தமிழன்
- மாகோ

ஒரு கேக் துண்டத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்பினைப் போல, உன் ப்ரியங்களைக் கடக்கிறேன்
- தீபா சாரதி

எருமையைக் கூட திறமை இருப்பவன்தான் மேய்க்க முடியும்!
- விஜய் சிவானந்தம்

ஏமாற்றப்படுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறுவதற்குக் காரணம், அதிக பட்ச அன்பாகவும் இருக்கலாம்!
- சக்தி செல்வி

விவசாயத்தில்
நஷ்டமடைந்து
தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயியின் மரணம்,
தாய்ப்பால் குடித்து
இறக்கும் குழந்தைக்கு
சமமானது
- எம்.ஜி.கன்னியப்பன்

இரவின் கடைசித்துளிகளை
இறகில் சேர்த்தெடுத்து கடைசிப் பறத்தலை முடித்து மறைவிடம் அடைகின்றன வௌவால்கள் அதிகாலையில்
- கலாப்ரியா

அழுத கண்ணில்
இருக்கும் கண்ணீர்
காய்வதற்குள்ளேயே
சிரிப்பதற்கு,
குழந்தைகளால்
மட்டுமே
முடிகிறது.
- பாரதி சுப்பராயன்

 twitter வலைப்பேச்சு

@aattukkutti   
பேச்சிலர்ஸ்
ரூம்ல லட்ச ரூபாய்
பணம் வச்சா கூட
அங்கனையேதான் இருக்கும், ஆனால் ஒரு சிகரெட்டதான் காப்பாத்த முடியல.

@meensmini   
  நண்பர்களும் சினிமா போலத்தான். அரிதாகவே அடுத்தொரு முறை பார்க்கலாம் என்ற ஆசை வருகிறது.

@maryjonesna   
எல்லோரும்  மாற்று வழியைத்தான் யோசிக்கிறார்களே ஒழிய, மாற்றும் வழியை யோசிப்பதில்லை!

@iamsubramani   
பிடித்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை... தொந்தரவு செய்பவர்களைப் பிடிப்பதில்லை!

@puthi  _yavan  
பொழுதுபோக்கிற்கே   சுழன்றுகொண்டிருக்கிறது பூமி...

@GVhere  
சிணிளி பதவில்லாம் பிரதமர் பதவி மாதிரியா... இல்ல, ஜனாதிபதி பதவி மாதிரியா?

@arattaigirl   
‘காத்திருப்பதெல்லாம் சுகம்’ என்று யாரோ கண்டிக்க கையாலாகாதவன்தான் சொல்லியிருக்க வேண்டும்:)

@thoatta   
காதலை ஏத்துக்கிறதுக்கே பொண்ணுங்க இந்த இழு இழுக்கிறதில்ல, ஆனா கூட்டணிய ஏத்துக்கிறதுக்கு கேப்டன் இழுக்கிற இழுவை இருக்கே... அய்யய்யோ!

@baamaran   
ஓடி வந்த காற்றை உட்காரச் சொல்லி விசிறி விடுகிறது மரக்கிளை!!
# தமிழேண்டா

@araathu   
கேலக்ஸி  மற்றும் ப்ளானட் பற்றி குழந்தைகள் கேட்கும் கேள்வி களைக் கடவுள் கேட்டால், பிரபஞ்ச அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கும்.

@sudarkodii    
எறும்புகளின் உலகம் மிகப்பெரியது!

@jeganjeeva  
நம்மூர்லதான்யா ஒன் மினிட்னா ஒன் மினிட் இல்ல. டென் மினிட்ஸ்னா டென் மினிட்ஸ் இல்ல!

@manipmp    
உலகின் மிகச்சிறிய ஜோக்: இரண்டு பெண்கள் அருகருகே அமைதியாய் அமர்ந்திருந்தனர்...

@sweathasun    
உன்னிடம்  கேட்கத் தயங்கும் கேள்விகளும் மொட்டவிழாத மௌனங்களுமாய் நிறைந்து கிடக்கிறது மேற்கில் நிழல் நீளும் என் காலைப்பொழுது!

@Senthilbds  
உற்று நோக்குங்கள்... எல்லா உதவிகளுக்குப் பின்னாலும் சுயநலம் நின்று கொண்டிருக்கும்.

@riyazdentist   
மெல்ல மெல்ல பனி விலகிச்செல்லும் காலம் ஆரம்பிச்சாச்சு. ஏ/சி, ரஸ்னா விளம்பரங்கள், தெருவோர தர்பூசணி ஸ்டால்கள்...
# பிப்ரவரி

@sambanths   
அம்மாவின் அன்பிற்கும் மகளின் குழந்தைத்தனத்திற்கும் எக்ஸ்பயரி டேட் இல்லை என்று எல்லா ஆண்களும் நம்புகிறார்கள்!

@senthilcp   
இந்தியாவில் வாக்கப்பட்டாலும் சோனியா இத்தாலியர்தான். பாகிஸ்தானுக்கு வாக்கப்பட்டாலும் சானியா மிர்சா இந்தியர்தான்!

@guzhali  _ 
உன் காதல் மழையில் நித்தம் நனைந்து சிலிர்க்கும் பசுமைமாறாக் காடு, என் வெட்கம்.