ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



சல்மான் கான்

இரண்டு விஷயங்களை வழக்கமாகச் செய்வார். ஒன்று, ஒரு பிரபல நடிகையின் சாயலில் இன்னொருவரைத் தேடிப் பிடிப்பது... இரண்டு, தனது அடுத்தடுத்த படங்களில் அவரையே ஜோடி ஆக்குவது!

 ஐஸ்வர்யா ராய் சாயலில் சினேகா உல்லால், கேத்ரினா சாயலில் ஜரீன் கான் என இந்தத் தேடலில் இப்போதைய அறிமுகம், டெய்ஸி ஷா. நடன உதவி இயக்குனராக, அயிட்டம் சாங் ஆடுபவராக  இருந்த டெய்ஸி, நடிகை ராணி முகர்ஜி சாயலில் இருப்பதைக் கண்டுபிடித்த சல்மான், தனது ‘ஜெய் ஹோ’ படத்தில் ஜோடி ஆக்கினார். சல்மானின் அடுத்த படத்திற்கு தீபிகா படுகோனே கால்ஷீட்  கிடைப்பது சிக்கலாகி இருப்பதால், டெய்ஸியே அவர் ஜோடி ஆகக்கூடும் என்கிறார்கள்.

பாலிவுட்டின்

லேட்டஸ்ட் சண்டைக்கோழிகள் கரீனா கபூரும் சோனாக்ஷி சின்ஹாவும்! ‘நடிப்பதை நிறுத்திவிட்டு சோனாக்ஷி கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம்’ என தொனிக்கும்விதத்தில், ‘‘சோனாக்ஷி  ஒரு நல்ல குடும்பத் தலைவியாக இருக்கத் தகுதியானவர்’’ என கரீனா சொல்ல, ‘‘கரீனா கிசுகிசு கட்டுரைகள் எழுதப் போகலாம்’’ என வாரியிருக்கிறார் சோனாக்ஷி.

ஒரு மாதம்

அவுட்டோர் ஷூட்டிங் போவதற்குமுன் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோரையும் கூட்டி, விருந்து கொடுத்து, போட்டோக்கள் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். இத்தனைக்கும் வெளிந £ட்டு ஷெட்யூல் இல்லை. இங்கிருக்கும் காஷ்மீர்தான். நீண்ட பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாதாம்!

பாடகி பியான்ஸ் நோல்ஸ்

தனது மேனேஜரை வேலையிலிருந்து நீக்கி விட்டார். புது மேனேஜர் வேறு யாருமில்லை... அவரது கணவரான ஜே இஸட் இப்போது மேனேஜர் பணியையும் சேர்த்துப் பார்க்கிறார். கணவரே  மேனேஜராக இருந்தால் குடும்பத்துக்கு அதிக நேரம் செலவிட முடியும் என்பதுதான் காரணம்!

புதுப்புது அழகு

சிகிச்சைகளை முயற்சித்துப் பார்ப்பதில் ஹாலிவுட் நடிகை வெய்ன் பால்ட்ரோவுக்கு இணை யாருமில்லை. அவரது லேட்டஸ்ட் ரிஸ்க், தேனீக்களை கடிக்க விட்டு செய்யப்படும் அழகு சிகிச்சையை எ டுத்துக் கொண்டது! ‘‘இதற்கு அபிதெரபி என்று பெயர். பிரமிடுகள் கட்டிய காலத்திலிருந்தே எகிப்தில் பிரபலமானது. சுருக்கங்களை நீக்க இது உதவுகிறது’’ என்கிறார் அவர்.