தனிக்குடித்தனம்!





‘‘அத்தே! நான் கல்யாணம் ஆகி இங்கே வந்து ஒரு வருசம் கூட ஆகல... அதுக்குள்ள தனிக்குடித்தனம் பேச்சை எடுக்கறீங்களே!’’ - வாட்டமாகப் பேசினாள் சுதா.

‘‘வந்த எட்டு மாசத்துலயே நீ நல்லா சமைக்கக் கத்துக்கிட்டியேம்மா! என் மகனை பொறுப்பா பார்த்துக்குவேனு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு! இதுக்கு அப்புறம் தனிக்குடித்தனம் போனால் என்ன?’’ கண்டிப்புடன் சொன்னாள் மாமியார் பூரணி.

‘‘மாமியார் - மருமக மத்தியில என்ன வாக்குவாதம்?’’ - கேட்டுக் கொண்டே வந்தார் மாமனார் சபாபதி.

‘‘மாமா! நீங்களாவது அத்தைகிட்ட சொல்லுங்க. அடுத்த மாசமே எங்களை தனிக்குடித்தனம் வைக்கணும்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்களாம்!’’ - அவரிடமே நியாயம் கேட்டாள் சுதா.

‘‘இப்ப நான் சொன்னா மட்டும் உன் மாமியார் கேக்கவா போறா? முப்பது வருஷத்துக்கு மேலா, அவ இதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கா. எண்பத்தஞ்சு வயசான என் அம்மாகிட்ட இருந்து தனிக்
குடித்தனம் போகணும்னு அவளுக்கு ஆசை! அதனால என் அம்மா உன் கூட இருக்கட்டும்... நானும் உன் மாமியாரும் அடுத்த மாசமே தனிக்குடித்தனம் போறோம். உன் மாமியாரோட ரொம்ப நாள் ஆசையை இப்பவாவது நிறைவேத்திக்கட்டுமே... விடு!’’ என்றார் சபாபதி.